புகாசிரோ அணை

ஆள்கூறுகள்: 35°42′28″N 138°56′54″E / 35.70778°N 138.94833°E / 35.70778; 138.94833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புகாசிரோ அணை
Fukashiro Dam
புகாசிரோ அணை is located in யப்பான்
புகாசிரோ அணை
Location of புகாசிரோ அணை
Fukashiro Dam in யப்பான்
நாடுசப்பான்
அமைவிடம்அட்சுகி
புவியியல் ஆள்கூற்று35°42′28″N 138°56′54″E / 35.70778°N 138.94833°E / 35.70778; 138.94833
நிலைசெயலில்
கட்டத் தொடங்கியது1996
திறந்தது2004
அணையும் வழிகாலும்
வகைகற்காரை ஈர்ப்பு வகை
உயரம்87 m (285 அடி)
நீளம்164 m (538 அடி)
கொள் அளவு200,000 m3 (261,590 cu yd)
வழிகால் அளவு790 m3/s (27,899 cu ft/s)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு6,440,000 m3 (5,221 acre⋅ft)
செயலில் உள்ள கொள் அளவு5,140,000 m3 (4,167 acre⋅ft)
நீர்ப்பிடிப்பு பகுதி43.3 km2 (17 sq mi)[1]

புகாசிரோ அணை (Fukashiro Dam) சப்பான் நாட்டின் இயமனாசி மாகாணத்தில் சகாமி நதி அமைப்பில் கட்டப்பட்டுள்ள ஓர் ஈர்ப்பு வகை அணையாகும். அட்சுகி நகருக்கு வடக்கே 11 கிமீ (7 மைல்) தொலைவில் புகாசிரோ அணை அமைந்துள்ளது. வெள்ளக் கட்டுப்பாடும் நீர் வழங்கலும் இந்த அணை கட்டுவதற்கான நோக்கங்களாகும். அணைக்கான திட்டங்கள் 1978 ஆம் ஆண்டில் வரையப்பட்டன. 1996 ஆம் ஆண்டில் திசை திருப்பும் நோக்கத்திற்கான சுரங்கங்களின் கட்டுமானம் தொடங்கியது. அணை 2001 ஆம் ஆண்டில் அதன் உயரத்தை எட்டியது. 2003 ஆம் ஆண்டு முதல் நீர்த்தேக்கம் நிரம்பத் தொடங்கியது.[2] 87 மீ (285 அடி) உயரமும், 164 மீ (538 அடி) நீளமும் கொண்ட அணை 2004 ஆம் ஆண்டில் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டது.[3] அணையின் பிரதான கசிவுப்பாதையானது வினாடிக்கு 790 கனமீட்டர் (27,899 கன அடி/நொடி) வெளியேற்ற திறன் கொண்ட ஐந்து உபரிநீர் திறப்புகளைக் கொண்டுள்ளது. கூடுதல் வெளியேற்றங்களைக் கையாள அணையின் துவாரத்தில் கூடுதல் திறப்புகளும் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Fukashiro Dam" (in Japanese). Dam Mania. பார்க்கப்பட்ட நாள் 14 August 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Fukashiro Dam" (in Japanese). DamSite. பார்க்கப்பட்ட நாள் 14 August 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Fukashiro Dam" (in Japanese). Japan Dam Handbook. பார்க்கப்பட்ட நாள் 14 August 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகாசிரோ_அணை&oldid=3418828" இலிருந்து மீள்விக்கப்பட்டது