உள்ளடக்கத்துக்குச் செல்

புகலிட நகைச்சுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புகலிட நகைச்சுவை என்பது சொந்த நாட்டில் இருந்து நாட்டுப் சிக்கல் காரணமாகவோ, அல்லது தொழில்வாய்ப்புக்கள் தேடியோ வெளிநாடுகளுக்கு புகலிடம் சென்ற தமிழர்களிடையே வழங்கும் நகைச்சுவையாகும். முற்றிலும் புதிய மொழிப், பண்பாட்டு சூழலில் சேர்ந்தியங்க முற்படும் போது சில அனுபவங்கள் நகைச்சுவையாக அமைகின்றன. உறவினர்கள் ஒன்றுகூடும் இடத்தில் இந்த நகைச்சுவைகள் பகிரப்படும். சொல்லுப்படும் விதம், சேர்க்கப்படும் அல்லது விடப்படும் கூறுகள், கேட்பவர்களைப் பொறுத்து நகைச்சுவையின் வீச்சு அமையும்.

எடுத்துக்காட்டுக்கள்

[தொகு]
  • யேர்மனியில் மாளிகைக் கடை ஒன்றுக்கு தமிழர் ஒருவர் கோழி வாங்க சென்றிருந்தார். இவர் அண்மையிதான் வந்திருந்தால், இவருக்கு சரியாக யேர்மன் மொழி தெரியவில்லை. எல்லா இடமும் தேடியயும், இவருக்கு கோழி இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால் கோழி எங்கே உள்ளது என்று யேர்மனில் கேக்கக் இவருக்குத் தெரியவில்லை. சற்றும் சளைக்காமல், கடையில் நின்ற உதவியாளரை முட்டைகள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு முட்டைகளைக் காட்டி, பறப்பது போல பாவனை செய்து, 'I want these moms" என்றாராம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகலிட_நகைச்சுவை&oldid=1452076" இலிருந்து மீள்விக்கப்பட்டது