பீஹ்மர்ன் பெல்ட் நிலையான இணைப்பு
பீஹ்மர்ன் பெல்ட் நிலையான இணைப்பு | |
---|---|
வரைபடம் டேனிஷ் -ஜெர்மன் நெடுஞ்சாலையிலுள்ள பீஹ்மர்ன் பெல்ட் நிலையான இணைப்பைக் காட்டுகிறது. | |
கடப்பது | பீஹ்மர்ன் பெல்ட் |
அதிகாரபூர்வ பெயர் | Femernbælt Link |
பராமரிப்பு | பீஹ்மர்ன் ஏ/எஸ் |
Characteristics | |
வடிவமைப்பு | சுரங்கப் பாதை |
History | |
கட்டத் தொடங்கிய நாள் | 2020[1] |
கட்டி முடித்த நாள் | 2028[2] |
பீஹ்மர்ன் பெல்ட் நிலையான இணைப்பு ( டேனிய மொழி: Femern Bælt-forbindelsen , இடாய்ச்சு மொழி: Fehmarnbelt-Querung ) என்பது ஒரு திட்டமிட்ட இன்னும் முடிக்கப்படாமல் உள்ள நீரில் மூழ்கிய சுரங்கப்பாதை ஆகும், இது டேனிஷ் தீவான லோலண்டை ஜேர்மன் தீவான பீஹ்மனுடன் இணைக்க முன்மொழியப்பட்டது, இது பரந்த பால்டிக் கடலை 18 km (11 mi) கடக்கிறது, வடக்கு ஜெர்மனிக்கும் லோலந்திற்கும் இடையே ஒரு நேரடி இணைப்பை வழங்குகிறது. பின்னர் நியூசிலாந்தில் உள்ள டேனிஷ் தீவு மற்றும் கோபன்ஹேகன் வரை விரிவு படுத்தபப்ட்டு, உலகின் மிக நீளமான சாலை மற்றும் ரயில் சுரங்கப்பாதையாக மாறியது.[3] மத்திய ஐரோப்பாவிற்கும் மற்றும் ஸ்காண்டிநேவியாவுக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாக இது விளங்குகிற்து. மேலும் டென்மார்க் மற்றும் ஜெர்மனி இடையிலான பயண நேரத்தை மகிழுந்து எனில் 10 நிமிடங்களிலும், தொடர்வண்டி எனில் ஏழு நிமிடங்களிலும் கடந்துவிடும் அளவுக்குக் குறைக்கிறது.
இந்த சுரங்கப்பாதையானது இதனைக் கடக்க,ராட்பி மற்றும் புட்கார்டனில் இருந்து முன்பு அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட படகு சேவைக்கு மாற்றாக அமைந்தது. தற்போது ஸ்கேன்ட்லைன்ஸால் இயக்கப்படுகிறது,
ஜெர்மன் மொழி வோகெல்ஃப்லுக்லைன் என்றும் டேனிய மொழியில் ஃபுகல்ஃப்ளக்ஸ்லின்ஜென் என்றும் இந்தப் பாதை அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ’பறவை பறக்கும் பாதை ’என்பதாகும். இரண்டு மொழிகளிலும்’ நேரடிப்பாதை ’எனப்பொருள்படும் இப்பெயர் ஆங்கிலத்தில் ’ காகம் பறக்கிறது’ என்ற பழமொழியோடு ஒத்துப் போவதாகும்..
பீஹ்மர்ன் தீவு, பீஹ்மர்ன் சவுண்ட் பாலம் மூலம் ஜெர்மனிய நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது, லோலாந்தானது ஒரு சுரங்கப்பாதை மற்றும் பாலங்கள் வழியாக ஃபால்ஸ்டர் தீவு வழியாக சீலேண்டுடன் இணைக்கப்பட்டுள்ளது,மேலும் பீஹ்மர்ன் தீவு ஓர்சண்ட் பாலம் வழியாக சுவீடன் நிலப்பரப்புடன் இணைகிறது.
கிரேட் பெல்ட், ஃபூனென் மற்றும் ஜட்லாண்ட் வழியாக, சீலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையே ஒரு நிலையான தொடர்பு இருந்தாலும்,பீஹ்மார்ன் பெல்ட் நிலையான இணைப்பு, ஹாம்பர்க்கிலிருந்து கோபன்ஹேகன், சுவீடன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு, நான்கு வழிச்சாலையான மோட்டார் பாதை மற்றும் இரண்டு மின்மயமாக்கப்பட்ட இரயில் தடங்கள் ஆகியவை மூலம் மிகவும் வசதியான மற்றும் விரைவான நேரடி சாலை மற்றும் ரயில் பாதையை வழங்கும்.
பாலம் தீர்வு
[தொகு]ஆரம்பத்தில், ஒரு பாலம் முன்மொழியப்பட்டது. 1990 களின் பிற்பகுதியில் இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து ஜேர்மன் மற்றும் டேனிஷ் போக்குவரத்து பொறியியலாளர்கள் பீஹ்மர்ன் நீரிணைக்குக் குறுக்கே ஒரு நிலையான இணைப்பு பாலத்தை தீவிரமாக திட்டமிட்டு, இத்திட்டத்துடன் நான்கு வழிச் சாலையும் இரண்டு மின்மயமாக்கப்பட்ட இரயில் தடங்களையும் இணைத்தனர்.இந்த தீர்வு பல ஆண்டுகளாக ஆலோசனையில் இருந்தது. அனைவராலும் விரும்பப்பட்ட இந்தநிலையான இணைப்பு பாலத் திட்டமானது விரிவான திட்டமிடல்கள் வரையறுக்கப்பட்டு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இப்பாலம் முதலில் 2018 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.[4]
ஆயினும், 2010 இன் பிற்பகுதியில், மேலதிக சாத்தியக்கூறு ஆய்வுகளுக்குப் பிறகு, இந்தப் பாலத்திற்குப் பதிலாக நீருள் மூழ்கிய சுரங்கப்பாதை அமைத்தால் குறைவான கட்டுமான அபாயங்களை ஏற்படுத்தும் என்றும் அதற்கான செலவு திட்டமிட்ட அதே செலவுதான் என்றும் டேனிஷ் செயல் திட்டத் திட்டமிடுபவர்கள் அறிவித்தனர்.[5]
இந்த பாலம் சுமார் மூன்று கம்பிவடம் தாங்கிய தூண்களுடன் 20 கிலோமீட்டர்கள் (12 mi) நீளமானது, பாலத்தின் கட்டமைப்பில் உள்ள நான்கு தூண்கள் அநேகமாக சுமார் 280 மீட்டர்கள் (920 அடி) உயரமானது. கடல் மட்டத்திற்கு மேலே செங்குத்தாக 65 மீட்டர்கள் (213 அடி) ஆகும். கடலுக்குச் செல்லும் கப்பல்கள் அதன் அடியில் செல்ல இப்பாலம் அனுமதிக்கிறது. இந்தப் பாலத்திற்கான இணைப்புகளின் வடிவமைப்பு டிஸ்ஸிங் + வெயிட்லிங் நிறுவனத்தால் அமைக்கப்பட்டது அதன் அழகியல் அம்சங்களையும் கட்டிடப் பொறியியல் அம்சங்கள் COWI மற்றும் Obermeyer நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக முன்மொழியப்பட்ட வடிவமைப்பு நான்கு மோட்டார் பாதைகளையும் இரண்டு ரயில் தடங்களையும் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ WiMi.SH (18 April 2017). "Meyers Fazit des heutigen Kopenhagen-Besuchs bei seinem Amtskollegen Olesen".
- ↑ "Denmark-Germany undersea Fehmarn tunnel gets go-ahead".
- ↑ "The Fehmarnbelt tunnel: delivering a new European link". 11 June 2018.
- ↑ Multi billion euro Denmark/Germany bridge link பரணிடப்பட்டது 2011-10-03 at the வந்தவழி இயந்திரம் trend-news
- ↑ "Railway Gazette: Fehmarn Belt tunnel preferred". பார்க்கப்பட்ட நாள் 2011-01-02.