உள்ளடக்கத்துக்குச் செல்

பீல்டு மார்ஷல் அசிம் முனிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீர்

ஃபீல்டு மார்ஷல் சையத் அசிம் முனீர் அகமது ஷா)[1] (பிறப்பு:1968) பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஆவார். அசிம் முனீர் தற்போது பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் (CDF), பாகிஸ்தான் இராணுவத்தின் 11வது இராணுவத் தலைமைப் படைத்தலைவராகவும் (COAS) ஒரே நேரத்தில் பணியாற்றி வருகிறார்.[2][3][4] இவர் இராணுவத் தலைமைப் படைத்தலைவராகவதற்கு முன்னர், குவாட்ட மாஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.[5] முன்னதாக சேவைகளிடை உளவுத்துறை மற்றும் இராணுவ புலனாய்வு இரண்டிற்கும் தலைமை தாங்கிய பாகிஸ்தானின் முதல் இராணுவத் தலைவர் அசீம் முனிர் ஆவார்.

பாக்கித்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மிர்பூர் மாவட்டத்தின் மங்களாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் (OTS) கேடட்டாக பயிற்சி பெற்றவர்.[6] ஒவர் 17 சூன் 2019 முதல் 6 அக்டோபர் 2021 வரை குஜ்ரன்வாலாவில் உள்ள XXX படையணிக்கு தலைமை தாங்கினார்.[7] இவர் ISI அமைப்பின் 28வது இயக்குநர் ஜெனரலாக 16 சூன் 2019 வரை பணியாற்றினார். 2025 மே 20 அன்று, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய இராணுவத்தித்திடமிருந்து பாகிஸ்தானை காப்பாற்றியதற்காக, பாகிஸ்தான் அரசு அசீம் முனிருக்கு ஃபீல்டு மார்ஷல் பதவி வழங்கி கௌரவம் செய்ததது[8].பாகிஸ்தானின் வரலாற்றில் ஃபீல்டு மார்ஷல் அயூப் கானுக்குப் பிறகு இந்தப் பதவியைப் பெற்ற இரண்டாவது நபர் அசீம் முனீர் ஆவார்.[9] [10]ஃபீல்டு மார்ஷல் பதவி பெறுபவர்கள் கழுத்துப் பட்டையில் 5 நட்சத்திரங்களை குத்திக் கொள்வார்கள்.

டிசம்பர் 4, 2025 அன்று அசிம் முனீர் , பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக (CDF) நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி இராணுவத் தலைமைத் தளபதியுடன் (COAS) ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படும் இரட்டைப் பொறுப்பாகும்.

உலக வங்கி கடன்

[தொகு]

பாகிஸ்தானின் வறுமையை போக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் செரீப் மற்றும் ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீர், ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் உதவியுடன் உலக வங்கியிடமிருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடன் பெற்று வந்தனர்[11].

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Power, John (7 May 2025). "How Pakistan's most powerful man provoked India's missile attack". The Spectator. Retrieved 10 May 2025. "Born in Rawalpindi in 1968 (...)"
  2. Farooq, Shahid (2025-12-04). "CDF Field Marshal Asim Munir — a brief profile". Geo News (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-12-05.
  3. "Lt General Asim Munir set to become next army chief, govt announces". thenews.com.pk (in ஆங்கிலம்). 24 November 2022. Archived from the original on 24 November 2022. Retrieved 2022-11-24.
  4. Raza, Syed Irfan; Asad, Malik (2025-12-04). "President appoints Field Marshal Munir as country's first chief of defence forces". Dawn (in ஆங்கிலம்). Retrieved 2025-12-04.
  5. Syed, Baqir Sajjad (16 August 2022). "Who will be the next army chief?". Dawn.
  6. "A brief look at General Asim Munir's career". Geo News. 29 November 2022. Archived from the original on 22 July 2023. Retrieved 22 July 2023.
  7. Reshuffle in army top brass பரணிடப்பட்டது 5 திசம்பர் 2022 at the வந்தவழி இயந்திரம் 17 சூன் 2019, The Nation.
  8. Hussain, Abid (21 May 2025). "Pakistan promotes army chief Asim Munir to field marshal: Why it matters". Al Jazeera (in ஆங்கிலம்). Retrieved 2025-11-11.
  9. "Pakistan promotes army chief to field marshal, 2nd since 1947". Anadolu Agency. 20 May 2025. https://www.aa.com.tr/en/asia-pacific/pakistan-promotes-army-chief-to-field-marshal-2nd-since-1947/3574203#. 
  10. "What does the Field Marshal rank awarded to Gen Munir mean?". The News International (in ஆங்கிலம்). 20 May 2025. Retrieved 2025-05-21.
  11. World Bank makes 10-year plan with Pakistan for $20 billion in funding