உள்ளடக்கத்துக்குச் செல்

பீர் பாஞ்சால் கணவாய்

ஆள்கூறுகள்: 33°37′48″N 74°31′12″E / 33.629931°N 74.519968°E / 33.629931; 74.519968
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீர் பாஞ்சால் கணவாய்
பீர் கி காலி
பீர் பாஞ்சால் கணவாய்
ஏற்றம்3,485 மீ (11,434 அடி)
Traversed byமுகலாயச் சாலை
அமைவிடம்சம்மு காசுமீர், இந்தியா
மலைத் தொடர்பீர் பாஞ்சல் மலைத்தொடர்
ஆள்கூறுகள்33°37′48″N 74°31′12″E / 33.629931°N 74.519968°E / 33.629931; 74.519968
பீர் பாஞ்சால் கணவாய் is located in ஜம்மு காஷ்மீர்
பீர் பாஞ்சால் கணவாய்
சம்மு காசுமீர் பகுதியில் கண்வாயின் அமைவிடம்

பீர் கி காலி என்றும் அழைக்கப்படும் பீர் பாஞ்சால் கணவாய் (Pir Panjal Pass),[1] இந்தியாவின் சம்மு காசுமீரிலுள்ள பீர் பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு மலைப்பாதையும் மற்றும் சுற்றுலாத் தலமும் ஆகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கை ஜம்முவின் ரஜௌரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுடன் முகலாயச் சாலை வழியாக இணைக்கிறது. இது முகலாயச் சாலையில் 3,490 மீ (11,450 அடி) உயரத்தில் மிக உயரமான இடமாகும். மேலும் இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென்மேற்கில் அமைந்துள்ளது.[2][3]

ஷேக் அகமது கரீம் என்ற சூபித் துறவியின் ஆலயம்

பெயர்

[தொகு]

பீர் பஞ்சால் கணவாய் காஷ்மீர பண்டிதரான கல்ஹானர் எழுதிய கவிதை நூலான இராஜதரங்கிணியில் ‘பாஞ்சாலதேவன் ’என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ‘பாஞ்சாலர்களின் தெய்வம்’ என்ற பொருள். பாஞ்சாலம் என்பது மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ( தற்போதைய உத்தரப் பிரதேசம் ) ஒரு இராச்சியமாக்கும். மற்ற மரபுகள் மகாபாரதப் பகுதிகளை மேற்கு பஞ்சாப் மற்றும் தெற்கு காஷ்மீரில் வைக்கின்றன. சக்தி-சங்கம தந்திரம் என்னும் நூலில் விவரிக்கப்பட்டுள்ள புவியியலை இந்திய வரலாற்றாசிரியர் தினேஷ்சந்திர சர்கார் பகுப்பாய்வு செய்து உண்மையைக் கண்டறிந்தார்.[4]

உயர்ந்த மலைப்பாதைகள் எப்போதும் தெய்வங்களாகக் கருதப்பட்டன அல்லது தெய்வங்களுடன் தொடர்புடையவை என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆரல் இசுடெயின் கூறுகிறார். இந்தப் பகுதி இஸ்லாமியமயமாக்கப்பட்ட பிறகும், முஸ்லிம் துறவியான ‘பீர்’ என்ற கருத்தை தெய்வத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தி இந்தப் பழக்கவழக்கங்கள் தொடர்ந்தன.[5]

பீர் பாஞ்சால் கணவாய் என்ற பெயர் முழு மலைத்தொடருடனும் ( பீர் பஞ்சால் மலைத்தொடர் ) பிணைக்கப்பட்டுள்ளது.[6] சமீப காலங்களில், "பாஞ்சல்" என்ற சொல் மலைத்தொடருக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கணவாய் வெறுமனே பீர் கி கலி (பீர் கணவாய்) என்றும் அழைக்கப்பட்டது.[7] இந்த இடம் துறவி மிர் சையித் அலி அமதானி மற்றும் மற்றொரு துறவி ஷேக் அகமது கரீம் ஆகியோருடன் தொடர்புடையது.

விளக்கம்

[தொகு]

பீர் பாஞ்சால் கணவாயை, பீர் கி காலி என்ற மேற்கு நுழைவாயிலுக்கும், கிழக்கு முனையில் உள்ள அலியாபாத் சராய் (உயரம்: 3115 மீட்டர்) என்ற வரலாற்று சிறப்புமிக்க தங்குமிடத்திற்கும் இடையில் செல்லலாம். பீர் பாஞ்சல் நீரோடை என்ற ஓர் நீரோடை பள்ளத்தாக்கு வழியாகச் சென்று, கிழக்கு நோக்கிப் பாய்ந்து, சோபியான் மாவட்டத்தில் இராம்பி ஆரா ஆறாக உருவெடுத்து ஜீலம் ஆற்றின் துணை ஆறாகிறது. கணவாய் வழியாக செல்லும் பழைய பாதை ஓடையின் தெற்குப் பக்கமாகவே இருந்தது என்றும், தெற்கே ஹஸ்திவஞ்ச் என்ற செங்குத்தான பாறையைக் கடப்பது கடினமாக இருந்ததால் முகலாயர்கள் அதை வடக்குப் பக்கமாக மாற்றினர் என்றும் அறிஞர் மொகிபுல் ஹசன் கூறுகிறார்.[8] 2005 மற்றும் 2009 க்கு இடையில் கட்டப்பட்ட நவீன " முகலாயச் சாலை ", முகலாயர்கள் பயன்படுத்திய பாதைக்கு அருகில் உள்ளது. இருப்பினும் அது ஒத்ததாக இல்லை.

பீர் கி காலியின் மேற்கில், பாறைகள் செங்குத்தாக ஒரு பள்ளத்தாக்கில் இறங்குகின்றன. இது வடக்கிலிருந்து பாயும் பூஞ்ச் ஆற்றுடன் இணையும் மற்றொரு மலை ஓடையைக் கொண்டு செல்கிறது. பக்ரம்கலா (அசல் பெயர்: பைரவ்கலா) என்ற மலை கிராமத்தில் பள்ளத்தாக்கு முடிவடைகிறது.[9] சீக்கிய வட்டாரங்கள் இந்தக் கணவாயை "பக்ரம்கலா கணவாய்" என்றே பெயரிடுகின்றன.[10]

நவீன முகலாயச் சாலை, வடக்கே உள்ள மலைப்பகுதிகளைப் பின்பற்றுவதன் மூலம் செங்குத்தான சரிவைத் தவிர்க்கிறது. இது பக்ரம்கலாவின் மேற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள பஃப்லியாஸ் என்ற நகரத்தில் முடிகிறது. அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை 144ஏ வடமேற்கில் பூஞ்ச் மற்றும் தெற்கே ரஜௌரியுடன் இணைகிறது.

பீர் கி காலியில், குளிர்காலத்தில் இரவு வெப்பநிலை பெரும்பாலும் -15°C க்கும் கீழே குறையும். இது முகலாயச் சாலையில் உள்ள மிக உயரமான இடமாகும். பீர் கி காலி, சோபியானில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், பூஞ்சிலிருந்து 80 கி.மீ தொலைவிலும் உள்ளது.[11][12]

வரலாறு

[தொகு]

காஷ்மீர் பள்ளத்தாக்கின் முக்கிய கணவாய்களில் ஒன்றாக பீர் பாஞ்சால் கணவாய் இருந்ததாகவும், அதன் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் வரலாற்றாசிரியர் மொகிப்புல் ஹசன் கூறுகிறார்.[13] காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஹிராபூரை (நவீன ஹிர்போரா) ரஜௌரியுடன் கணவாய் வழியாக இணைக்கும் ஒரு பாதை பண்டைய காலங்களிலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்ததாக அறியப்படுகிறது. சுல்தான்களின் காலத்தில் இது பீம்பர் வரை நீட்டிக்கப்பட்டதாகத் தெரிகிறது.[14]

காஷ்மீர் பள்ளத்தாக்கைக் கைப்பற்றிய பிறகு, பேரரசர் அக்பர் அந்தப் பாதையை இலாகூரிலிருந்து காஷ்மீர் வரை நீண்டுகொண்டிருக்கும் 'ஏகாதிபத்தியச் சாலையாக' வலுப்படுத்தினார். [8] நவீன காலத்தில், இந்தப் பாதை 'முகலாயச் சாலை' என்று குறிப்பிடப்படுகிறது.

சீக்கியப் பேரரசர் மகாராஜா இரஞ்சித் சிங், 1814 ஆம் ஆண்டு துராணிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீர் பள்ளத்தாக்கின் மீது ஓரளவு பீர் பாஞ்சால் கணவாய் வழியாக படையெடுப்பைத் தொடங்கினார். அவர் படைகளை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார். ஒன்று திவான் ராம் தயாளின் தலைமையில் பீர் பாஞ்சால் கணவாய் வழியாகவும், மற்றொன்று தோசா மைதானம் வழியாக தனது தலைமையிலும் தாக்குதலிலும் ஈடுபட்டார். இராம் தயாள் பீர் பாஞ்சால் கணவாய் வழியாகச் சென்று, பாரமுல்லாவை அடைந்து, தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இருப்பினும், இரஞ்சித் சிங் தோசா மைதானத்தில் துராணிப் படைகளின் பாதுப்புகளை உடைக்க முடியவில்லை. அங்கு அவர் ரஜௌரியின் ராஜா ராஜா அகர் கானின் எதிர்ப்பை எதிர்கொண்டார். இறுதியில் இரஞ்சித் சிங் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[15] பின்னர், மீண்டும் 1819 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது படையெடுப்பில், அனைத்துப் படைகளும் தோசா மைதானம் வழியாக அனுப்பப்பட்டு, துராணி படைகளைக் கைப்பற்றின.[16]

அலியாபாத் சராய்

[தொகு]
தற்போதைய முகலாயச் சாலையிலிருந்து பின்புறத்திலிருந்து தெரியும் அலியாபாத் சராய் வழி நிலையம்.

அலியாபாத் சராய் என்பது பீர் பாஞ்சால் கணவாயில் உள்ள ஒரு ஓய்வு இல்லமாகும். இது 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பேரரசர் ஜஹாங்கீரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது முகலாயச் சாலையில் இலாகூர் மற்றும் ஸ்ரீநகர் இடையே கட்டப்பட்ட 14 நிறுத்துமிடங்களில் ஒன்று. உள்ளூர் தலைவர்களின் உதவியுடன், அலி மர்தான் கான் என்ற ஈரானியப் பொறியாளர் இதன் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். இந்தப் பாரம்பரிய கட்டிடத்தின் பாதுகாப்பை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. மேலும் இது சமீப காலங்களில் உள்ளூர் மேய்ப்பர்களால் கால்நடைகளுக்கான கொட்டகையாகப் பயன்படுத்தப்படுகிறது.[17][18]

அசல் முகலாயச் சாலை அலியாபாத் சராய் ஓய்வு இல்லத்திற்கு முன்னால் சென்றது. தற்போதையது அதன் பின்னால், அதிக உயரத்தில் செல்கிறது.

உள்ளூர் பாரம்பரியம் புனித மிர் சையித் அலி ஹமதானியை [19] பீர் கி காலியுடன் இணைக்கிறது. எழுதப்பட்ட பதிவுகள், ஷேக் அகமது கரீம் என்ற பீர், பேரரசர் ஜஹாங்கிரின் காலத்தில் பீர் கி காலியில் வாழ்ந்து தியானம் செய்ததாகக் குறிப்பிடுகின்றன. அவர் இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறினார். பீர் கி காலியை கடவுளின் இடமாகக் கருதினார். மேலும் வழிப்போக்கர்கள் அனைவரும் அதை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பேரரசர் ஜஹாங்கிர் இவரது கட்டளைகளை புறக்கணித்ததாகவும், ஆனால் ஷாஜகானும் ஔரங்கசீப்பும் அவற்றைப் பின்பற்றியதாகவும் பதிவுகள் கூறுகின்றன.[11]

பீர் தியானம் செய்யும் இடத்தைக் குறிக்க பீர் கி காலியில் ஒரு சன்னதி உள்ளது. அதன் உள்ளே அவரது கைரேகையுடன் கூடிய ஒரு கல் இருப்பதாக சிலர் நம்புகிறார்கள்.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bloeria, Sudhir S. (2000), Pakistan's Insurgency Vs India's Security: Tackling Militancy in Kashmir, Manas Publications, p. 18, ISBN 978-81-7049-116-3: "The Pir Panjal Pass also known as Pir Ki Gali, is the point over which the famous Mughal Route crosses the Range."
  2. Kapadia, Harish (1999), Across Peaks & Passes in Ladakh, Zanskar & East Karakoram, Indus Publishing, p. 23, ISBN 978-81-7387-100-9
  3. "South Kashmir: Fresh snowfall at Pir ki Gali closes Mughal road". Kashmir Reader. 1 November 2018 இம் மூலத்தில் இருந்து 23 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190423033943/https://kashmirreader.com/2018/11/01/south-kashmir-fresh-snowfall-at-pir-ki-gali-closes-mughal-road/. 
  4. Sircar, Dineschandra (1971), Studies in the Geography of Ancient and Medieval India, Motilal Banarsidass, pp. 204–205, ISBN 978-81-208-0690-0
  5. Stein 1900, note 46, pp. 397–398.
  6. Kohli, M. S. (2002). Mountains of India : tourism, adventure and pilgrimage. New Delhi: Indus. ISBN 81-7387-135-3. கணினி நூலகம் 53249912.
  7. "Snowfall hampers efforts to restore Mughal Road". India Today. 24 December 2017. https://www.indiatoday.in/pti-feed/story/snowfall-hampers-efforts-to-restore-mughal-road-1115405-2017-12-24. 
  8. 8.0 8.1 Hasan 1959, ப. 24.
  9. Stein 1900, ப. 398.
  10. Gupta 1991, ப. 125.
  11. 11.0 11.1 11.2 Irfan, Shams (15 July 2014). "History and Mystery of Peer ki Gali". Kashmir Life இம் மூலத்தில் இருந்து 24 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200224065919/https://kashmirlife.net/history-and-mystery-of-peer-ki-gali-62111/. 
  12. "Peer ki Gali". J&K Tourism Development Corporation. Retrieved 21 July 2019.
  13. Hasan 1959, ப. 22.
  14. Hasan 1959, ப. 23–24.
  15. Gupta 1991, ப. 125–127.
  16. Gupta 1991, ப. 128–129.
  17. Akhter, Tazeem (14 October 2012). "A Peek into the Aliabad Sarai". Kashmir Times. http://www.kashmirtimes.in/newsdet.aspx?q=19512. 
  18. "District Census Handbook – Shupiyan" (PDF). censusindia.gov.in. Census of India. 2011.
  19. tafatul arfin manucript

நூல் ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • The original Mughal Route partly marked on OpenStreetMap: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீர்_பாஞ்சால்_கணவாய்&oldid=4249938" இலிருந்து மீள்விக்கப்பட்டது