உள்ளடக்கத்துக்குச் செல்

பீரம் அர்சவர்தன் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீரம் அர்சவர்தன் ரெட்டி
தெலங்காணா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2018 - 2023
முன்னையவர்சூபல்லி கிருஷ்ணா ராவ்
பின்னவர்சூபல்லி கிருஷ்ணா ராவ்
தொகுதிகொல்லாபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 ஆகத்து 1978 (1978-08-31) (அகவை 48)[1]
சிங்கோட்டம், கொல்லாப்பூர், நாகர்கர்னூல் மாவட்டம், தெலங்காணா
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி
பிற அரசியல்
தொடர்புகள்
தெலுங்கு தேசம் கட்சி, ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி, இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்விஜயா
பெற்றோர்பீரம் இலட்சுமா ரெட்டி, புச்சம்மா

பீரம் அர்சவர்தன் ரெட்டி (Beeram Harshavardhan Reddy, பிறப்பு: 31 ஆகத்து 1978) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தெலங்காணா சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 2018ஆம் ஆண்டு நடைபெற்றத் தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தலில் கொல்லாபூர் சட்டமன்றத் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

அர்சவர்தன் ரெட்டி 1978 ஆகத்து 31 அன்று இலட்சுமா ரெட்டி மற்றும் புச்சம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் 2001ஆம் ஆண்டு உசுமானியா பல்கலைக்கழகத்தின் இளநிலை கட்டிடக்கலையினையும் சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டப் படிப்பைபினையும் முடித்து, 10 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

அர்சவர்தன் ரெட்டி தனது அரசியல் பயணத்தை தெலுங்கு தேசம் கட்சியிலும், பின்னர் சில காலம் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியிலும் கழித்தார். 2014ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்தார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு, தெலங்காணா இராட்டிர சமிதி வேட்பாளரான சூபல்லி கிருஷ்ணா ராவிடம் தோல்வியடைந்தார். பின்னர் 2018ஆம் ஆண்டு நடைபெற்றத் தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தலில் கொல்லாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பீரம் அர்சவர்தன் ரெட்டி, 2020-இல் தெலங்காணா இராட்டிர சமிதி கட்சியில் இணைந்தார்.[2][3][4]

தேர்தல் வரலாறு

[தொகு]
தேர்தல் ஆண்டு பதவி தொகுதி கட்சி முடிவு எதிர்த்துப் போட்டியிட்டவர் & கட்சி
2014 சட்டமன்ற உறுப்பினர் கொல்லாபூர் இந்திய தேசிய காங்கிரசு
தோல்வி சூபல்லி கிருஷ்ணா ராவ் பாரத இராட்டிர சமிதி
2018 சட்டமன்ற உறுப்பினர் கொல்லாபூர் வெற்றி சூபல்லி கிருஷ்ணா ராவ்[5]
2023 சட்டமன்ற உறுப்பினர் கொல்லாபூர் தெலுங்கானா இராட்டிர சமிதி
தோல்வி சூபல்லி கிருஷ்ணா ராவ் இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ The Hans India (31 August 2019). [(https://web.archive.org/web/20210623080559/https://www.thehansindia.com/telangana/mla-beeram-harsha-vardhan-celebrates-birthday-in-kollapur-560003) "MLA Beeram Harsha Vardhan celebrates birthday in Kollapur"] (in en). [www.thehansindia.com](https://www.google.com/search?q=https%3A%2F%2Fwww.thehansindia.com) [(https://www.thehansindia.com/telangana/mla-beeram-harsha-vardhan-celebrates-birthday-in-kollapur-560003) இம் மூலத்தில் இருந்து] 23 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. (https://web.archive.org/web/20210623080559/https://www.thehansindia.com/telangana/mla-beeram-harsha-vardhan-celebrates-birthday-in-kollapur-560003). பார்த்த நாள்: 23 June 2021.
  2. ↑ "Another Telangana Cong MLA to join ruling TRS". Business Standard. 20 March 2019 இம் மூலத்தில் இருந்து 30 August 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250830143021/https://www.business-standard.com/article/pti-stories/another-telangana-cong-mla-to-join-ruling-trs-119032000554_1.html.
  3. ↑ "TRS to rely on ex officio members in Kollapur" (in en). The New Indian Express. 27 January 2020. https://www.newindianexpress.com/states/telangana/2020/Jan/27/trs-to-rely-on-ex-officio-members-in-kollapur-2095040.html.
  4. ↑ "Telangana: Ahead of civic polls, infighting plagues TRS". The Times of India. 8 January 2020 இம் மூலத்தில் இருந்து 30 August 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250830143445/https://timesofindia.indiatimes.com/city/hyderabad/ahead-of-civic-polls-infighting-plagues-trs/articleshow/73145734.cms.
  5. ↑ "Four TRS ministers including Assembly Speaker lose their seats in Telangana" (in en). The News Minute. 12 December 2018 இம் மூலத்தில் இருந்து 30 August 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250830143646/https://www.thenewsminute.com/telangana/four-trs-ministers-including-assembly-speaker-lose-their-seats-telangana-93241.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீரம்_அர்சவர்தன்_ரெட்டி&oldid=4618145" இலிருந்து மீள்விக்கப்பட்டது