பீம்பெர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீம்பெர் மாவட்டம்
ضلع بھمبر
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியில் பீம்பெர் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியில் பீம்பெர் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடுபாகிஸ்தான்
பிரதேசம்ஆசாத் காஷ்மீர்
கோட்டம்மீர்பூர்
தலைமையிடம்பீம்பெர்
அரசு
 • வகைDistrict Administration
பரப்பளவு
 • மொத்தம்1,516 km2 (585 sq mi)
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்420,624
 • அடர்த்தி277/km2 (720/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது
 • பேச்சு மொழிகள்பஞ்சாபி மொழி, பகாரி மொழி, தோக்ரி மொழி
தாலுகாக்கள்3

பீம்பெர் மாவட்டம் (Bhimber District), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பீம்பெர் நகரம் ஆகும். 1,515 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2017 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 4,20,624 ஆகும்.[1]அலுவல் மொழி உருதுவாக இருப்பினும், பெரும்பான்மையான மக்கள் பஞ்சாபி மொழி, பகாரி மொழி மற்றும் தோக்ரி மொழிகளை பேசுகின்றனர்.[2][3]

அமைவிடம்[தொகு]

பீம்பெர் மாவட்டத்தின் வடக்கில் கோட்லி மாவட்டம், கிழக்கில் இந்தியாவின் ரஜௌரி மாவட்டம், தெற்கில் குஜராத் மாவட்டம், மேற்கில் மிர்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

பீம்பெர் மாவட்டம் 3 தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது[4]அவைகள்:

  • பீம்பெர் தாலுகா
  • பர்னாலா தாலுகா
  • சமாக்னி தாலுகா

தட்ப வெப்பம்[தொகு]

கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பம் 45 பாகை செல்சியசும், குளிர்காலத்தில் 1 பாகை செல்சியஸ் வெப்பமும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census 2017: AJK population rises to over 4m" (in en-US). The Nation. http://nation.com.pk/national/27-Aug-2017/census-2017-ajk-population-rises-to-over-4m. 
  2. Statistical Year Book 2020. Muzaffarabad: AJ&K Bureau Of Statistics. பக். 140. https://www.pndajk.gov.pk/uploadfiles/downloads/Statistical%20Year%20Book%202020.pdf. பார்த்த நாள்: 3 March 2022. 
  3. Shakil, Mohsin (2012). "Languages of Erstwhile State of Jammu Kashmir (A Preliminary Study)". p. 12.
  4. "Tehsils of Bhimber District on AJK map". ajk.gov.pk. AJK Official Portal. பார்க்கப்பட்ட நாள் 17 November 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீம்பெர்_மாவட்டம்&oldid=3606742" இலிருந்து மீள்விக்கப்பட்டது