பீமாப்பள்ளி
பீமாப்பள்ளி | |
---|---|
புறநகர் | |
![]() | |
ஆள்கூறுகள்: 8°29′45″N 76°57′16″E / 8.495945°N 76.954381°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1.19 km2 (0.46 sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூரவமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 695008 |
தொலைபேசி குறியீடு | 0471 |
வாகனப் பதிவு | KL-01 |
கட்டடக்கலைஞர் | ஜி. கோபால கிருஷ்ணன்[1] |
பீமாப்பள்ளி (Beemapally) என்பது கேரளத்தின்,திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியாகும். இங்கு தெய்வீக சக்தி இருப்பதாக நம்பப்படும் பெண்ணான சையதுன்னிசா பீமா பீவி, அவரது மகன் சையது சுஹாதா மஹீன் அபுபக்கர் ஆகியோரின் கல்லறைகள் அமைத்துள்ள பீமாபள்ளி தர்கா ஷரீஃப் என்ற பள்ளிவாசலுக்காக பீமாப்பள்ளி பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் பீமா பீவியின் நினைவுநாளான்று சிறப்பான திருவிழா நடைபெறுகிறது, இதில் அனைத்து சமயங்களையும், சாதிகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர். பீமாபள்ளி பள்ளிவாசலானது அதன் உயர்ந்த மினாரெட்ட்டுகளுடன், அழகான முகப்புடன் விளங்கும் ஒரு கட்டிடமாகும். நபிகள் நாயகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் அதிசய சக்திகளைக் கொண்ட பெமா பீவியின் கல்லறை இந்த பள்ளிவாசலில் முக்கிய ஈர்ப்பாகும். அனைத்து சமய மக்களும் பீமாப்பள்ளியில் பிரார்த்தனை செய்ய வருகிறார்கள்.
சந்தனக்கூடு விழா[தொகு]
பீமாப்பள்ளி பள்ளிவாசலில் நடக்கும் பிரபலமான வருடாந்திர உருஸ் விழாவில் அனைத்து தரப்பு யாத்ரீகர்களும் கலந்துகொள்கின்றனர். சையதுன்னிசா பீமா பீவியின் இறந்த நாளைக் குறிக்கும் நினைவு விழாவானது, ஜமா துல் அக்பரின் முதல் நாளில் தொடங்கி அடுத்த பத்து நாட்களுக்கு தொடர்கிறது. [2] பெரியவர்கள் மற்றும் பிற பக்தர்களின் முன்னிலையில் பள்ளிவாசலில் விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பக்தர்கள் பூக்களாலும் ஊதுவத்திகளாலும் அலங்கரிக்கப்பட்ட பானைகளில் பணத்தை எடுத்துச் செல்கின்றனர். பானையின் வாய் வெள்ளைத் துணியால் கட்டபட்டு, அதன் கழுத்தில் ஒரு மாலை அணிவிக்கபடுகிறது. பானைகள் சந்தனக் குழம்பால் பூசப்படுகின்றன. அதனால்தான் திருவிழாவை சந்தனக்குடம் என்று அழைக்கின்றனர். பீமபள்ளி பள்ளிவாசல் விழாவின் போது பல கலை வடிவங்கள் பள்ளிவாசலில் நிகழ்த்தப்படுகின்றன. சமய விவாதங்கள் பல நடத்தப்படுகின்றன மற்றும் இஸ்லாமிய பக்தி பாடல்கள் மசூதிக்கு வெளியே பாடபடுகின்றன. சந்தனகுடம் மகோத்சவத்தின் இறுதி நாளில், பீமா பீபியின் கல்லறையிலிருந்து கொடி இறக்கபடுகிறது; யானைகளைக்கொண்டு ஒரு பெரிய ஊர்வலத்துடன், பஞ்ச வத்ய இசை நிகழ்த்தபடுகிறது.
குறிப்புகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- கேரள சுற்றுலா
- மசூதியில் வீடியோ பரணிடப்பட்டது 2022-01-17 at the வந்தவழி இயந்திரம்