பீமன் சிலந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீமன் சிலந்தி
Golden silk orb-weaver
Nephila clavipes
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: கணுக்காலிகல்
வகுப்பு: சிலந்திதேள் வகுப்பு
வரிசை: அரானியா
துணைவரிசை: அரானியாமோர்பி
குடும்பம்: நெபிலிடே
பேரினம்: நெபிலா
லீச், 1815
இனம்

N. antipodiana
N. clavata
N. clavipes
N. edulis
N. inaurata
N. madagascariensis
N. pilipes
N. plumipes
N. senegalensis
N. komaci
N. vestita
 மேலும்

உயிரியற் பல்வகைமை
150 இற்கும் மேலான இனங்கள்

பீமன் சிலந்தி (golden silk orb-weavers, பேரினம்: "நெபீலா", Nephila) ஓர் அபூர்வ வகை பெரிய சிலந்திகள் ஆகும். 165 மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த நெஃபிலியா ஜீராசிக்கா எனும் சிற்றினம் இது வரை கிடைத்த சிலந்தி புதைபடிமங்களிலேயே பெரியது.[1]

நான்கு முதல் ஆறு அங்குலம் வரை நீளமும் இரண்டு அங்குல அகலமும் உள்ள இச்சிலந்தியின் உடல் நடுவில் மஞ்சள் நிற கோடுகளும், புள்ளிகளும் நிறைந்து காணப்படும். தரையில் இருந்து குறைந்தது ஆறு மீட்டர் வரை உயரத்திற்கு இவை வலை பின்னும். அவ்வாறான வலைகளின் விஸ்தீரணமும், 2 மீட்டர் வரை இருக்கும். இவ்வலைகள் பிற வகை சிலந்திகளின் வலைகளைக் காட்டிலும் நீண்ட நாள் நீடித்து நிற்கக் கூடியவை. சில வெளிநாடுகளில் இந்த வலைகளை கொண்டு சிறிய மீன்களை பிடித்து வருகின்றனர்.

இவ்வலைகளை சேகரித்து, அவற்றை சுருட்டி அதில் இரைகளை வைத்து மீன்களை பிடிப்பதாகத் தெரிகிறது. வனங்கள் செயற்கையாக அழிக்கப்படுவது, தீயில் எரிந்து நாசமாதல் போன்ற பல்வேறு காரணங்களால், இவ்வகை சிலந்தி இனம் அழிந்து வருகிறது. இதன் உடலில் விஷக்கிருமிகள் இருந்தாலும், மனிதர்களை இவ்வகை சிலந்திகள் தீண்டுவதில்லை. இவ்வகை சிலந்திகளில், பெண் சிலந்திகள் தரையில் குழி தோண்டி அதில் முட்டையிடுகின்றன. இவைகள் இனப்பெருக்கத்திற்காக 15 மணி நேரம் வரை சேர்ந்திருக்கும். அடர்ந்த வனங்களில் மட்டுமே இவ்வகை சிலந்திகள் காணப்படும். மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் தென்படாது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Amos, Jonathan (20 April 2011). "Fossilised spider 'biggest on record'". BBC News. http://www.bbc.co.uk/news/science-environment-13134505. பார்த்த நாள்: 24 April 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீமன்_சிலந்தி&oldid=1377820" இலிருந்து மீள்விக்கப்பட்டது