பீபி ஆயிஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீபீ ஆயிஷா (Bibi Aisha) (பீபி என்பது "பெண்" என்பதற்கான மரியாதைக்குரிய சொல்) ஆயிஷா முகமதுசாய், [1] ஒரு இளம் பெண்ணாக ஒரு கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பி ஓடிய ஒரு ஆப்கானித்தான் பெண் ஆவார். ஆனால் இவர் பழிவாங்குவதற்காக பிடிக்கப்பட்டு, சிறையில் அடைத்து, துன்புறுத்தப்பட்டார். பின்னர், இவர் உதவிப் பணியாளர்களால் மீட்கப்பட்டார். மேலும் இவரைப் பற்றிய செய்தி அமெரிக்க ஊடகங்களில் தலிபான்களின் பயங்கரவாத ஆட்சியின் விளைவுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்ற செய்தியாக வெளியானது. 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவர் மேரிலாந்தில் ஒரு ஆப்கான்-அமெரிக்க தம்பதியினரின் வளர்ப்பு மகளாக வசித்து வருகிறார். தனது சிதைந்த முகத்திற்கு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையும் பெற்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஆயிஷா ஆப்கானித்தானில் ஆப்கானியக் குடும்பத்தில் பிறந்தார்.[1] இவருக்கு பன்னிரெண்டு வயதாக இருந்தபோது, ஆயிஷாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொலைக்கு, பாத் என்ற நடைமுறையில் நஷ்டஈடாக இவரது தந்தை ஒரு தாலிபான் போராளியிடம் உறுதியளித்தக் காரணத்தால், இவர் பதினான்கு வயதில் அந்த நபரை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவரது கணவரும் அவரது குடும்பத்தினரும் இவரை கொடுமைப்படுத்தினர்.[1] பதினெட்டு வயதில், இவர் துன்புறுத்துததிலிருந்து தப்பித்தார். ஆனால் இவர் காவலர்களிடம் பிடிபட்டு ஐந்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இவர் தன்னுஒப்படைக்கப்பட்டார். பின்னர், வீட்டிலிருந்து தப்பித்ததற்காக ஆயிஷாவின் மாமனார், கணவன் மற்றும் குடும்பத்தின் மற்ற மூன்று ஆண்கள் ஆயிஷாவின் மூக்கு மற்றும் காதுகளை வெட்டி வீசினர். இவர் அருகிலிருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு சென்றார். ஆனால் உதவி மறுக்கப்பட்டது. இறுதியில், இவர் அமெரிக்க இராணுவத் தளத்தில் உதவி தேடினார்.[2]

அமெரிக்க செய்திகளில் தோன்றுதல்[தொகு]

ஆயிஷாவின் படம் 2011இல் நடந்த உலக பத்திரிகை புகைப்படக் கண்காட்சியில் காட்டப்பட்டது.

ஆயிஷாவின் கதை அமெரிக்க இணையமான தி டெய்லி பீஸ்டில்முதன்முதலில் டிசம்பர் 2009இல் தோன்றியது. இது பல மருத்துவர்களால் இவருக்கு இலவச உதவி மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சைகளை வழங்க தூண்டியது. கலிபோர்னியாவில் உள்ள கிராஸ்மேன் பர்ன் அறக்கட்டளை தேவையான அறுவை சிகிச்சைகளை செய்வதாக உறுதியளித்தது. மேலும், 2010இல் அமெரிக்காவிற்கான இவரது நுழைவு இசைவிற்கும் ஏற்பாடு செய்யத் தொடங்கியது.

அமெரிக்காவில் வாழ்க்கை[தொகு]

ஆகஸ்ட் 2010இல் டைம் பத்திரிக்கையில் இவரது செய்தி வெளியான பிறகு, ஆயிஷா இலவச சீரமைப்பு அறுவை சிகிச்சை பெற அமெரிக்கா சென்றார்.[3] கலிபோர்னியாவுக்கு வந்த பிறகு, இவர் உளவியல் ரீதியாக பின்வாங்கினார். இவருக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் காரணமாக, கடுமையான புனரமைப்பு அறுவை சிகிச்சைக்கு இவர் இன்னும் தயாராகவில்லை என்று மருத்துவர்கள் தீர்மானித்தனர். மேலும் இந்த அதிர்ச்சிகள் இவரை எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறுக்கு ஆளாக்கியது.[4] அவரது மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை தாமதமாக இருந்தபோது, நியூயார்க்கின் குயின்சி உள்ள ஆப்கானித்தான் மகளிர் தங்குமிடத்தில் இவர் தங்கினார்.[5] மருந்துகளின் மாற்றத்தால் ஆயிஷாவின் நிலை மேம்பட்டது, வலிப்பும் நின்றுவிட்டது.[5]

பின்னர், ஆயிஷாவின் உளவியல் நிலை போதுமான அளவு மேம்பட்டது. அவளது நடத்தையை கட்டுப்படுத்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்த முடிந்தது. 2012 ஆம் ஆண்டு தொடங்கி, ஆயிஷாவுக்காக பல கட்ட முக புனரமைப்பு செய்யத் தொடங்கப்பட்டது.[5] ஒரு புதிய மூக்கை உருவாக்க போதுமான திசுக்களை இவரது நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது. [5] இவருக்கு மொத்தம் 12 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.[6]

ஆயிஷாவை ஒரு ஆப்கானிய-அமெரிக்கத் தம்பதியினர் தத்தெடுத்தனர். மேலும், 2014ஆம் ஆண்டு நிலவரப்படி, இவர் மேரிலாந்தில் வசிக்கிறார்.[2] [7] இவர் ஆங்கிலம் மற்றும் கணிதம் படிக்கிறார். மேலும் ஒரு காவல் அதிகாரியாக ஆசைப்படுகிறார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "For Aesha, healing comes in many forms". CNN. December 20, 2012. பார்க்கப்பட்ட நாள் February 11, 2015.
  2. 2.0 2.1 "Meet Aesha, a Symbol of Strength and Triumph" ABC News video (July 2014)
  3. "Disfigured Afghan on Cover of Time Heads to US". AOL News. August 5, 2010 இம் மூலத்தில் இருந்து October 22, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101022124150/http://www.aolnews.com/world/article/disfigured-afghan-on-cover-of-time-heads-to-us/19582078. பார்த்த நாள்: November 27, 2010. 
  4. "Saving Aesha". CNN. http://www.cnn.com/interactive/2012/05/world/saving.aesha/?hpt=hp_c2. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "Saving Aesha". CNN. http://www.cnn.com/interactive/2012/05/world/saving.aesha/?hpt=hp_c2. "Saving Aesha". CNN.
  6. Video chronicling her surgery by the American Society of Plastic Surgeons (Nov 2014)
  7. American Society of Plastic Surgeons ASPS (November 4, 2014), Patients of Courage | Bibi Aisha, பார்க்கப்பட்ட நாள் October 17, 2017

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீபி_ஆயிஷா&oldid=3712579" இலிருந்து மீள்விக்கப்பட்டது