பீனைல்பைருவிக் அமிலம்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-ஆக்சோ-3-பீனைல்புரோப்பேனாயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
பீனைல்பைருவேட்டு; 3-பீனைல்பைருவிக் அமிலம்; கீட்டோ-பீனைல்பைருவேட்டு; பீட்டா- பீனைல்பைருவிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
156-06-9 | |
ChEBI | CHEBI:30851 |
ChemSpider | 972 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 997 |
| |
பண்புகள் | |
C9H8O3 | |
வாய்ப்பாட்டு எடை | 164.16 g·mol−1 |
உருகுநிலை | 155 °C (311 °F; 428 K) (சிதைவடையும்) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பீனைல்பைருவிக் அமிலம் (Phenylpyruvic acid) என்பது C6H5CH2C(O)CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மேலும் இதுவொரு கீட்டோ அமிலமுமாகும்.
தோற்றம்
[தொகு]பீனைல்பைருவிக் அமிலம் அதன் எ-மற்றும் ஒ-ஈனால் அமைப்பு மாற்றியங்களுடன் சமநிலை கொண்டுள்ளது. பீனைல் அலனின் சேர்மத்தை ஆக்சிசனேற்ற அமீன் நீக்க வினைக்கு உட்படுத்துவதால் இச்சேர்மம் விளைபொருளாகக் கிடைக்கிறது.
தயாரிப்பு
[தொகு]பென்சால்டிகைடு மற்றும் கிளைசின் வழிப்பெறுதிகளை ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதால் பீனைல் அசுலாக்டோன் உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் அது அமிலம் அல்லது கார வினையூக்கியால் நீராற்பகுக்கப்பட்டு பீனைல்பைருவிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது[1]. பென்சைல் குளோரைடை இரட்டைக் கார்பனைலேற்றம் செய்தும் இதைத் தயாரிக்க இயலும்[2][3].
பீனைல்பைருவிக் அமிலத்தை ஒடுக்கச் சிதைவு அமீனேற்றம் செய்தால் பீனைல் கிளைசின் கிடைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Carpy, Alain J. M.; Haasbroek, Petrus P.; Oliver, Douglas W. "Phenylpyruvic acid derivatives as enzyme inhibitors: Therapeutic potential on macrophage migration inhibitory factor" Medicinal Chemistry Research 2004, volume 13, pp. 565-577.
- ↑ Wolfram, Joachim. "Preparation of α-keto-carboxylic acids from acyl halides". Google Patents US4481368 & US4481369. Ethyl Corporation.
- ↑ Werner Bertleff; Michael Roeper; Xavier Sava (2007). "Carbonylation". Ullmann's Encyclopedia of Industrial Chemistry: pg.19. doi:10.1002/14356007.a05_217.pub2.