பீனா கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீனா கண்ணன்
பணிவியாபாரம்
அறியப்படுவதுசீமாட்டி
வாழ்க்கைத்
துணை
கண்ணன்
பிள்ளைகள்3
வலைத்தளம்
www.beenakannan.com

பீனா கண்ணன் (Beena Kannan), சீமாட்டி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் ஆவார். [1]

தொழில்[தொகு]

பல்கலைக்கழக படிப்பிற்குப் பிறகு, இவர், தனது தந்தை மற்றும் கணவருடன் 1980 இல் குடும்பத் தொழிலான ஜவுளி சில்லறை வணிகமான 'சீமாட்டி'யில் சேர்ந்தார். 'சீமாட்டி' நிறுவனம், இவரது தாத்தா, பிரபல ஜவுளி வியாபாரி வீரையா ரெட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் தென்னிந்தியாவில் மிகவும் கவனிக்கப்பட்ட திருமண பட்டு புடவை வடிவமைப்பாளர்களில் ஒருவரானார். மேற்கத்திய மற்றும் வட இந்திய நாகரீகங்களின் தாக்குதலை எதிர்கொண்டாலும் புடவைகளுக்கான இடத்தின் பெருமையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான இவரது முயற்சிகள் இவரது தனித்துவமான பங்களிப்பாகத் தோன்றுகிறது.

சாதனை / விருதுகள்[தொகு]

பீனா கண்ணன் உருவாக்கிய மிக நீளமான பட்டுப் புடவை (அரை கிமீ ) 2007 இல் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தபோது அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (2007) மற்றும் அமெரிக்காவில் (2009) தனது புடவை வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தினார். நெசவு சமூகங்களுடனான இவரது உறவு, 2009 இல் கோவை ஈரோடு நெசவு சமூகத்தின் "வாழ்நாள் சாதனையாளர் விருதை" இவருக்குப் பெற்றுத் தந்தது. செப்டம்பர் 2011 இல், பீனா கண்ணன் வடிவமைத்த புடவைகள் "ஸ்வரோவ்ஸ்கி எலிமெண்ட்ஸ் 2011″ நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களால் பயன்படுத்தப்பட்டன. [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனா_கண்ணன்&oldid=3762874" இருந்து மீள்விக்கப்பட்டது