உள்ளடக்கத்துக்குச் செல்

பீதி தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீதி தாக்குதல்
சிறப்புஉளநோய் மருத்துவம், மருத்துவச் சிகிச்சை உளவியல்

விளக்கம்:

திடீரென உண்டாகும் தீவிர பயமே 'பீதி தாக்குதல்' எனப்படுகிறது. இது படபடப்பு, வியர்வை, நடுக்கம், மூச்சுத் திணறல், உணர்வின்மை அல்லது ஏதாவது மோசமாக நடக்கப் போகிறது என்ற உணர்வு போன்ற அறிகுறிகளை உள்ளடக்கியது.[1][2] அறிகுறிகளின் அதிகபட்ச அளவு நிமிடங்களுக்குள் ஏற்படுகிறது.[2] பொதுவாக அவை சுமார் 30 நிமிடங்கள் வரை நீடிக்கிறது, ஆனால் கால அளவு நொடிகளிலிருந்து மணிநேர அளவிற்கு மாறுபடக் கூடும்.[3] சுய கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்ற பயமோ அல்லது நெஞ்சு வலியோ உணரப்படலாம்.[2] உடல்ரீதியாக பீதி தாக்குதல்கள் தாமாகவே ஆபத்தை விளைவிப்பன அல்ல.[4][5]

காரணங்கள்:

பீதி தாக்குதல்கள் பல காரணங்களால் ஏற்படக் கூடும். அவற்றுள் பீதி கோளாறு, சமூக கவலைக் கோளாறு (Social Anxiety Disorder), பிந்தைய மனஉளைச்சல் கோளாறு, போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறு, மனச்சோர்வு மற்றும் மருத்துவப் பிரச்சினைகள் ஆகியவையும் அடங்கும்.[2][6] அவை தூண்டப்படுவதாலோ அல்லது எதிர்பாராத விதமாகவோ ஏற்படலாம்.[2] புகைபிடித்தல், காஃபின் மற்றும் உளவியல் மன அழுத்தம் ஆகியவை பீதி தாக்குதலுக்கான ஆபத்தை அதிகரிக்கின்றன.[2] நோயறிதலுக்கு முன், ஹைப்பர் தைராய்டிசம், ஹைப்பர்பாராதைராய்டிசாம், இதய நோய், நுரையீரல் நோய் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்ற ஒத்த அறிகுறிகளை உருவாக்கும் நிலைமைகள் ஆராயப்பட்டு நிராகரிக்கப்பட வேண்டும்.[2]

சிகிச்சைமுறை:

அடிப்படை காரணத்தை நோக்கியே பீதி தாக்குதல்களுக்கான சிகிச்சை அமைய வேண்டும்.[4] அடிக்கடி தாக்குதல்கள் உள்ளவர்களுக்கு, ஆலோசனை அல்லது மருந்துகள் பயன்படுத்தப்படலாம்..[7] மூச்சுப் பயிற்சி மற்றும் தசை தளர்வு நுட்பங்களும் உதவக்கூடும்.[8] பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அபாயத்திற்கு உந்தப்படுகின்றனர்.[2]

பாதிப்பு:

ஐரோப்பாவில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் சுமார் 3% மக்கள் பீதி தாக்குதலைக் கொண்டிருந்த அதே நேரத்தில் அமெரிக்காவில் சுமார் 11% மக்கள் பாதிக்கப்பட்டனர்.[2] பொதுவாக ஆண்களை விட இது பெண்களை அதிகம் பாதிக்கிறது.[2] அவை பெரும்பாலும் பருவமடைதல் அல்லது ஆரம்ப வயதிலேயே தொடங்குகின்றன.[2] பொதுவாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. "Anxiety Disorders". NIMH. March 2016. Archived from the original on 29 September 2016. Retrieved 1 October 2016. பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2016 at the வந்தவழி இயந்திரம்
  2. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 American Psychiatric Association (2013), Diagnostic and Statistical Manual of Mental Disorders (5th ed.), Arlington: American Psychiatric Publishing, pp. 214–217, ISBN 978-0890425558
  3. Bandelow, Borwin; Domschke, Katharina; Baldwin, David (2013). Panic Disorder and Agoraphobia (in ஆங்கிலம்). OUP Oxford. p. Chapter 1. ISBN 9780191004261. Archived from the original on 20 December 2016. பரணிடப்பட்டது 13 அக்டோபர் 2022 at the வந்தவழி இயந்திரம்
  4. 1 2 Geddes, John; Price, Jonathan; McKnight, Rebecca (2012). Psychiatry (in ஆங்கிலம்). OUP Oxford. p. 298. ISBN 9780199233960. Archived from the original on 4 October 2016. பரணிடப்பட்டது 13 அக்டோபர் 2022 at the வந்தவழி இயந்திரம்
  5. Ghadri, Jelena-Rima (June 7, 2018). "International Expert Consensus Document on Takotsubo Syndrome (Part I): Clinical Characteristics, Diagnostic Criteria, and Pathophysiology". European Heart Journal 39 (22): 2032–2046. doi:10.1093/eurheartj/ehy076. பப்மெட்:29850871. பப்மெட் சென்ட்ரல்:5991216. http://spiral.imperial.ac.uk/bitstream/10044/1/63023/5/ehy076.pdf. பார்த்த நாள்: August 5, 2020. பரணிடப்பட்டது ஏப்ரல் 29, 2019 at the வந்தவழி இயந்திரம்
  6. Craske, MG; Stein, MB (24 June 2016). "Anxiety". Lancet 388 (10063): 3048–3059. doi:10.1016/S0140-6736(16)30381-6. பப்மெட்:27349358.
  7. "Panic Disorder: When Fear Overwhelms". NIMH. 2013. Archived from the original on 4 October 2016. Retrieved 1 October 2016. பரணிடப்பட்டது 4 அக்டோபர் 2016 at the வந்தவழி இயந்திரம்
  8. Roth, WT (2010). "Diversity of effective treatments of panic attacks: what do they have in common?". Depression and Anxiety 27 (1): 5–11. doi:10.1002/da.20601. பப்மெட்:20049938.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீதி_தாக்குதல்&oldid=4512946" இலிருந்து மீள்விக்கப்பட்டது