உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்ரூட் வெல்லப்பாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீட்ரூட் வெல்லப்பாகு என்பது பீட்ரூட்டிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லப்பாகு ஆகும். இது கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லபாகிலிருந்து வேறுபடுகிறது. பளீங்காக்கல் முறையின் கடைசிக்கட்டத்தில் உருவாகும் நீர்த்த வெல்லமே வெல்லப்பாகு. இந்த முறையின் நடுவில் கிடைக்கும் நீர்த்த வெல்லம் அடர்பச்சை, குறைந்த பச்சை நிறத்தில் காணப்படும். இதனை மறுசுழற்சி செய்வதனால் அதிக வெல்லப்பாகு பெறலாம்.

அடங்கியுள்ள சத்துக்கள்[தொகு]

பீட்ரூட் வெல்லப்பாகில் 50 சதவீதம் சர்க்கரை உலர்ந்த எடை, அதிக சுக்ரோஸ், தேவையான அளவு குளுகோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் உள்ளன. பீட்ரூட் வெல்லப்பாகில் பி7 ஊட்டச்சத்து அதிகமாக உள்ளதால் உயிரணு வளர்ச்சிக்கு உதவுகிறது. சர்க்கரை அற்ற பொருட்களான உப்பு, கால்சியம்,பொட்டாசியம், ஆக்சலேட் அடங்கியுள்ளன. பீட்டைன் மற்றும் ராபினோஸ் இதில் உள்ளதால் மனிதனால் உட்கொள்ள இயலாது, ஆகையால் கால்நடை தீவனத்தில் கலக்கப்படுகிறது. [1]

கரும்புச்சக்கை[தொகு]

கரும்புச்சக்கை என்பது கரும்பு அல்லது சோளப்பயிரிலிருந்து சாற்றை பிழிந்தெடுத்து கிடைக்கும் நார்ப்பொருள் மற்றும் காய்ந்த கூழ். இது உயிர் எரி பொருளாகவும், காகிதம் தயாரிக்கவும், கட்டுமானப்பொருட்கள் தயாரிக்கவும் மூலப்பொருளாக பயன்படுகிறது. கற்றாழைச்சக்கை என்பது கரும்புச்சக்கை போன்றது, அதில் நீலக்கற்றாழையின் திசு இருக்கும். கரும்புச்சக்கை மின்சாரம் தயாரிக்க பயன்படுகிறது. காய்ந்த கரும்புச்சக்கை நீராவி சுழற்சக்கரம் சுழல பயன்படும். 10டன் கரும்பிலிருந்து 5 டன் ஈர கரும்புச்சக்கை கிடைக்கும். கரும்புச்சக்கை என்பது கரும்பிலிருந்து கிடைக்கும் உபபொருள், ஆகையால் கரும்புச்சக்கை உற்பத்தி கரும்பு உற்பத்தியினைப் பொருத்து அமையும். அதில் 40 முதல் 50 சதவீதம் ஈரப்பதம் இருக்கும்.

ஈரப்பதம் அதிகமாக இருந்தால் மின்சாரம் தயாரிப்பதில் தடை ஏற்படும். பொதுவாக, கரும்புச்சக்கையினைப் பதப்படுத்துவதற்கு முன் சேமித்து வைக்கவேண்டும். மின்சாரம் தயாரிக்க, கரும்புசக்கையினை ஈரப்பதத்தில் சேமித்து, புறவெப்ப செயல்முறையினை கடைபிடிக்கவேண்டும். காகிதம் மற்றும் கூழ் தயாரிக்க கரும்புச்சக்கையினை அதிக ஈரப்பத்தில் பயன்படுத்தபடும், இதனால் சின்ன நாரினை நீக்கமுடியும், இல்லைஎன்றால் காகிதம் தயாரிப்பதில் தடை ஏற்படும், மீதி உள்ள சர்க்கரையினை நீக்கமுடியும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Codex Alimentarius Commission. (2009; 2010). Codex Alimentarius – 212.1 Scope and Description. Food and Agriculture Organization of the United Nations.
  2. Rainey, Thomas J (2009). A study of the permeability and compressibility properties of bagasse pulp. Brisbane: Queensland University of Technology
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்ரூட்_வெல்லப்பாகு&oldid=3176827" இலிருந்து மீள்விக்கப்பட்டது