பீட்டோ தேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொடு நாற்கரத்தின் எதிர்ப்பக்கங்களின் கூடுதல்: a + c = b + d
ஒரு வட்டத்திற்கு புள்ளி P -லிருந்து வரையப்பட்ட தொடுகோட்டுத் துண்டுகள்: PA = PB

வடிவவியலில் பீட்டோ தேற்றத்தின் (Pitot theorem) கூற்றின்படி, ஒரு தொடு நாற்கரத்தின் எதிரெதிர் பக்கங்களின் கூட்டுத்தொகைகள் சமமாக இருக்கும். அதாவது ஒரு நாற்கரத்தின் நான்கு பக்கங்களையும் தொட்டுக்கொண்டவாறு அந்நாற்கரத்துக்குள் ஒரு வட்டம் வரையக் கூடுமானால் அந்நாற்கரத்தின் எதிரெதிர்ப் பக்கங்களின் கூட்டுத்தொகைகள் சமம். இத்தேற்றம் பிரெஞ்சுப் பொறியாளர் ஆன்றி பீட்டோ பெயரால் அழைக்கப்படுகிறது. வட்டத்திற்கு வெளியேயுள்ள ஒரு புள்ளியிலிருந்து, வட்டத்திற்கு வரையப்படும் இரு தொடுகோட்டுத் துண்டுகளின் நீளங்களும் சமமாக அமையும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இத்தேற்றம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

Cut The Knot, Pitot theorem

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டோ_தேற்றம்&oldid=2294128" இருந்து மீள்விக்கப்பட்டது