பீட்டர் ஹிக்ஸ்
பீட்டர் ஹிக்சு | |
---|---|
![]() | |
பிறப்பு | பீட்டர் வேர் ஹிக்ஸ் 29 மே 1929 டைன் ஆற்றங்கரை நியூ காசில், இங்கிலாந்து |
வாழிடம் | எடின்பரோ, இசுக்கொட்லாந்து |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | எடின்பரோ பல்கலைக்கழகம் இலண்டன் இம்பீரியல் கல்லூரி இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி |
கல்வி கற்ற இடங்கள் | கிங்ஸ் கல்லூரி, லண்டன் |
ஆய்வேடு | (1955) |
ஆய்வு நெறியாளர் | சார்லசு கூல்சன்[1] |
முனைவர் பட்ட மாணவர்கள் | கிறித்தோபர் பிசொப் லூயிசு ரைடர் டேவிட் வாலசு[1] |
அறியப்படுவது | வலுவற்ற மின் தத்துவத்தில் முறிந்த சமச்சீர்மை ஹிக்ஸ் போசான் |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (2013) இயற்பியலுகான உல்ஃப் பரிசு (2004) சகுராய் பரிசு (2010) டிராக் பதக்கம் |
இணையதளம் www |
பீட்டர் வேர் ஹிக்ஸ் (Peter Ware Higgs, பிறப்பு: 29 மே 1929) ஓர் ஆங்கில தத்துவார்த்த இயற்பியலாளரும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மாண்புடன் ஓய்வுற்ற பேராசிரியருமாவார்.[2]
1960களில் வலுவற்ற மின் தத்துவத்தில் இவர் முன்வைத்த சமச்சீர்மை முறிவு என்ற கருதுகோள் பொதுவாக அடிப்படைத் துகள்களில், குறிப்பாக W மற்றும் Z போசான்களில், திணிவு எவ்வாறு தோன்றுகிறது என்பதை விளக்கியதால் பெரிதும் அறியப்பட்டார். அவரைத் தவிர பிற அறிவியலாளர்களாலும் ஒரே நேரத்தில் முன்வைக்கப்பட்ட இந்த ஹிக்ஸ் செயல்பாடு ஹிக்ஸ் போசான் என்ற ஓர் புதிய துகள் நிலவுவதாக முன்னுரைத்தது. இந்தத் துகள் நவீன அறிவியலின் மிகவும் தேடப்பட்டுவரும் ஓர் பொருளாக கருதப்படுகிறது. [3][4]). இதுவரை இந்தத் துகளை எந்த துகள் முடுக்கி சோதனையிலும் காணாதபோதும் துகள் இயற்பியலின் செந்தரப் படிவத்தின் ஓர் முதன்மையான அங்கமாக ஹிக்ஸ் செயல்பாடு ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது.[5]
நோபெல் பரிசு[தொகு]
2013 இயற்பியலுக்கான நோபெல் பரிசு இக்சிற்கும் எங்லேருக்கும் "அணுவுட்டுகளின் நிறைத் தோற்றத்தினை அறிய உதவும் இயக்காற்றினை கருத்தியல் முறையில் கண்டுபிடித்தமைக்காக" வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 கணித மரபியல் திட்டத்தில் பீட்டர் ஹிக்ஸ்
- ↑ Griggs, Jessica (Summer 2008) The Missing Piece பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Edit the University of Edinburgh Alumni Magazine , Page 17
- ↑ Griffiths, Martin (20070501) physicsworld.com The Tale of the Blog's Boson Retrieved on 2008-05-27
- ↑ Fermilab Today (20050616) Fermilab Results of the Week. Top Quarks are Higgs' best Friend Retrieved on 2008-05-27
- ↑ Rincon, Paul (20040310) Fermilab 'God Particle' may have been seen Retrieved on 2008-05-27
வெளியிணைப்புகள்[தொகு]
- கணித மரபியல் திட்டத்தில் பீட்டர் ஹிக்ஸ்
- Google Scholar List of Papers by PW Higgs
- A photograph of Peter Higgs பரணிடப்பட்டது 2012-07-21 at the வந்தவழி இயந்திரம், Photographs of Peter Higgs, June 2008
- The god of small things - An interview with Peter Higgs in The Guardian
- Peter Higgs: the man behind the boson - An article in the PhysicsWeb about Peter Higgs
- Higgs v Hawking: a battle of the heavyweights that has shaken the world of theoretical physics - An article on the debate between Peter Higgs and ஸ்டீபன் ஹோக்கிங் about the existence of the ஹிக்ஸ் போசான்
- My Life as a Boson பரணிடப்பட்டது 2012-01-23 at the வந்தவழி இயந்திரம் - A Lecture by Peter Higgs available in various formats
- blog of an interview
- Physical Review Letters - 50th Anniversary Milestone Papers
- In CERN Courier, Steven Weinberg reflects on spontaneous symmetry breaking
- Physics World, Introducing the little Higgs பரணிடப்பட்டது 2010-01-17 at the வந்தவழி இயந்திரம்
- Englert-Brout-Higgs-Guralnik-Hagen-Kibble Mechanism on Scholarpedia
- History of Englert-Brout-Higgs-Guralnik-Hagen-Kibble Mechanism on Scholarpedia
- Sakurai Prize Videos