பீட்டர் வில்கின்சன் கவ்விட்
| பிறப்பு | மே 31, 1946 குயெல், ஒன்றாரியோ, கனடா |
|---|---|
| நிறுவனம் | மேற்கத்திய ஒன்றாரியோ பல்கலைக்கழகம், ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம் பிரௌன் பல்கலைக்கழகம் |
| துறை | வளர்ச்சிக் கோட்பாடு, பணவியல் பொருளாதாரம், பருப்பொருளியல் |
| கல்விமரபு | Neo-Schumpeterian[1] |
| விருதுகள் | பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2025) |
பீட்டர் வில்கின்சன் கவ்விட்[2] (Peter Wilkinson Howitt) (பிறப்பு: மே 31,1946[3][4]) கனடாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். இவர் தற்போது பிரவுன் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலின் லின் கிராசுட் பேராசிரியராக உள்ளார். ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் ஆகியோருடன் சேர்ந்து, 2025ஆம் ஆண்டின் பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு "படைப்பு அழிவு மூலம் நீடித்த வளர்ச்சியைக் கோட்பாட்டிற்காக" வென்றார்.[5]
இளமையும் கல்வியும்
[தொகு]கவ்விட் 1946இல் கனடாவின் குயெல்பில் பிறந்தார்.[6]
கவ்விட் 1968இல்[7] மெக்கில் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், 1969ஆம் ஆண்டில் மேற்கத்திய ஒன்றாரியோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[7] கவ்விட் 1973இல் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆலோசகர் இராபர்ட் டபிள்யூ குளோவர் ஆவார்.[8]
கல்விப் பணி
[தொகு]கவ்விட் தனது முனைவர் பட்டத்தைப் பெற்ற பிறகு கனடாவுக்குத் திரும்பினார். இங்கு 1972 முதல் 1996[7] வரை மேற்கத்திய ஒன்றாரியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பொருளியல் கற்பித்தார். 1996ஆம் ஆண்டில் ஓகியோ மாநில பல்கலைக்கழகத்தில் ஆசிரிய உறுப்பினரான இவர், 2000ஆம் ஆண்டில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். தற்பொழுது இவர் இங்கு பணியாற்றி வருகிறார்.[7]
இவர் கனேடிய பொருளாதார சங்கத்தின் தலைவராக 1993-1994-இல் பணியாற்றினார். பணம், கடன், வங்கி முறைகள் ஆய்விதல் (ஜர்னல் ஆஃப் மணி, கிரெடிட் மற்றும் பேங்கிங்) தொகுப்பாசிரியராக 1997 முதல் 2000 வரை இருந்தார்.[9]
விருதுகளும், பாராட்டுகளும்
[தொகு]கவிட் 1994[10] முதல் பொருளியல் புள்ளித்தரவுச் சமுக உறுப்பினராகவும், 1992 முதல் கனடாவின் அரச சமூகத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.[9]
2019ஆம் ஆண்டில், கவிட், பிலிப் அகியோனுடன் இணைந்து பொருளாதாரத்தில் பிபிவிஏ அறக்கட்டளை அறிவு விருதைப் பெற்றனர்.[11] 2025ஆம் ஆண்டில் பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவு பரிசில் பாதி "படைப்பு அழிவு மூலம் நீடித்த வளர்ச்சியைக் கோட்பாட்டிற்காக" கவ்விட் மற்றும் அகியோனுக்கு கூட்டாக வழங்கப்பட்டது. இப்பரிசின் மீதி ஜோயல் மோக்யருக்கு வழங்கப்படுகிறது.[5]
புத்தகங்கள்
[தொகு]- Howitt, Peter (1990). The Keynesian Recovery and Other Essays (in ஆங்கிலம்). Philip Allan. ISBN 978-0-86003-081-2.
- Howitt, Peter, ed. (1996). The implications of knowledge-based growth for micro-economic policies. The Industry Canada research series. Calgary, Alberta: Univ. of Calgary Press. ISBN 978-1-895176-78-0.
- Howitt, Peter; Aghion, Philippe (1998). Endogenous growth theory. Cambridge, Massachusetts: MIT Press. ISBN 9780262011662.
- Howitt, Peter; De Antoni, Elisabetta; Leijonhufvud, Axel (1999). Money, markets and method: essays in honour of Robert W. Clower. Cheltenham Northampton (Mass.): E. Elgar. ISBN 978-1-85898-901-3.
- Aghion, Philippe; Howitt, Peter W. (2008-12-19). The Economics of Growth (in ஆங்கிலம்). MIT Press. ISBN 978-0-262-30389-7.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Philippe Aghion, Peter Howitt and Joel Mokyr win 2025 Nobel Prize in Economics" (in en). 2025-10-13. https://www.lemonde.fr/en/economy/article/2025/10/13/philippe-aghion-peter-howitt-and-joel-mokyr-win-2025-economics-nobel-prize_6746386_19.html.
- ↑ "Wilfrid Laurier University announces honorary degree recipients". www.laurieralumni.ca (in ஆங்கிலம்). Retrieved 2025-10-13.
- ↑ "Peter Howitt facts". The Nobel Prize.
- ↑ Chevance, Catherine. "Scientific Folder DHC Peter Howitt - Gredeg" (in fr-FR). Gredeg இம் மூலத்தில் இருந்து 2025-04-25 அன்று. பரணிடப்பட்டது.. http://web.archive.org/web/20250425032437/https://gredeg.univ-cotedazur.fr/scientific-folder-dhc-peter-howitt.
- ↑ 5.0 5.1 The Royal Swedish Academy of Sciences (13 October 2025). "The Prize in Economic Sciences 2025" (PDF).
- ↑ Bueckert, Kate. "Guelph's Peter Howitt Nobel win 'a proud moment' for Ontario universities where he studied and worked". https://www.cbc.ca/news/canada/kitchener-waterloo/peter-howitt-nobel-prize-economics-guelph-western-mcgill-9.6937046.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "Brown University economics professor Peter Howitt wins Nobel Prize in Economic Sciences | Brown University". www.brown.edu (in ஆங்கிலம்). 2025-10-13. Retrieved 2025-10-13.
- ↑ Laidler, David (2022-01-01). "2022-11 Peter Howitt – a Keynesian Still in Recovery" (in en). University of Western Ontario Department of Economics Research Report Series. https://hdl.handle.net/20.500.14721/11869.
- ↑ 9.0 9.1 Mcdevitt, Neale (2025-10-13). "McGill Alumnus Peter Howitt awarded 2025 Nobel Prize in Economics for work on innovation and growth". McGill Reporter (in கனடிய ஆங்கிலம்). Retrieved 2025-10-13.
- ↑ "Current Fellows". www.econometricsociety.org (in ஆங்கிலம்). Retrieved 2025-10-13.
- ↑ "Peter Howitt, 12th Frontiers of Knowledge Award in Economics, Finance and Management". Premios Fronteras (in ஆங்கிலம்). Retrieved 2025-10-13.