பீட்டர் லோ சு இன்
பீட்டர் லோ சு இன் Peter Lo Su Yin 罗思仁 | |
---|---|
2-ஆவது சபா முதலமைச்சர் | |
பதவியில் 1 சனவரி 1965 – 12 மே 1967 | |
ஆளுநர் | முசுதபா அருன் பெங்கிரான் அகமட் ரபியி |
முன்னையவர் | புவாட் இசுடீபன்ஸ் |
பின்னவர் | முதபா அருன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சண்டக்கான், பிரித்தானிய வடக்கு போர்னியோ (தற்போது சபா, மலேசியா) | 19 மே 1923
இறப்பு | 1 சனவரி 2020 கோத்தா கினபாலு, சபா, மலேசியா | (அகவை 96)
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | சபா சீனர் சங்கம் |
துணைவர் | ரோசி டோரதி (இற. 2002) |
பிள்ளைகள் | 4 (ஒரு மகன், மூன்று மகள்கள்) |
முன்னாள் கல்லூரி | நியூசிலாந்து வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகம் |
டான் ஸ்ரீ; டத்தோ பீட்டர் லோ சு இன் (ஆங்கிலம்; Peter Lo Su Yin; மலாய்: Tan Sri Datuk Peter Lo Su Yin; சீனம்: 羅思仁) (பிறப்பு: 19 மே 1923; – இறப்பு: 1 சனவரி 2020) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; சனவரி 1965 முதல் மே 1967 வரை, மலேசியா, சபா மாநிலத்தின் 2-ஆவது முதலமைச்சராகப் பணியாற்றியவர். இவர் சபா சீனர் சங்கத்தின் (Sabah Chinese Association) (SCA) மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார்.[1][2]
பொது
[தொகு]பீட்டர் லோ சூ இன் 1923-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி சபாவில் உள்ள சண்டக்கான் நகரில் சீனக் குடியேற்றவாசிகளுக்கு மகனாகப் பிறந்தார். முதலில் சண்டக்கான் செயின்ட் மேரிஸ் பள்ளியிலும்; அதன் பிறகு சிங்கப்பூர் புனித அந்தோணியார் ஆண்கள் பள்ளியிலும் பயின்றார்.
1952-இல் கொழும்பு திட்டத்தின் மூலம் நியூசிலாந்து வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து, 1955-இல் இளங்கலைச் சட்டப் பட்டத்தைப் பெற்றார். 1956-இல் அவர் வழக்கறிஞர் மன்றத்தில் அனுமதிக்கப்பட்டார். அதன்மூலம் சட்டத்தில் பட்டம் பெற்று வழக்கறிஞராகத் தகுதி பெற்ற முதல் சபாகான் ஆனார்.[3]
மலேசிய 20-அம்ச உடன்படிக்கை
[தொகு]1963-இல் சபாவை மலேசியக் கூட்டமைப்பிற்குள் கொண்டு வருவதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். இவர் வழக்கறிஞராக இருந்த காலத்தில்தான் மலேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்போது மலேசிய 20-அம்ச உடன்படிக்கை என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய ஆவணம் தயாரிக்கப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தைகளில் அவர் ஒரு முக்கிய பங்காளியாக இருந்தார்.[3]
மலேசிய 20-அம்ச உடன்படிக்கை (20-Point Agreement) என்பது 1963-ஆம் ஆண்டில், மலேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்னர் பிரித்தானிய போர்னியோ எனும் (சபாவின்) பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி (Crown Colony of North Borneo) முன்மொழிந்த 20 விதிமுறைக் கூறுகளின் பட்டியல் (List of 20 Points) ஆகும்.
மலேசிய அமைச்சர் பதவி
[தொகு]மலேசிய ஒப்பந்தத்தில் (Malaysia Agreement) மலேசிய சட்டம் 1963-இல் (Malaysia Act 1963); பிரித்தானிய போர்னியோவின் பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி முன்மொழிந்த 20 விதிமுறைக் கூறுகளில்; சில கூறுகள் மட்டுமே இணைக்கப்பட்டன.
பீட்டர் லோ சூ இன், 1963 முதல் 1978 வரை புதிய மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1964-ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்தச் சிறப்பைப் பெற்ற முதல் சபாகான் இவரே ஆவார்.[4]
முதலமைச்சர் பதவி
[தொகு]சனவரி 1, 1965 அன்று, பீட்டர் லோ சூ இன் சபா மாநிலத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர்தான் சபாவின் முதல் சீன வம்சாவளி முதல்வர் ஆவார். மலேசிய வரலாற்றில் மிகவும் கடினமான மற்றும் கொந்தளிப்பான காலங்களில் பீட்டர் லோ சூ இன், சபா மாநிலத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரின் பதவிக் காலத்தில் தான், 1965-இல், மலேசியா கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் விலகி ஒரு சுதந்திர நாடாக மாறியது.
1967-இல் நடந்த மாநிலத் தேர்தலில் லோ தன் சட்டமன்றத் தொகுதியை இழந்தார். அவருக்குப் பதிலாக முசுதபா அருன் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். 1978 வரை நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றினார். அதன் பிறகு அவர் தன் வழக்கறிஞர் தொழிலில் கவனம் செலுத்தினார்.
1 சனவரி 2020 அன்று , பீட்டர் லோ சூ இன், கோத்தா கினபாலு கே.பி.ஜே. சிறப்பு மருத்துவமனையில் தம்முடைய 96-ஆவது வயதில் காலமானார்.
விருதுகள்
[தொகு]மலேசிய விருதுகள்
[தொகு]- மலேசியா :
- - Malaysian Commemorative Medal (Gold) (PPM) (1965)
- - Order of the Defender of the Realm (JMN) (1993)[5]
- - Order of Loyalty to the Crown of Malaysia (PSM) – Tan Sri (1996)[6]
- சபா :
- - Order of Kinabalu (PGDK) – Datuk (1972)[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Eintrag auf www.worldstatesmen.org; Retrieved on 12 June 2012
- ↑ Malaysia: Who’s Who Constitution Government & Politics, Edition 2011, Page 1129, Kusuya Management Sdn Bhd, Kuala Lumpur 2011, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-9624-07-6
- ↑ 3.0 3.1 3.2 "How Lo rose to be Sabah's second CM". Daily Express. 5 January 2020. Archived from the original on 17 September 2020. பார்க்கப்பட்ட நாள் 17 September 2020.
- ↑ Sabah State Archive: Our Collection பரணிடப்பட்டது 5 நவம்பர் 2018 at the வந்தவழி இயந்திரம்; Retrieved on 12 June 2012
- ↑ "Semakan Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat".
- ↑ "Semakan Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat".