பீட்டர் ராபிட் 2: தி ரன்அவே
பீட்டர் ராபிட் 2: தி ரன்அவே | |
---|---|
இயக்கம் | வில் கிளக் |
தயாரிப்பு |
|
கதை |
|
மூலக்கதை | பீட்ரிக்ஸ் பாட்டர் படைத்தவர் பாத்திரங்கள் |
இசை | டொமினிக் லூயிஸ் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பீட்டர் மென்ஸீஸ் ஜூனியர் |
படத்தொகுப்பு | மாட் வில்லா |
விநியோகம் | சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் |
வெளியீடு | ஆகத்து 7, 2020(ஐக்கிய அமெரிக்கா) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
பீட்டர் ராபிட் 2: தி ரன்அவே (Peter Rabbit 2: The Runaway [1]) (பிற பிராந்தியங்களில் பீட்டர் ராபிட் 2 என பெயர் சுருக்கப்பட்டது) என்பது வெளி வரவிருக்கும் 2020 ஆண்டைய அமெரிக்க லைவ் ஆக்சன் / கணினி அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படமானது பேட்ரிக் பர்லீக் மற்றும் கிளக் எழுதில், வில் கிளக் இயக்கத்தில் வெளிவருகிறது. இந்த படம் 2018 இன் பீட்டர் ராபிட்டின் தொடர்ச்சியாகும். இது பீட்ரிக்ஸ் பாட்டர் என்ற குழந்தை இலக்கிய எழுத்தாளர் எழுதிய தி டெல் ஆப் பீட்டர் ராபிட் கதைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் ஜேம்ஸ் கோர்டன் முதன்மை பாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுத்தும், ரோஸ் பைரன், டோம்ஹால் க்ளீசன், மற்றும் டேவிட் ஓயிலோவோ ஆகியோர் நேரடி பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பிற பாத்திரங்களுக்கு எலிசபெத் டெபிக்கி மற்றும் மார்கோட் ரொப்பி ஆகியோர் முயல் கதாபாத்திரங்குள்ளு பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.
முதலில் இப்படத்தை 2020 ஏப்ரலிலேயே வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் பீட்டர் ராபிட் 2: ரன்அவே 2019–20 கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தாமதமானது. இப்படத்தை சோனி பிக்சர்ஸ் கொலம்பியா பிக்சர்ஸ் முத்திரையைக் கொண்டு 2020 ஆகஸ்ட் 7 ஆம் தேதி அமெரிக்காவில் திரையரங்கில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் இந்த படத்தில் ஈடுபடாது, 2016 ஆம் ஆண்டின் தி ஆங்கிரி பேர்ட்ஸ் திரைப்படத்திலிருந்து இது இரண்டாவது அனிமேஷன் படம்.
கதைச்சுருக்கம்[தொகு]
இப்படத்தின் முதல்பாகமாகிய பீட்டர் ராபிட்டின் படத்தின் கதையில், முயல்களின் வாழிட வனப்பகுதியில் விவசாயிம் செய்கிறனர்ர். இதற்கு எதிராக முயல்களின் தலைவனாக பீட்டர் தலைமையிலான முயல்கள் அட்டகாசம் செய்கின்றன. தோட்டத்துக்கு புதியதாக பொறுப்புக்கு வரும் தாமஸ் மயல்களை கடுமையாக ஒடுக்குகிறான். இந்நிலையில் முயல்களுக்கு நட்பான பியா என்னும் பெண்ணுடன் தமஸ் நெருக்கம் காட்டுகிறான். இவர்களின் நெருக்கத்தைப் பிரிக்க தாமஸ் முயலும் அதன் தோழர்களும் முயல்கின்றனர். இந்த முயல்களின் இந்த நடவடிக்கைகளுக்கு ஜோவும் பதிலடி தருகிறான். இந்தக் களோபரங்களே முதல் பாகத்தின் கதை. அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட இப்படத்தில் பியா - தாமஸ் காதலானது திருமணம்வரை முன்னேறுகிறது. அதை விரும்பாத பீட்டர் முயலும் அதன் புதிய சகாகளும் நிலம், நீர், வானம் என மூன்று பகுதிகளிலும் சாகசங்களில் ஈடுபடுகின்றனர். என்பதாக உள்ளது.