உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்டர் பால் தாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்டர் பால் தாசன்
Peter Paul Dason
மலேசிய மக்களவை
பினாங்கு உத்தாரா தொகுதி P034
பதவியில்
1969–1974
முன்னையவர் கே சோங் கியாட்
பெரும்பான்மை7,551 (1969)[1]
பினாங்கு மாநில சட்டமன்றம்
ஆயர் ஈத்தாம் சட்டமன்றத் தொகுதி N20
பதவியில்
1978–1982
முன்னையவர் டேவிட் சூங் லியோங்
பின்னவர் லீ ஜோங் கி
பெரும்பான்மை1,222 (1978)[2]
மலேசிய மக்களவை
புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி P041
பதவியில்
1990–1995
பெரும்பான்மை3,910 (1990)[3]
மலேசிய மக்களவை
பாயான் பாரு மக்களவைத் தொகுதி P041
பதவியில்
1986–1990
பெரும்பான்மை262 (1986)[4]
பினாங்கு மாநில சட்டமன்றம்
செரி டெலிமா சட்டமன்றத் தொகுதி N28
பதவியில்
1990–1995
பெரும்பான்மை2,741 (1990)[5]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Peter Dason a/l Muthu Jaha Dason

1934
இறப்பு2004 (வயது 70)
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சி ஜசெக
பணிஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்

பீட்டர் பால் தாசன் எனும் பீட்டர் முத்து ஜெகதீசன் (1934 – 2004) (ஆங்கிலம்; மலாய்: Peter Paul Dason எனும் Peter Dason a/l Muthu Jaha Dason) என்பவர் மலேசிய அரசியல்வாதி; ஒரு முன்னணி வழக்கறிஞர்; மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும்; இரண்டு முறை பினாங்கு சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் ஆவார்.

இவர் மலேசியத் தேர்தல்களில் 10 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றவர் என மலேசிய வரலாற்றில் தடம் பதித்த மலேசிய இந்தியர் என அறியப்படுகிறார். மலேசியாவின் ஆளும் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான ஜனநாயக செயல் கட்சியை (DAP) உருவாகியவர்களில் பீட்டர் பால் தாசன் அவர்களும் ஒருவராவார்.

இவரின் அரசியல் சமூகச் சேவைகளைப் பாராட்டும் வகையில், பினாங்கில் ஒரு சாலைக்கு பீட்டர் பால் தாசன் சாலை (Jalan Peter Paul Dason) என்று பினாங்கு மாநில அரசு பெயரிட்டுள்ளது.[6]

அரசியல்

[தொகு]

இவர் மலேசிய மக்களவைக்கு (Dewan Rakyat) மூன்று முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பினாங்கு மாநில சட்டமன்றத்திற்கு இரண்டு முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் மக்கள் பிரதிநிதியாக மட்டுமல்லாமல், ஜசெக கட்சியின் பின்னணித் திட்டங்களை வகுக்கும் ஒரு முக்கிய திட்டமிடல் வல்லுநராகவும் செயல்பட்டார். 1982-ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தை ஜசெக கட்சியின் பலத்த கோட்டையாக மாற்றுவதற்காக, புராஜெக்ட் 82 (Project 82) என்ற உத்தியை வகுத்தார். இதன் மூலம் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை சிலாங்கூரிலிருந்து பினாங்கிற்கு அரசியல் களம் மாற்றச் செய்தார்.[7]

பினாங்கு உத்தாரா, புக்கிட் பெண்டேரா, பாயான் பாரு போன்ற முக்கிய நாடாளுமன்றத் தொகுதிகளிலும், ஆயர் ஈத்தாம், செரி டெலிமா போன்ற சட்டமன்றத் தொகுதிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றார்.

பொது

[தொகு]

இனம், மதம் கடந்து அனைத்து மலேசியர்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்ற கொள்கைக்காகத் தன்னுடைய வாழ்நாள் இறுதிவரை போராடினார்.

இவர் அதிகாரப் பதவிகளுக்கும், விருதுகளுக்கும் விருப்பப்படாமல், இறுதிவரை தன்னுடைய அரசியல் கொள்கைகளில் உறுதியாக நின்று சேவையாற்றிய ஒரு நேர்மையான தலைவராக மலேசிய அரசியல் வரலாற்றில் அறியப்படுகிறார். இவரின் அரசியல் சேவையைப் பாராட்டும் வகையில், பினாங்கின் தஞ்சோங் தொக்கோங் பகுதியில் உள்ள ஒரு சாலைக்கு பீட்டர் பால் தாசன் சாலை (Jalan Peter Paul Dason) எனப் பெயரிடப்பட்டுள்ளது.[6]

வாழ்க்கை

[தொகு]

இவர் சட்டம் பயின்று பினாங்கில் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றினார். உடல்நலக் குறைவு காரணமாக, 2002-ஆம் ஆண்டு வாக்கில் தன்னுடைய வழக்கறிஞர் பணியை நிறுத்திக் கொண்டார். இவர் பினாங்கின் கெலாவே சாலையில் உள்ள தனது சொந்த குடியிருப்பில் வசித்து வந்தார். தீவிர அரசியல் பணிகளுக்கு மத்தியிலும் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலையும் மேற்கொண்டார்.

மறைவு

[தொகு]

அரசியல் தலைவர்கள் பலர் அதிகாரத்திற்காகவும், பணத்திற்காகவும் கட்சி மாறிய காலகட்டத்தில், 38 ஆண்டுகள் ஒரே கொள்கைக்காக ஜசெக கட்சியில் உறுதியாக நின்றார். இதனால் இவர் மலேசிய அரசியல்வாதிகளுக்கிடையே "அபூர்வமான நேர்மையாளர்" (ஜசெக) என்று புகழப்படுகிறார்.[8]

1934-ஆம் ஆண்டு பிறந்த இவர் உடல்நலக் குறைவினால், தன்னுடைய 70-ஆவது வயதில், 14 சூலை 2004 அன்று பினாங்கில் காலமானார்.[9] பீட்டர் பால் தாசன், பணத்திற்கும் புகழுக்கும் ஆசைப்படாத நல்ல மனிதர்; மலேசியர் மனங்களில் என்றும் நிறைந்து வாழ்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Peter Paul Dason (W5, L5); P.034 Penang Utara, Pulau Pinang; GE-0310 May 1969". ElectionData.MY. Retrieved 14 May 2026.
  2. ↑ "Peter Paul Dason (W5, L5); N.20 Ayer Itam, Pulau Pinang, Pulau Pinang; GE 05-08 Jul 1978". ElectionData.MY. Retrieved 14 May 2026.
  3. ↑ "Peter Paul Dason (W5, L5); P.041 Bukit Bendera Pulau Pinang, Pulau Pinang; GE 05-08 Jul 1978". ElectionData.MY. Retrieved 14 May 2026.
  4. ↑ "Peter Paul Dason (W5, L5); P.047 Bayan Baru Pulau Pinang, Pulau Pinang; GE 07- 02 Aug 1986". ElectionData.MY. Retrieved 14 May 2026.
  5. ↑ "Peter Paul Dason (W5, L5); N.28 Bukit Gelugor, Pulau Pinang; SE-0820 Oct 1990". ElectionData.MY. Retrieved 14 May 2026.
  6. 1 2 "A roadsign bearing the name of the road, Jalan Peter Paul Dason, can be seen at the opposing side of the condominium complex; also a scenic jogging route for Tanjong Tokong residents". Instagram. Retrieved 14 May 2026.
  7. ↑ "Peter Paul Dason were responsible in 1982 for bringing DAP stalwart Lim Kit Siang in to capture Penang.". Free Malaysia Today. Retrieved 14 May 2026.
  8. ↑ "Peter Dason belongs to the rare breed of Malaysian political leaders who to his last breath had stood firm and consistent by his political principles, unbowed and unyielding to pressures or temptations of office, wealth and position". Lim Kit Siang. Retrieved 14 May 2026.
  9. ↑ "Peter Paul Dason; DAP founder member Dason dies aged 70 ". Star Malaysia. Retrieved 14 May 2026.

மேலும் காண்க

[தொகு]

நூல்கள்

[தொகு]
  • Zhang, Kevin; Choo, John; Fong, Sok Eng (2022). The Democratic Action Party in Johor (in ஆங்கிலம்). ISEAS Publishing. ISBN 978-981-5011-11-1.
  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Anzagain Sdn. Bhd. (2004). Almanak keputusan pilihan raya umum: Parlimen & Dewan Undangan Negeri, 1959-1999. Shah Alam, Selangor: Anzagain.
  • Hussain, M. (1987). Membangun demokrasi: Pilihanraya di Malaysia. Kuala Lumpur: Karya Bistari.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_பால்_தாசன்&oldid=4539302" இலிருந்து மீள்விக்கப்பட்டது