உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்டர் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்டர் கோட்பட்டைக் காட்சிப்படுத்தும் விளக்கப்படம்

பீட்டர் கோட்பாடு (Peter principle) என்பது 1969-இல் லாரன்சு ஜே. பீட்டர் என்பவரால் வகுக்கப்பட்டு வெளியான ஓர் மேலாண்மை கொள்கை கருத்துப்படிவம். இதன் கருத்தாக்கம், ஒரு பதவிக்கான தேர்வு விண்ணப்பதாரர் அப்பதவிக்கான திறன்களை கொண்டுள்ளாரா என்று ஆராயாமல், அவரின் தற்போதைய பணிமுனைப்புச் செம்மையைப் பொருத்து அமையும் என்பதாகும். விளைவாக, பணியாளரின் பதவி உயர்வு அவரால் தற்போதைய பணியில் திறம்பட செயல்பட இயலாத போது மட்டுமே தடைபடும், "மேலாளர்கள் அவரவர் தகுதியீன நிலைக்கு உயர்வர்".

மேலோட்டம்

[தொகு]

இக்கோட்பாடு பரவலாக வழங்கப்படும் "வேலைக்காகும் எந்த ஒரு பொருளும் அது உடையும் வரை மேன்மேலும் கடினமாகிக் கொண்டே போகும் சூழலில் பயன்படுத்தப்படும்" எனும் பொது நோக்கின் சிறப்பு பகுப்பாகும். இதனை "பொதுப்படையான பீட்டர் கோட்பாடு" எனலாம். முன்னொரு சூழலிற்குப் பொருந்திய ஒரு செயலையோ பொருளையோ, பொருந்தாதபோதும், தற்போதைய சூழலுக்குப் பயன்படுத்த பெருமுனைப்பு உள்ளது மனித இயல்பு என்பதை பீட்டர் கவனித்து இக்கொட்பாட்டை வகுத்தார்.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. Heylighen, F. (30-11-1993). "The Generalized 'Peter Principle'". Principia Cybernetica Web. பார்க்கப்பட்ட நாள் 11-04-2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_கோட்பாடு&oldid=2265000" இலிருந்து மீள்விக்கப்பட்டது