பீக்கள்
பீக்கள் Picul Pikul | |||
---|---|---|---|
கம்பம் ஏந்திய முதியவர் | |||
சீனப் பெயர் | |||
சீன எழுத்துமுறை | 擔 | ||
| |||
மலாய்ப் பெயர் | |||
மலாய் | pikul |
பீக்கள் (ஆங்கிலம்: Picul dan; tam; (/ˈpɪkəl/), மலாய்: Pikul; சீனம்: 擔; 担) என்பது ஒரு பாரம்பரிய ஆசிய எடை அலகு ஆகும். ஒரு மனிதன் தோள்பட்டை கம்பத்தில் சுமக்கக்கூடிய அளவு என்று பொருள்படும் [1] தற்போதைய மெட்ரிக் அளவில் ஏறக்குறைய 62.5 கிலோகிராம் அளவிற்கு எடை கொண்டதாகும். மலேசியாவில், இந்த அலகு முறை 1981-ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது.
வரலாற்று ரீதியாக, காலம் மற்றும் நிலப்பகுதிகளைப் பொறுத்து 100 அல்லது 120 கட்டிகளுக்குச் (catty) சமமாக இந்த அலகு வரையறுக்கப்பட்டது. ஒரு கட்டி என்பது 0.6 கிலோகிராம் ஆகும். மலேசியாவில், பாரம்பரிய ஆசிய எடை அலகு முறைமை 1972-ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது. 1981-ஆம் ஆண்டில் மெட்ரிக் முறை முழுமையாகப் பயன்பாட்டிற்குள் இணைந்தது.
தெற்கு சீனா மற்றும் கடல்சார் தென்கிழக்கு ஆசியாவில் பீக்கள் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது.[2]
வரலாறு
[தொகு]இந்த அலகு சீனாவில் கின் அரசமரபின் (கிமு 221–206) காலத்தில் தோன்றியது. அங்கு இது சி (石 "கல்") என்று அழைக்கப்பட்டது. ஆன் அரசமரபின் போது, ஒரு கல் 120 கட்டிகளுக்குச் சமம். சீன அரசாங்க அதிகாரிகளுக்கு தானியங்களிலும் கற்களிலும் ஊதியம் வழங்கப்பட்டது.[3]
பீக்கள் என்ற சொல் ஜாவானிய மொழியில் 9-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றியது. நவீன மலாய் மொழியில், பீக்கள் என்பது 'தோளில் சுமந்து செல்வது' என்று பொருள்படும்; இது ஒரு வினைச்சொல்லாகும்.
எசுபானியம், போர்த்துகீசியம், பிரித்தானியம்; மற்றும் குறிப்பாக இடச்சு குடியேற்றவிய கடல்சார் வணிகத்தைத் தொடர்ந்து, பீக்கள் என்ற சொல் ஒரு வசதியான அலகாகவும்; பிற ஆசுத்திரோனீசிய மக்களாலும் (நவீன மலேசியா மற்றும் பிலிப்பீன்சு) பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு; பயன்படுத்தப்பட்ட ஒரு மொழியியல் அலகாகவும் இருந்தது.[4] 19-ஆம் நூற்றாண்டில் பல வணிகச் செய்தி இதழ்களுக்கு ஒரு வசதியான குறிப்பு அலகாகவும் பயன்பாட்டில் இருந்தது.
மலேசிய அளவு முறை
[தொகு]- 1 கட்டி = 16 தயின் (tahil)[5] = 12 bungkal[5][6]
- 100 கட்டி= 1 பீக்கள் (pikul)[7] = 1600 tahil
- 1200 கட்டி (100 × 12 பீக்கள்) = 1 கோயான் koyan[7][6]}}
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Weights and Measures Ordinance". The Law of Hong Kong.
- ↑ Freeman Hunt, Thomas Prentice Kettell, William Buck Dana. Hunt's merchants' magazine and commercial review, Volume 41.Freeman Hunt, 1859 Google PDF download: [1]
- ↑ "Han Shu" Table of Officials and Ministers
- ↑ Weights and Measures Ordinance, 1885, Historical Laws of Hong Kong Online.
- ↑ 5.0 5.1 Wan Norasikin Wan Ismail (April 2020). "Kosa kata metrologi Melayu". Dewan Bahasa. Dewan Bahasa dan Pustaka Malaysia. pp. 16–19.
- ↑ 6.0 6.1 Pamphlet of information for travellers. மலாயா தொடருந்து. 1921. p. 5 – via Cornell University Library.
- ↑ 7.0 7.1 Shaharir bin Mohamad Zain (2012). Istilah dan Konsep Pengukuran Tradisional Alam Melayu. Pulau Pinang, Malaysia: Penerbit Universiti Sains Malaysia. p. 12. ISBN 978-983-861-572-3.
வெளி இணைப்புகள்
[தொகு]- [2] Freeman Hunt, Thomas Prentice Kettell, William Buck Dana. Hunt's merchants' magazine and commercial review, Volume 41.Freeman Hunt, 1859 Google PDF