உள்ளடக்கத்துக்குச் செல்

பீகார் மாநில மகாதலித் ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீகார் மாநில மகாதலித் ஆணையம் (State Mahadalit Commission, Bihar) என்பது பீகார் அரசால் உருவாக்கப்பட்ட ஓர் அரசு அமைப்பாகும். வளர்ச்சிச் செயல்பாட்டில் பின்தங்கிய பட்டியல் சாதியினருக்குள் உள்ள சாதிகளைக் கண்டறிந்து, அவர்களின் கல்வி மற்றும் சமூக நிலையை ஆராய்ந்து மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக இந்த ஆணையம் 2007 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. ஆணையம் இரண்டு இடைக்கால அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. 18 சாதிகளை மிகவும் பின்தங்கிய சாதிகளாக பட்டியல் இன சாதிகள் பட்டியலில் சேர்க்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பின்னர் ‘சமர்’ சாதியையும் மகாதலித் பிரிவில் சேர்க்க பரிந்துரைத்தது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bihar Mahadalit Vikas Mission".