பீகார் பொருளாதார ஆய்வறிக்கை
| बिहार आर्थिक सर्वेक्षण | |
|---|---|
| வகைப்பாடு | |
| பொருளாதார மேம்பாடு | பீகார் அரசு |
| காலம் | |
| சுழற்சி | ஆண்டுதோறும் |
| நேரம் | நிதிநிலை அறிக்கையின் முதல் நாள் |
| சமர்ப்பித்தல் | |
| சமர்ப்பிப்பவர் | நிதியமைச்சர் |
| நிகழ்விடம் | பீகார் சட்டப் பேரவை |
பீகார் பொருளாதார ஆய்வறிக்கை (Bihar Economic Survey) என்பது இந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தின் பொருளாதார செயல்திறனையும் எதிர்கால வளர்ச்சிக்கான பாதை பற்றிய விரிவான பகுப்பாய்வையும் வழங்கும் ஒரு விரிவான அறிக்கையாகும். மாநிலத்தின் பொருளாதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வருடாந்திர அறிக்கையுமாகும். இந்த அறிக்கை மாநில சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படுகிறது. மாநில நிதியமைச்சரால் நிதிநிலை அறிக்கை அமர்வின் முதல் நாளில் சமர்ப்பிக்கப்படுகிறது.[1][2][3]
விளக்கம்
[தொகு]பீகார் பொருளாதார ஆய்வறிக்கை என்பது கடந்த நிதியாண்டில் பல்வேறு துறைகளில் அரசின் செயல்திறனின் அடிப்படையில் மாநிலப் பொருளாதாரத்தைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் ஆவணமாகும். முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தின் மொத்த செலவினங்களில் ஏற்பட்ட மாற்றத்தையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இதேபோல் இது இந்தியாவில் பீகார் மாநிலத்தின் வளர்ச்சியின் முக்கிய குறிகாட்டிகளை ஆராய்கிறது. மாநிலத்தின் தனிநபர் வருமானம் குறித்த தகவல்களையும் வழங்குகிறது, இந்த அறிக்கை வளர்ச்சியின் முக்கிய குறிகாட்டிகளில் ஒன்றாகும்.[1]
தற்போதைய பதிப்பு
[தொகு]பீகார் பொருளாதார ஆய்வின் தற்போதைய பதிப்பின்படி, பீகார் மாநிலப் பொருளாதாரத்தின் அளவு 2024 -2025 ஆம் ஆண்டில் ₹ 9,76,784 கோடியாக இருந்தது[2] பொருளாதார ஆய்வின் தற்போதைய பதிப்பை தற்போதைய துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சர் சாம்ராட் சவுத்ரி 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியன்று பீகார் மாநிலத்தின் சட்டமன்றத்தில் வழங்கினார்.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2024-2025 ஆண்டின் தற்போதைய விலையில் ₹9,76 லட்சம் கோடியாக இருந்தது.2023-2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ₹8,96 லட்சம் கோடியாக இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 14% ஆகும். [4] 2025-26 நிதியாண்டில் பீகாரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹ 10,97,264 கோடியாக (130 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Bihar Economic Survey: State bucked national trend, grew @2.5% in first pandemic year" (in en-us). 2022-02-25. https://www.hindustantimes.com/cities/patna-news/bihar-economic-survey-state-bucked-national-trend-grew-2-5-in-first-pandemic-year-101645807212250.html.
- 1 2 "Bihar’s economy increases to ₹8.54 lakh crore in 2023-24: Dy. CM Samrat Choudhary" (in en-IN). 2025-02-28. https://www.thehindu.com/news/national/bihar/bihar-assembly-session-budget-feb-28-2025/article69274129.ece.
- ↑ "Bihar Economic Survey: 2041 तक बिहार में हर 10 में से 6 शख्स के पास होगा काम, प्रयासों का दिखने लगा असर". Prabhat Khabar (in இந்தி). 2025-03-02. Retrieved 2025-03-03.
- ↑ "Bihar's economy has increased from Rs 2.47 lakh crore in 2011-12 to Rs 8.54 lakh crore in 2023-24". The Economic Times. 2025-02-28. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-0389. https://economictimes.indiatimes.com/news/economy/indicators/bihars-economy-has-increased-from-rs-2-47-lakh-crore-in-2011-12-to-rs-8-54-lakh-crore-in-2023-24/articleshow/118624603.cms?from=mdr.