பி. ஹபீப் முகம்மத்
நீதியரசர் பி. ஹபீப் முகம்மத் | |
---|---|
![]() | |
1850களில் நீதியரசர் ஹபீப் முகம்மத் | |
நீதிபதி, திருவாங்கூர் சமஸ்தானம் | |
பதவியில் 1946–1949 | |
நீதிபதி, திருவாங்கூர் சமஸ்தானம் - கொச்சின் | |
பதவியில் 1949–1951 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சூன் 2, 1899 திருவாங்கூர், திருவாங்கூர் சமஸ்தானம், மதராஸ் , பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 15 மார்ச்சு 1963 திருவனந்தபுரம், கேரளா, இந்தியா | (அகவை 63)
பி. ஹபீப் முகம்மத் (1899-1963) ஓர் இந்திய வழக்கறிஞர் மற்றும் திருவிதாங்கூர் உயர்நீதிமன்றத்தின் முதல் முஸ்லிம் நீதிபதி ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]
ஹபீப் 1899 ஆம் ஆண்டில் வைக்கம் என்ற ஊரில் வசதியான முஸ்லிம் பூந்தரன் குடும்பத்தில் பிறந்தார். இவர் வைக்கம் மெளலவி என்ற பிரபல தொலைநோக்கு, சமூக சீர்திருத்தவாதி மற்றும் சுவதேசபிமணி என்ற செய்திதாளின் நிறுவனர் ஆவார். இவரது பெற்றோர்கள் பக்கீர் மைதீன் மற்றும் முகமது பதும்மா ஆவார். இவர்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் முதல்வர் ஹபீப் முகம்மத். இவரது சகோதரர் முகமது மைதீன் ஓர் இஸ்லாமிய அறிஞர் மற்றும் எழுத்தாளர். இவருக்கு மரியம் பீவி என்ற ஒரு சகோதரி இருக்கிறார்.
ஹபீப் தனது ஆரம்பக் கல்வியை அட்டிங்கல் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். பிறகு திருவனந்தபுரம் எச்.எச்.மஹாராஜா கல்லூரி, திருவனந்தபுரம் (தற்போதைய பல்கலைக்கழகக் கல்லூரி), திருவனந்தபுரம் சட்டக் கல்லூரி ஆகியவற்றில் பட்டம் பெற்றார்.
இவர் வைக்கம் மௌலவி மருமகள் ஹலீமா பீவியை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரது மூத்த மகள் மறைந்த சுபைதா, மெட்ராஸின் முன்னாள் எம்.எல்.சி., முகமது முஸ்தபா சாஹிப்பின் மகன் முகமது கானியை மணந்தார். இளைய மகள் நசீமா, மறைந்த கே.எம்.சீத்தி சாஹிப்பின் மகனான கே. சீத்தி முகமதுவை மணந்தார் .
பணிகள்[தொகு]
ஹபீப், கேரள மாநில சட்டமன்றத்தின் சபாநாயகரான மறைந்த கே.எம்.சீத்தி சபீப்பின் (சட்டக் கல்லூரியில்) சமகாலத்தவர் ஆவார். இவர் முதலில் திருவனந்தபுரத்தில் வழக்கறிஞராக சேர்ந்தார். திருவனந்தபுரத்தின் மாவட்ட நீதிபதியாக வருவதற்கு முன்பு, ஆறு மாதங்கள் திருவனந்தபுரத்தில் முனிசிஃபாகவும் பணியாற்றினார். நீதிபதி ஹபீப் கோட்டயம், கொல்லம், ஆலப்புழா, மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். இவர் 1946 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியானார். மேலும் தனது வாழ்க்கையை எர்ணாகுளத்திற்கு மாற்றினார். [1] [2] இவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக 1951 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
பிற்காலங்களும் மரணமும்[தொகு]
1951 ஆம் ஆண்டில் தனது நீதித்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இவர் முஸ்லிம் லீக்கில் சிறிது காலம் தீவிரமாக செயல்பட்டார். இவர் 1963 ஆம் ஆண்டில் இறந்தார்.