ப. வேலுச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பி. வேலுச்சாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ப. வேலுச்சாமி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் உதயகுமார்
தொகுதி திண்டுக்கல்
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திமுக
வாழ்க்கை துணைவர்(கள்) பரமேஸ்வரி
பிள்ளைகள் நவீன்
சுஸ்மா
இருப்பிடம் ஜவ்வாதுபட்டி, திண்டுக்கல், தமிழ்நாடு, இந்தியா

ப. வேலுச்சாமி (P. Velusamy) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள ஜவ்வாதுபட்டி ஆகும். இவரது தந்தை பெயர் பழனியப்ப கவுண்டர் ஆகும்.[1] இவருக்கு பரமேஸ்வரி என்னும் மனைவியும், நவீன் என்ற மகனும், சுஸ்மா என்ற மகளும் உள்ளனர். இவர் விவசாயம், நிதிநிறுவனம் போன்ற தொழில்கள் செய்து வருகிறார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் 2016 ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அத்தேர்தல் இரத்தானதால் இவரால் போட்டியிட முடியவில்லை.

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், திண்டுக்கல் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://myneta.info/LokSabha2019/candidate.php?candidate_id=5298
  2. "திண்டுக்கல்: திமுக வேட்பாளர் வேலுசாமி.பி வெற்றி". தினத்தந்தி (மே 23, 2019)
  3. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".பிபிசி தமிழ் (மே 23, 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._வேலுச்சாமி&oldid=3169149" இருந்து மீள்விக்கப்பட்டது