பி. வி. நரசிம்ம ராவ் தெலங்காணா கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம்
முந்தைய பெயர்கள் | ஐதராபாத்து கால்நடை மருத்துவக் கல்லூரி, சிறீ பி. வி. நரசிம்ம ராவ் தெலங்காணா மாநில கால்நடை, விலங்கு மற்றும் மீன் அறிவியல் பல்கலைக்கழகம் |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 2014 |
வேந்தர் | தெலங்காணா ஆளுநர் |
துணை வேந்தர் | வாங்கூர் ரவீந்தர் ரெட்டி[1] |
அமைவிடம் | , , 17°19′34″N 78°24′30″E / 17.326235°N 78.4083168°E |
சேர்ப்பு | இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் |
இணையதளம் | tsvu |
பி. வி. நரசிம்ம ராவ் தெலங்காணா கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் (P. V. Narasimha Rao Telangana Veterinary University) என்பது முன்பு ஐதராபாத்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்ரீ பி. வி. நரசிம்ம ராவ் தெலங்காணா மாநில கால்நடை, விலங்கு மற்றும் மீன் அறிவியல் பல்கலைக்கழகம் என வழங்கப்பட்டது. இது இந்தியாவின் தெலங்காணாவில் ஐதராபாத்திலுள்ள இராஜேந்திரநகரில் அமைந்துள்ள ஒரு கால்நடை பல்கலைக்கழகம் ஆகும்.[2] இது 2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் பிரிந்தபோது உருவாக்கப்பட்டது.
வரலாறு
[தொகு]இப்பல்கலைக்கழகம் முதன்முதலில் ஐதராபாத் கால்நடை மருத்துவக் கல்லூரியாக 1946-இல் உசுமானியா பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியாக நிறுவப்பட்டது. இது 1964ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச வேளாண் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது இதன் நிர்வாகத்தின் கீழ் வந்தது. 2005ஆம் ஆண்டு இது சிறீ வெங்கடேசுவரா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டபோது இதன் கீழ் செயல்பட்டது. 2014ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசத்தின் மறுசீரமைப்பு மற்றும் தெலங்காணா உருவானதைத் தொடர்ந்து, தெலங்காணா அரசாங்கத்தின் சட்டத்தின் மூலம், கால்நடை, விலங்கு மற்றும் மீன்வள அறிவியலுக்கான சிறீ பி. வி. நரசிம்ம ராவ் தெலங்காணா மாநில பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.[3] இப்பல்கலைக்கழகம் 24-05-2016 முதல் பி. வி. நரசிம்ம ராவ் தெலங்காணா கால்நடை பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[4][5]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "VCs appointed" (in en-IN). The Hindu. 11 January 2021. https://www.thehindu.com/news/national/telangana/vcs-appointed/article33552479.ece.
- ↑ "Universities". Indian Council of Agricultural Research. Archived from the original on 18 August 2011. Retrieved 10 July 2017.
- ↑ "About Us". Sri P. V. Narasimha Rao Telangana State University for Veterinary, Animal and Fishery Sciences. Retrieved 11 July 2017.
- ↑ "ABOUT US". Retrieved 2021-11-05.
- ↑ "Universities renamed". https://www.thehindu.com/news/national/telangana/universities-renamed/article6268833.ece. பார்த்த நாள்: 2021-11-05.