உள்ளடக்கத்துக்குச் செல்

பி. வி. நந்தினி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தினி ரெட்டி
2018இல் நடந்த நடிகையர் திலகம் பட வெற்றி விழாவில் நந்தினி
பிறப்புஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம் (தற்போதைய தெலங்காணா), இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2011– தற்போது வரை

பி. வி. நந்தினி ரெட்டி ( B. V. Nandini Reddy ) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார், இவர் தெலுங்குத் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார்.[1] 2011 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான அலா மொதலைந்தி மூலம் அறிமுகமானார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

நந்தினி ரெட்டி, ஐதராபாத்தில் பிறந்தவர். இவரது தந்தை பரத். வி. ரெட்டி ஒரு பட்டயக் கணக்கறிஞர் ஆவார். சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் பெங்களூரில் குடியேறினார். இவரது தாயார் ரூபா ரெட்டி வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த "பிங்கிள்" குடும்பத்தைச் சேர்ந்தவர். நந்தினிக்கு உத்தம் ரெட்டி என்ற ஒரு தம்பி இருக்கிறார்.[3]

புனித ஆன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்த இவர்,கோட்டியில் உள்ள தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டம் பெற்றார். புது தில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.[4] தனது பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டுகளில் நாடகங்கள், சொற்பொழிவு மற்றும் துடுப்பாட்டத்தில் தீவிரமாக இருந்தார். தெலுங்கு உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சியான அதர்ஸ் நிகழ்ச்சியில் நடுவர்களில் இவரும் ஒருவர். 

நந்தினி ரெட்டி

தொழில்

[தொகு]

ரெட்டி ஒரு பரஸ்பர நண்பர் மூலம் கங்கராஜு குன்னத்திற்கு அறிமுகமானார். மேலும் 1995 இல் அவரது லிட்டில் சோல்ஜர்ஸ் என்ற குழந்தைகளுக்கான திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அந்த படம் வெளியான பிறகு, ஒளிப்பதிவாளர் ரசூல் எல்லோர் கிருஷ்ண வம்சிக்கு அறிமுகப்படுத்தினார். நடிகை ரம்யா கிருஷ்ணன் வம்சியிடம் இவரை "சந்திரலேகா" படத்தில் இடம் பெற வற்புறுத்தினார். தற்போது "அந்தபுரம் " படத்தின் இந்தி ஆக்கமான "சக்தி" என்ற படத்தின் படப்பிடிப்பு உட்பட வம்சியின் குழுவில் இவர் ஒரு அங்கமாக இருந்தார்.[4]

டக்குபதி சுரேஷ் பாபுவிடம் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார்.

சமந்தா ருத் பிரபு நடிப்பில் 2019 இல் வெளியான ஓ! பேபி படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.[5][6]

சான்றுகள்

[தொகு]
  1. "Tollywood gives kiss a miss – The Times of India". Timesofindia.indiatimes.com. 15 September 2003. பார்க்கப்பட்ட நாள் 29 October 2012.
  2. M. L. Narasimham (22 July 2010). "Arts / Cinema : Charm of romantic comedies". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 29 October 2012.
  3. "All you want to know about #NandiniReddy". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-12.
  4. 4.0 4.1 "Nandini Reddy interview – Telugu Cinema interview – Telugu film director". www.idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 28 August 2017.
  5. Hooli, Shekhar H. (20 June 2019). "Oh Baby trailer review: Critics and audience say Samantha make us cry, laugh and think". International Business Times, India Edition (in english). பார்க்கப்பட்ட நாள் 1 July 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. siva (1 June 2019). "'Oh Baby' gets release date". www.thehansindia.com. பார்க்கப்பட்ட நாள் 1 July 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._நந்தினி_ரெட்டி&oldid=3944565" இலிருந்து மீள்விக்கப்பட்டது