பி. வி. செரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. வி. செரியன்
P. V. Cherian
7 ஆவது மகாராட்டிர ஆளுநர்
பதவியில்
14 நவம்பர் 1964 – 8 நவம்பர் 1969
முதலமைச்சர்வசந்தராவ் நாயக்
முன்னையவர்விஜயலட்சுமி பண்டித்
பின்னவர்அலி யவர் ஜங்
தமிழ்நாடு சட்ட மேலவை தலைவர்
பதவியில்
1952 – 20 ஏப்ரல்1964
முதலமைச்சர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
காமராசர்
முன்னையவர்ஆர். பி. இராமகிருட்டிண ராசு
பின்னவர்எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) பட்டியல்
பதவியில்
1949–1950
முன்னையவர்எஸ். ராமசாமி
பின்னவர்ஆர். ராமநாதன் செட்டியார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 சூலை 1893
ஆலப்புழா, திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு9 நவம்பர் 1969(1969-11-09) (அகவை 76)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா

பாலதிங்கல் வர்கி செரியன் (Palathinkal Varkey Cherian) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.1893 ஆம் ஆண்டு சூலை மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பொதுவாக பி.வி. செரியன் என்று அழைக்கப்பட்ட இவர் ஒரு மருத்துவராகவும் அறுவை சிகிச்சை நிபுணராகவும் அறியப்பட்டார். 1964 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் 1969 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி வரையில் மகாராட்டிர மாநிலத்தின் ஆளுநராக இருந்தார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கையும் மருத்துவத் தொழிலும்[தொகு]

திருவிதாங்கூரில் இருந்த ஆலப்புழாவில் அச்சம்மா மற்றும் குற்றவியல் நீதிபதி பி.எம்.வர்கி தம்பதியருக்கு ஆங்கிலிகன் சிரிய கிறித்துவ பாலதிங்கல் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.[1][3] திருவிதாங்கூரில் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் செரியன் 1912 ஆம் ஆண்டில் சென்னைக்குச் சென்றார். அங்கு இவர் 1917 ஆம் ஆண்டில் மருத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்றார்.[4] பின்னர் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக சேர்ந்தார். 88ஆவது கர்நாடக காலாட்படையின் ஒரு பகுதியாக இந்திய மருத்துவ சேவையில் நியமிக்கப்பட்டார் மற்றும் மெசபடோமியாவின் பல்வேறு நகரங்களில் பணியாற்றினார்.[4][5]

1925 ஆம் ஆண்டு காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்களில் நிபுணத்துவம் பெறுவதற்காக செரியன் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றார். இராயல் கல்லூரியின் அறுவை மருத்துவர்கள் உறுப்பினர் தகுதியை 1926 ஆம் ஆண்டில் பெற்றார். அப்போது மருத்துவ நிர்வாக அமைச்சராக இருந்த ஆர்.என். ஆரோக்கியசாமி முதலியார் மருத்துவ சேவைகளை இந்தியமயமாக்கலில் ஆர்வமாக இருந்தார். எனவே அவர் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் இந்தியக் கண்காணிப்பாளராக செரியானை நியமித்தார். பின்னர், செரியன் கல்லூரியின் முதல்வரானார். ம் மெட்ராசு மாகாணத்தின் முதல் அரசு தலைமை அறுவை நிபுணராக நியமிக்கப்பட்டார்.[4][5][6]

அரசியல் வாழ்க்கை[தொகு]

1948 ஆம் ஆண்டு அரசாங்க மருத்துவப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, செரியன் அரசியலில் அதிக அளவில் தீவிரமாக ஈடுபட்டார்.[6] 1948 ஆம் ஆண்டு மெட்ராசு மாநகராட்சியின் மூத்த அதிகாரியாக இருந்த இவர் 1950 ஆம் ஆண்டில் நகரத்தின் தந்தையாகவும் ஆனார்.[6][7] 1935 ஆம் ஆண்டு செரியன் தாரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மனைவி தாராவும் 1956 ஆம் ஆண்டில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மேயர் பதவியை வகித்த ஒரே இணை செரியன் தாரா இணையர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நவம்பர் 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இறந்த தாரா செரியன், சுதந்திர இந்தியாவின் முதல் பெண் மேயர் என்ற சிறப்பை பெற்றார். எம்.ஜி. ராமச்சந்திரனின் அரசாங்கத்தின் போது இவர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[5][8] 1952 ஆம் ஆண்டு செரியன் மெட்ராசு சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் தலைவரானார். 1959 ஆம் ஆண்டில் சட்ட மேலவை மற்றும் அதன் தலைவர் ஆகிய இரண்டிற்கும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][9]

1964 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று மகாராட்டிர மாநிலத்தின் ஆளுநராக பி.வி.செரியன் பதவியேற்றார்.[10][7][6] ஆளுநர் நிலையில் செரியன் நன்கு அறியப்பட்ட நபராக இருந்தார். ஒரு கிறித்துவராக, இவர் திருச்சபைகளை ஊக்குவித்தார்.[5] இந்திய கிறித்துவர்களின் அகில இந்திய மாநாட்டின் தலைவராக செரியன் இருந்தார்.[7] அதே நேரத்தில், இவர் ரோட்டரி போன்ற அமைப்புகளில் உயர் பதவியிலும் இருந்தார்.[1] இந்திய கிறித்துவ சமூகத்திற்கான இத்தம்பதியரின் சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், டாக்டர் செரியன் மற்றும் அவரது மனைவி தாரா ஆகியோருக்கு ஆறாம் போப் பால் மூலம் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இத்தகைய போப்பாண்டவர் ஆணைகளைப் பெற்ற முதல் கத்தோலிக்கரல்லாத இந்தியர்கள் என்ற சிறப்பு இத்தம்பதியருக்கு கிடைத்தது.[11][12] செரியனின் மனைவி தாரா செரியனுக்கு அவருடைய சமூகப் பணிக்காக இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூசன் விருதும் வழங்கப்பட்டது.[8][13]

ஆளுநராகப் பதவி வகித்த செரியன் 9 நவம்பர் 1969 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று தனது 76 ஆவது வயதில் பதவியில் இருந்தபோது இறந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "DR. P.V. CHERIAN (1893-1969)". www.palathinkal.org. Kottayam.
  2. Maharashtra Governors 2021.
  3. Mooken 1983, ப. 84.
  4. 4.0 4.1 4.2 Sarkar 1967, ப. 83–84.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 (in en) Lokrajya. 25. Directorate-General of Information and Public Relations. 1969. பக். 34,47–48. https://books.google.com/books?id=zWi3N96dY2sC. 
  6. 6.0 6.1 6.2 6.3 (in en) Who's who in India, Burma & Ceylon. Who's Who Publishers (India) Limited. 1967. பக். 29. https://books.google.com/books?id=m8EBAAAAMAAJ. 
  7. 7.0 7.1 7.2 7.3 Nehru 1984, ப. 228.
  8. 8.0 8.1 LBR 2018, ப. 538.
  9. Sarkar 1967, ப. 84.
  10. Bhatt & Bhargava 2006, ப. 156,661–665.
  11. "Protestant Governor Proud Of Papal Honors". thecatholicnewsarchive.org (The Catholic Transcript). 17 December 1965. https://thecatholicnewsarchive.org/?a=d&d=CTR19651217-01.2.169&e=-------en-20--1--txt-txIN--------. 
  12. Legislature 1971, ப. 2.
  13. "Padma Awards Dashboard". www.dashboard-padmaawards.gov.in (in ஆங்கிலம்). Ministry of Home Affairs (Govt. of India). Archived from the original on 2021-06-05. பார்க்கப்பட்ட நாள் 2023-04-03.
முன்னர்
எஸ். ராமசாமி
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1949-1950
பின்னர்
ஆர். ராமநாதன் செட்டியார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._செரியன்&oldid=3690110" இலிருந்து மீள்விக்கப்பட்டது