பி. வி. சுப்பம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பத்தினேனி வெங்கட்ட சுப்பம்மா என்றும் அழைக்கப்படும் பி. வி. சுப்பம்மா (B. V. Subbamma) (பிறப்பு: 1925 ஜூலை 1 - இறப்பு: 2009 ஜனவரி 12) இவர் ஒரு இந்திய இறையியலாளரும் மற்றும் அறிஞருமாவார். கிறிஸ்துவ ஆசிரமங்களை நிறுவியதில் புகழ்பெற்ற இவர், கிறிஸ்துவத்தை ஒரு கலாச்சார கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்ததற்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்டார். இறையியல் பயிற்சியினைப் பெற்ற இந்தியாவின் முதல் பெண்களில் ஒருவரான இவர், 1999 ஆம் ஆண்டில் ஆந்திர எவாஞ்சலிகல் லூத்தரன் தேவாலயத்தால் நியமிக்கப்பட்ட தொடக்க பெண் போதகர்களில் ஒருவராவும் இருந்தார்.

சுயசரிதை[தொகு]

பதினேனி வெங்கட்ட சுப்பம்மா 1925 ஜூலை 1 ஆம் தேதி [1] இந்தியாவின் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள போடிபாலத்தில் ஒரு பாரம்பரிய இந்துக் குடும்பத்தில் பிறந்தார். [2] போடிபாலத்தில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியில் படித்த பிறகு, பெத்தனடிபாடு அரசு உயர்நிலைப் பள்ளியிக்குச் சென்றார். தனது கல்வியின் போது, கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதை இவர் எதிர்த்தார். ஏனென்றால் கிறிஸ்தவ விசுவாசம் என்பது பிற சாதியினருக்கு மட்டுமே என்று நம்பினார். [3] "எல்லா கடவுள்களிலும் இயேசு மிகக் குறைவானவர்" என்று இவர் நம்பினார். இருப்பினும், இவரது உயர்நிலைப் பள்ளியின் பிராமண ஆசிரியரான இராஜகோபால் அய்யங்கார், விவிலியத்தை எதிர்த்து ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்குப் பதிலாக அதைப் படிக்க ஊக்குவித்தார். விவிலியத்தைப் படித்து அதைப் புரிந்துகொண்டபின், 1942 ஆம் ஆண்டில், அவரது இந்து குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். [4] [5]

படிப்பு[தொகு]

தனது ஆரம்பப் படிப்பைத் தொடர்ந்து, சுப்பம்மா ஆந்திர-கிறிஸ்தவக் கல்லூரியில் நுழைந்தார். [6] 1947 இல் இளங்கலை பட்டம் பெற்றார். [7] குண்டூரில் உள்ள புனித சூசையப்பர் கல்வியியல் கல்லூரியில் இளங்கலை கல்வியையும் பெற்றார். பின்னர் ஒரு கற்பித்தல் பள்ளியைத் தொடங்கினார். ஏறக்குறைய ஒரு பத்தாண்டு கால கற்பித்தலுக்குப் பிறகு, இவர் நியூ யார்க் மாநில பல்கலைக்கழகம் மூலம் முதுகலை திட்டத்தில் சேர்ந்தார். 1958 இல் கல்வியில் முதுகலை பட்டம் பெற்றார். அவர் இந்தியாவுக்குத் திரும்பி, இறையியல் பயிற்சியைத் தொடர முடிவு செய்வதற்கு முன்பு சார்லோட் எசுவென்சன் நினைவு விவிலியப் பயிற்சிப் பள்ளியின் முதல்வராக மற்றொரு பத்தாண்டு காலம் பணியாற்றினார். இந்தப் பள்ளியில் 27 ஆண்டுகள் சேவையுடன் தொடர்ந்து முதல்வராக பணியாற்றினார். [8] செரம்பூர் கல்லூரி அமைப்பின் துணை நிறுவனமான ராஜமுந்திரியில் உள்ள ஆந்திர கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் 1968 இல் இளங்கலை பட்டம் பெற்றார். [9] அதே ஆண்டு சூன் மாதத்தில், பெண்களை கல்வியைப் பெறவும், செவிலியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தலைவர்களாகவும் மாற வேண்டும் என்ற குறிக்கோளுடன் ராஜமுந்திரியில் [10] ஒரு கிறிஸ்தவ ஆசிரமத்தை நிறுவினார். [11] 1969 ஆம் ஆண்டில், இவர் அமெரிக்காவுக்குத் திரும்பினார், 1970 இல் கலிபோர்னியாவின் பாசடீனாவில் உள்ள புல்லர் இறையியல் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், ஓகியோ எசுபிரிங்பீல்டில் உள்ள விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தில் கம்மா இறையியல் பள்ளியில் முனைவர் பட்டம் படிக்கத் தொடங்கினார். இவர் அமெரிக்காவில் இருந்தபோது, பல இலூத்தரன் மாநாடுகளில் பேசினார்.

இறையியல்[தொகு]

தனது இறையியல் பயிற்சியினைப் பெற்ற பிறகு, சுப்பம்மா காலனித்துவம், கலாச்சாரம், கிறிஸ்தவம் [12] [13] மற்றும் பெண்களின் வாய்ப்பு குறித்து விரிவாக எழுதினார். [11] [8] இவரது பணி மற்றும் ஊழியத்திற்காக இவர் "மூன்றாம் உலக கிறிஸ்தவ தேவாலயத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க பெண் தலைவர்களில் ஒருவராக" அங்கீகரிக்கப்பட்டார். [8] இந்து பெண்களுக்கு கிறிஸ்தவத்தை அறிமுகப்படுத்துவதில் இவர் கவனம் செலுத்தினார். ஒரு பூர்வீக அணுகுமுறை கலாச்சாரங்களின் புரிதலையும் ஒருங்கிணைப்பையும் கொண்டுவருவதாக நம்பினார். [14] 1977-1984 வரை, ஜெனீவாவில் இலூத்தரன் உலக கூட்டமைப்பின் செயற்குழுவில் சுப்பம்மா பணியாற்றினார். [7] 1997 இல் ஆங்காங்கில் நடைபெற்ற லூத்தரன் உலக கூட்டமைப்பின் 50 வது ஆண்டு மாநாட்டில் பயணிகளில் முன்னோடியாக கௌரவ விருந்தினராக இருந்தார். [15] இவர் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள எக்குமெனிகல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறங்காவலர் குழுவில் பணியாற்றினார். செராம்பூர் பல்கலைக்கழகத்தின் செனட்டில் உறுப்பினராக இருந்தார். பல்கலைக்கழக அவையில் ஒரு பதவியை வகித்த முதல் பெண்மணி இவராவார். 1994 ஆம் ஆண்டில், செராம்பூர் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ தெய்வீகத்தில் முனைவர் பட்டம் வழங்கியது. [16]

தொண்டு[தொகு]

சுப்பம்மா 1985 இல் ஓய்வு பெற்றார். ஆனால் சென்னையின் ஒருங்கினைந்த எவாஞ்சலிகல் இலூத்தரன் தேவாலயங்களுடன் தொடர்ந்து தன்னார்வத் தொண்டு செய்து வந்தார். [7] 1999 பிப்ரவரி 20, அன்று, ஆந்திர எவாஞ்சலிகல் இலூத்தரன் தேவாலயத்தில் 17 பெண்கள் நியமனம் செய்ய அனுமதித்தபோது, இவர் இறுதியாக ஊழியத்தில் நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட 32 ஆண்கள் மற்றும் 17 பெண்களில், சுப்பம்மா மிகப் பழமையானவர். இந்தியாவில் இறையியல் பயிற்சி பெற்ற முதல் பெண்களில் ஒருவராக ஒப்புக் கொள்ளப்பட்டார்.

இறப்பு[தொகு]

இவர் 2009 ஜனவரி 12, அன்று குண்டூரில் இறந்தார். [17]

குறிப்புகள்[தொகு]

 1. "In Memoriam The Rev. Dr. Bathineni Venkata Subbamma". Mumbai, India: The Times of India. 
 2. Women on the move – Her Story. Published by the LWF
 3. Johnson, Jewell. Daily Devotions for Women: Inspiration from the Lives of Classic Christian Women. Barbour Publishing. பக். 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781607426141. 
 4. Subbamma, B.V.. Smoothing the paths: A caste Hindu tells her story. Kathmandu, Nepal: Bhaktivani. 
 5. Yee, Edmond. Leaders in Ministry Series: Bathineni, Subbamma Veeravenkata. Monterey Park, California: Asian and Pacific Islander Community Evangelical Lutheran Church in America. 
 6. "130 years of excellence". Hans India. http://www.thehansindia.com/posts/index/2014-12-12/130-years-of-excellence-120785. பார்த்த நாள்: 11 December 2015. 
 7. 7.0 7.1 7.2 "Bathineni Venkata Subbamma". Kamma Velugu. மூல முகவரியிலிருந்து 9 November 2015 அன்று பரணிடப்பட்டது.
 8. 8.0 8.1 8.2 Tucker & Liefeld 2010.
 9. "Welcome to Andhra Christian Theological College". Hyderabad, India: Andhra Christian Theological College.
 10. Subbamma 1975.
 11. 11.0 11.1 Bennema & Bhakiaraj 2011.
 12. Joy & Duggan 2012.
 13. A Century of Christianity in Southern Manipur: Towards its Indigenisation. Association for North East India Studies. http://www.jneis.com/ojs/index.php/jneisc/article/download/144/88. பார்த்த நாள்: 11 December 2015. 
 14. The Church and Native Culture: A Telugu Lutheran Perspective. Serampore College Theology Department and Bishop's College. http://biblicalstudies.org.uk/pdf/ijt/35-2_080.pdf. பார்த்த நாள்: 12 December 2015. 
 15. "Lutheran World Federation celebrates 50th anniversary of founding". Worldwide Faith News. http://archive.wfn.org/1997/08/msg00204.html. பார்த்த நாள்: 12 December 2015. 
 16. "List of the Recipients of the Degree of Doctor of Divinity (Honoris Causa)". West Bengal, India: Senate of Serampore College (1994). மூல முகவரியிலிருந்து 11 ஜூன் 2014 அன்று பரணிடப்பட்டது.
 17. "In Memoriam The Rev. Dr. Bathineni Venkata Subbamma". Mumbai, India: The Times of India. 13 January 2009. http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOI&BaseHref=TOIH/2009/01/13&PageLabel=4&ForceGif=true&EntityId=Ad00417&ViewMode=HTML&GZ=T. பார்த்த நாள்: 11 December 2015. 

நூற்பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._சுப்பம்மா&oldid=3220819" இருந்து மீள்விக்கப்பட்டது