உள்ளடக்கத்துக்குச் செல்

பி. வி. இராதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. வி. ராதா
பிறப்புஇரஜலட்சுமி
15 ஆகஸ்ட் 1948
பெங்களூர், மைசூர் மாநிலம், இந்தியா
இறப்பு10 செப்டம்பர் 2017[1]
பெங்களூர், கருநாடகம், இந்தியா
பணிநடிகை, திரைப்படத் தயாரிப்பாளர்
வாழ்க்கைத்
துணை

பெங்களூரு விஜயா ராதா (Bengaluru Vijaya Radha) (15 ஆகஸ்ட் 1948 – 10 செப்டம்பர் 2017), பொதுவாக பி. வி. ராதா என்று அழைக்கப்படும் இவர், ஓர் இந்திய நடிகையும் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். 1964 ஆம் ஆண்டு வெளியான நவகோடி நாராயணா என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 300 க்கும் மேற்பட்ட படங்களில் பெரும்பாலும் துணை வேடங்களில் நடித்தார். அவற்றில் 250 கன்னட மொழியிலும், மீதமுள்ளவை தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு மற்றும் இந்தி மொழிகளிலும் நடுத்துள்ளார்.

இராதா, திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான கே. எஸ். எல். சுவாமியை மணந்தார். திரையுலகைத் தவிர இராதா நாடகத்துறையிலும் தன்னை இணைத்துக் கொண்டார். நடவ்ராந்தா என்ற தனது நாடகக் குழுவுடன் நாடகங்களை நிகழ்த்தினார். நாடகம் மற்றும் திரையுலகில் இவரது பங்களிப்பை அங்கீகரித்து, இராதாவுக்கு 2010 இல் ஆன்மீக மற்றும் கலாச்சார மையமான காகினேலே கனக குரு பீடம் மூலம் கனக ரத்னா விருது வழங்கப்பட்டது.[2] தமிழ்த் திரையுலகில் இவர் குமாரி ராதா என்று அழைக்கப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கையும் மற்றும் தொழில்

[தொகு]

இராதா 1948 ஆம் ஆண்டு ஒரு விவசாயக் குடும்பத்தில் இராஜலட்சுமி என்ற பெயரில் பிறந்தார். நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தால் பள்ளிப் படிப்பை கைவிட்டுவிட்டார். 1964 ஆம் ஆண்டு நவகோடி நாராயணா என்ற கன்னடத் திரைப்படத்தில் நடிகர் ராஜ்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். 1966 ஆம் ஆண்டு வெளியான தாழம்பூ என்ற தமிழ் படத்தில் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்தார். 1960கள் மற்றும் 1970களில் தென்னிந்தியத் திரையில் எம். ஜி. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், ஜெமினி கணேசன், அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் ஜெய்சங்கர் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார்,

இறப்பு

[தொகு]

இராதா மாரடைப்பால் செப்டம்பர் 10, 2017 அன்று இறந்தார். [3]

இராதா நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._இராதா&oldid=4257243" இலிருந்து மீள்விக்கப்பட்டது