பி. ராஜ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. ராஜ்குமார்
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்ராஜ்குமார் பத்துமலை
தேசியம்மலேசியர்
பிறப்பு10 திசம்பர் 1964 (1964-12-10) (அகவை 59)
கோலா குபு பாரு, சிலாங்கூர், மலேசியா
உயரம்170 செ.மீ.
எடை59 கிலோ
விளையாட்டு
நாடு மலேசியா
விளையாட்டுஇடைத்தொலைவு ஓட்டம்

பி. ராஜ்குமார் எனும் ராஜ்குமார் பத்துமலை (பிறப்பு: 10 டிசம்பர் 1964); (மலாய்: Batumalai Rajakumar; ஆங்கிலம்: Batumalai Rajakumar) என்பவர் மலேசியாவில் புகழ்பெற்ற இடைத்தொலைவு ஓட்டக்காரர்.[1]

அமெரிக்கா, லாஸ் ஏஞ்சலஸ் 1984 ஒலிம்பிக் 800 மீ; 1500 மீ. போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநித்தவர்.

1984 ஒலிம்பிக் சாதனை நேரங்கள்[தொகு]

  • 1500 மீட்டர் - 3:55.19
  • 800 மீட்டர் - 1:48.19

1985 ஆசியா; மலேசியா சாதனை[தொகு]

  • 800 மீட்டர் - 1:47.37[2][3]

1985-ஆம் ஆண்டு இந்தோனேசியா, ஜகார்த்தாவில் ஆசிய தடகளப் போட்டி விளையாட்டுகள் நடைபெற்றன. அதில் 800 மீட்டர் ஓட்டத்தில், 1:47.37 விநாடிகளில் ஓர் ஆசிய சாதனையைச் செய்தார். அந்தச் சாதனை, 36 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று வரையில் மலேசியாவில் முறியடிக்கப்படவில்லை.[4]

அவருடைய அந்தச் சாதனை முறியடிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார். இப்போது உள்ள தட கள விள்ளையாட்டாளர்கள் தங்களின் ஓட்ட முறைமையை மாற்ற வேண்டும்; முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்கிறார்.[5]

1985 ஆசிய தடகளப் போட்டி விளையாட்டுகளில், இந்தியாவிற்கு 10 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. மலேசியாவுக்கு ஒரே ஒரு தங்கம் கிடைத்தது. அதுவும் வி. ராஜ்குமாரின் 800 மீட்டர் ஓட்டத்தில் கிடைத்தது.

குடும்பம்[தொகு]

மனைவியின் பெயர் சரோஜா. இரு பிள்ளைகள். மகள் கிரித்திகா. மகன் யுவன்.

ராஜ்குமார் தற்சமயம் பல்துறை தொழில் முனைவராகச் சொந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு தங்கும் விடுதி; ஒரு பழத்தோட்டம், ஒரு விலங்குப் பண்ணை, ஒரு தேயிலைத் தோட்டம் மற்றும் ஒரு வீடமைப்பு நிறுவனம் போன்றவற்றை நடத்தி வருகிறார்.[4]

மேற்கோள்[தொகு]

  1. "Rajkumar proved to be the continent's best 800m runner when he won the gold in the 1985 Asian Track and Field championship in Jakarta as a 22 year old. That Asian winning time of 1:47.37s by Rajkumar is still a national record, as no other Malaysians came close". பார்க்கப்பட்ட நாள் 21 March 2022.
  2. Batulamai Rajakumar at Sports Reference Sports Reference
  3. Mariadass, Tony (16 June 2020). "In the 1983 Singapore Sea Games, Rajkumar won the 800m and 1,500m. He also competed in the 1984 Los Angeles Olympics clocking 1:48.19s for the 800m". Level Field. பார்க்கப்பட்ட நாள் 21 March 2022.
  4. 4.0 4.1 "Rajkumar set the 800m national record of 1min 47.37s at the Asian Track and Field championships in Jakarta in 1985. The record still stands". 2009 - 2021 FMT. Archived from the original on 26 ஜூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 21 March 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Athletes can break 800m record with hard work: Rajkumar". www.thesundaily.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 March 2022.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ராஜ்குமார்&oldid=3589867" இலிருந்து மீள்விக்கப்பட்டது