பி. ராஜம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பி. ராஜம் ஐயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

பி. ராஜம் (B. Rajam பி: சூலை 15, 1922 - இ: மே 3, 2009) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக் கலைஞர்.

குடும்பம்[தொகு]

ராஜம் தமிழ் நாடு இராமநாதபுரம் மாவட்டம்[கு 1] காரைக்குடி[1] என்னும் ஊரில் தந்தை பாலசுப்பிரமணியருக்கும் தாயார் இலக்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்[2]. இவரது இளைய சகோதரர் கிருஷ்ணமூர்த்தி.

இசைப் பயிற்சி[தொகு]

இவர் முதன்முதலில் திருக்கோகர்ணம் [3] சுப்பையா பாகவதரிடம் இசை பயின்றார். பின்னர் ஜலதரங்க வித்துவான் குன்னக்குடி கணபதியிடம் இசைப் பயிற்சி பெற்றார். இடையில் கணபதி காலமாகிவிடவே பயிற்சி தடைபட்டது.
ஆனால் இவரது திறமையை தெரிந்து கொண்டு அரியக்குடி இராமானுஜர் இவரைத் தனது சீடராக ஏற்றுக் கொண்டார். ராஜம் அவரிடம் குருகுல வாச முறையில் 10 ஆண்டுகள் இசை பயின்றார்.
இதன் காரணமாக ஏராளமான கிருதிகளை கற்றுக் கொண்டார். பின்னர் சங்கீத கலாநிதி டி. எல். வெங்கட்ராமரிடம் முத்துசுவாமி கிருதிகளை கற்றுக் கொண்டார்.[2]

இசையாளராக[தொகு]

திருப்பாவையிலுள்ள 30 பாடல்களுக்கும் இசை அமைத்தார். அருணாசலக் கவிராயர் எழுதிய இராம நாடகத்தின் பல பாடல்களுக்கும் இசை அமைத்தார். இவற்றையும், தான் இசை அமைத்த வேறு சில பாடல்களையும் வெளியிட்டார்.
திருவாங்கூர் அரச குடும்பத்தவர்களுக்கு இசை கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக 1943 லிருந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.
சுப்பாராம தீட்சிதர் இயற்றிய சங்கீத சம்பிரதாய பிரதர்சினி என்ற நூலை தமிழாக்கம் செய்தது இவரின் சாதனையாக அமைந்தது.[2]
தமிழ்நாடு இசைக் கல்லூரி, மியூசிக் அகாதமியின் ஆசிரியர்கான கல்லூரி ஆகியவற்றில் இசையாசிரியராகப் பணியாற்றினார்.
அமெரிக்காவிலுள்ள அம்ஹேஸ்ட் பல்கலைக்கழகத்தில் (Amherst University) வருகைப் பேராசிரியராக பணியாற்றியதுடன், இங்கிலாந்திலும் வட அமெரிக்காவிலும் மேற்கத்திய இசை பயிலும் மாணவர்களுக்கு செயல்முறை வகுப்புகள் நடத்தியும் உள்ளார்.
இந்திய இசையின் சிக்கலான கோட்பாடுகளை புதிய மாணவர்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவாகவும் எளிமைப்படுத்தியும் கற்றுக் கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தவராக இருந்தார்.[1]

இசைக்கச்சேரிகள்[தொகு]

இவரது முதலாவது இசைக் கச்சேரி 1942ல் திருவையாற்றில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனை விழாவில் இடம் பெற்றது. சென்னையில் முதலாவது கச்சேரி 1956ல் எழும்பூரில் இருந்த செகன்நாத சபாவில் நடைபெற்றது.
பாடல்களை பயபக்தியுடன் பாடுவார். [2]
அகில இந்திய வானொலியில் உயர் தர கலைஞராக பணியாற்றினார். [4]

விருதுகள்[தொகு]

மறைவு[தொகு]

2009 மே மூன்றாம் நாள் தனது 86ஆவது வயதில் ராஜம் காலமானார். [6]

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. தற்போது காரைக்குடி சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. நவராத்திரி கிருதி 3/9 6:25
  2. காரைக்குடி அமைவிட வரைபடம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ராஜம்&oldid=2611689" இருந்து மீள்விக்கப்பட்டது