உள்ளடக்கத்துக்குச் செல்

பி. முசிறிப்புத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. முசிறிப்புத்தன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்பு. செ. முத்துச்செல்வன்
பின்னவர்எம். கே. ராஜமாணிக்கம்
தொகுதிமுசிறி
பதவியில்
1980–1984
முன்னையவர்சி. மாணிக்கம்
பின்னவர்ஏ. மலர்மன்னன்
தொகுதிதிருச்சிராப்பள்ளி-I
பதவியில்
1985–1989
பின்னவர்பாப்பா சுந்தரம்
தொகுதிகுளித்தலை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-10-07)7 அக்டோபர் 1933
முசிறி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்கடை வீதி, முசிறி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
தொழில்அரசியல்வாதி

பி. முசிறிப்புத்தன் (P. Musiriputhan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். முசிறிப்புத்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி நகரினைச் சேர்ந்தவர். முசிறியில் இருந்த கழக உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினைப் பயின்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். முசிறிப்புத்தன் முதன் முதலில் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முசிறி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] மீண்டும் இரண்டாம் முறையாக, 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திருச்சிராப்பள்ளி-I சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2] 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 200-201.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 410-411.{{cite book}}: CS1 maint: year (link)
  3. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 600-602.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._முசிறிப்புத்தன்&oldid=4448785" இலிருந்து மீள்விக்கப்பட்டது