பி. தில்லிபாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. தில்லிபாபு (P. Dillibabu, பிறப்பு: பிப்ரவரி 12, 1965) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், அரூர் தொகுதியிலிருந்து பதிநான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர் ஆவார். அரூர் தொகுதி பட்டியல் சாதியினருக்கான தனித்தொகுதி ஆகும். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்ந்தவர் ஆவார்.[1] இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவை தேர்தலில் அரூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[2] மீன்ணும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியின் சார்பில் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாட்டின், பூரிவாக்கம் என்ற ஊரில் பரமசிவம் ஜெயம்மாள் இணையருக்கு மகனாக 1965 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் நாள் பிறந்தார். இளங்கலை பட்டப்படிப்பு முடித்த இவர், 1982 ஆம் ஆண்டு முதல் சி.பி.எம். கட்சியில் இணைந்த இவர் 1983 ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் பொறுப்பு வகித்தார். இவர் தற்போது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராகவும்,[3] தருமபுரி மாவட்டத்தின் சி.பி.எம். கட்சியின் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

குடும்பம்[தொகு]

இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், பிடரல் காஸ்ட்ரோ என்ற மகனும், அருணப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
  2. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  3. "Thiru. P. Dillibabu (CPI(M)". Legislative Assembly of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._தில்லிபாபு&oldid=3563229" இலிருந்து மீள்விக்கப்பட்டது