உள்ளடக்கத்துக்குச் செல்

பி. டி. புன்னூசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. டி. புன்னூசு
ஆலப்புழா மக்களவைத் தொகுதி உறுப்பினர்
பதவியில்
1952–1957
முன்னையவர்தொடக்கம்
ஆழப்புழா மக்களவைத் தொகுதி உறுப்பினர்
பதவியில்
1957–1962
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்பி. கே. வாசுதேவன் நாயர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 நவம்பர் 1911
திருவல்லா, திருவிதாங்கூர்
இறப்பு1971 (அகவை 59–60)
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்ரோசம்மா புன்னூசு
பிள்ளைகள்1 மகனும், 1 மகளும்

பி. டி. பன்னூசு (P. T. Punnoose)[1] (20 நவம்பர் 1911 - 1971) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் கேரளாவின் அம்பலப்புழா மகளவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

பி. டி. புன்னூசு 20 நவம்பர் 1911இல் திருவிதாங்கூரிலுள்ள திருவல்லாவில் ஐ. தாமஸ் என்பவருக்குப் பிறந்தார்.[3] இவர் சங்கனாச்சேரியிலும் திருவனந்தபுரத்திலும் கல்வி கற்றார்.[1]

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவர், ஒரு கத்தோலிக்கராகவும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராகவும் இருந்த ரோசம்மா என்பவரை 1946இல் திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு மார்த்தோமா சிரியர். ஒரு கத்தோலிக்கப் பெண்ணுக்கும் மார்த்தோமா ஆணுக்கும் இடையில் எந்தத் திருமணமும் அப்பகுதியில் நடந்ததில்லை. இது தவிர, ரோசம்மாவின் குடும்பம் இந்திய தேசிய காங்கிரசை ஆதரித்தது. மேலும் அவர் ஒரு பொதுவுடைமைவாதியை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அந்த நேரத்தில் பொதுவுடைமைவாதிகளுக்கு எதிராக அடக்குமுறை நடத்தும் காவதுறையினரும் அதிகாரிகளும் இவரைத் தேடி வந்தனர். தம்பதிகளுக்கு இடையேயான அனைத்து கிறிஸ்தவ திருமணங்களையும் போல, அந்த நேரத்தில், இருவரும் கொச்சி தேவாலயத்தில் திருத்தந்தையின் சிறப்பு ஒப்புதல் கடிதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

அரசியல் பார்வை

[தொகு]

இவர், கேரளாவில் பொதுவுடைமை இயக்கத்தின் ஆரம்ப தலைவர்களில் ஒருவராவார். இவர் சுதந்திர போராட்ட காலத்தில் தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரசில் தொடங்கினார். பின்னர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சித்தாந்தங்களில் ஈர்க்கப்பட்டார். 1964இல் வரலாற்று பிளவு ஏற்பட்ட பிறகு இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இருந்தார்.

இதையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Punnoose, P.T. "P.T Punnoose". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 3 September 2020.
  2. Punnoose, P.T. "P.T Punnoose". EntranceIndia. பார்க்கப்பட்ட நாள் 3 September 2020.
  3. "Members: Lok Sabha". Loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் September 6, 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._டி._புன்னூசு&oldid=3751174" இலிருந்து மீள்விக்கப்பட்டது