உள்ளடக்கத்துக்குச் செல்

பி. டி. சீனிவாச அய்யங்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. டி. சீனிவாச அய்யங்கார்

பி. டி. சீனிவாச அய்யங்கார் (P. T. Srinivasa Iyengar, 1863–1931) என்பவர் வரலாற்றாய்வாளர், மொழியியல் அறிஞர், மற்றும் கல்வியாளர் ஆவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியவர்.

பிறப்பும் கல்வியும்[தொகு]

தஞ்சை மாவட்டம் புள்ளைபூதங்குடி என்னும் ஊரில் பிறந்த சீனிவாச அய்யங்கார், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியிலும் திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

பணிகள்[தொகு]

  • தாம் படித்த அதே புனித சூசையப்பர் கல்லூரியில் விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். விசாகப்பட்டினம் திருமதி ஏ வி.என். கல்லூரியில் முதல்வராக 27 ஆண்டுகள் பணியாற்றினார்.
  • இவரது வரலாற்று அறிவைக் கண்டுணர்ந்த சென்னைப் பல்கலைக் கழகம் இவரை இந்திய வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியர் பொறுப்பில் பணி யமர்த்தியது.[1]
  • பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வரலாறு மற்றும் அரசியல் துறையில் பேராசிரியராகப் பணியமர்த்தியது.
  • சீனிவாச அய்யங்கார் வரலாற்றில் புலமை கொண்டவராய் இருந்தபோதிலும் விசய நகரக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
  • சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிப் பேரவை உறுப்பினராகவும் பல ஆண்டுகள் இருந்துள்ளார்.
  • சென்னை மாநிலக் கல்வி மாநாட்டுக்கு மூன்று முறை தலைமை தாங்கினார்.
  • பல்லவர் சரித்திரம், இந்தியர் சரித்திரம், திருச்சி ஜில்லா, மராட்டிய காலம் என நான்கு நூல்கள் தமிழில் எழுதினார். பிற நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன.

மேற்கோள்[தொகு]

தமிழக வரலாற்றறிஞர்கள், இளங்கணி பதிப்பகம்,சென்னை--15

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-04-22. பார்க்கப்பட்ட நாள் 2008-04-22.