பி. ஜே. ஜமீர் அஹ்மத் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. ஜே. ஜமீர் அஹ்மத் கான்
கர்நாடக அரசின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மே 2023
ஆளுநர்தவார் சந்த் கெலாட்
சித்தராமையாவின் இரண்டாவது அமைச்சரவை
முதலமைச்சர்சித்தராமையா
துறைகள்
பதவியில்
6 ஜூன் 2018 – 22 ஜூலை 2019
ஆளுநர்வாஜுபாய் வாலா
சித்தராமையாவின் இரண்டாவது அமைச்சரவை
முதலமைச்சர்எச். டி. குமாரசாமி
துறைகள்
  • உணவு & பொது விநியோகம்
  • சிறுபான்மையினர் நலம்
முன்னையவர்யு. டி. காதர்
பின்னவர்
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2005
முன்னையவர்சோ. ம. கிருசுணா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 ஆகத்து 1966 (1966-08-01) (அகவை 57)
கோலார், கருநாடகம், இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்சியாயுள்ளா கான்
வேலைSocial service

பி.ஜே. ஜமீர் அஹ்மத் கான் (B. Z. Zameer Ahmed Khan) சட்டமன்ற உறுப்பினராகவும்,[1] கர்நாடக மாநில ஜனதா தளத்தின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.[2][3] கர்நாடக அரசின் ஹஜ் மற்றும் வக்ஃபு வாரியத்தின் முன்னாள் அமைச்சராகவும், சாம்ராஜ் பேட்டை தொகுதியில் இருந்து 3 முறை உறுப்பினராகவும் இருந்தார்.

2005 ஆம் ஆண்டில் எஸ். எம். கிருஷ்ணா சாம்ராஜ்பேட்டை தொகுதி உறுப்பினர் பதவியை விட்டு விலகி மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இது ஜமீரின் அரசியல் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. இவர் சாம்ராஜ்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு ஆர்.வீ. தேவராஜைத் தோற்கடித்தார். அதன்பிறகு, ஜனதாதளம்-பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசாங்கத்தில் எச். டி. குமாரசாமியின் தலைமையின் கீழ் இருந்த அமைச்சரவையில் கீழ் ஹஜ் மற்றும் வக்ஃப் அமைச்சராக ஜமீர் பதவி ஏற்றார்.

2016 ல், இந்தியாவின் மாநிலங்களவைக்கு நடந்த தோ்தலில், கட்சி மாற்றி வாக்களித்ததற்காக பல்வேறு கட்சியியை சாா்ந்த ஏழு உறுப்பினா்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனா். இந்த ஏழு உறுப்பினா்களில் இவரும் ஒருவா் ஆவாா். 25 மார்ச் 2018 அன்று, ஜமீர் மற்றும் ஜனதாதள கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரசில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.[4][5][6]

ஆதாரங்கள்[தொகு]

  1. "bz zameer ahmed khan: Congress leader BZ Zameer Ahmed Khan takes oath as Cabinet Minister of Karnataka | City - Times of India Videos". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-22.
  2. "Zameer Ahmed Khan.B.Z". பார்க்கப்பட்ட நாள் 29 December 2012.
  3. "Zameer throws a fit over 'slight to Sharief' - Times Of India". archive.ph. 2013-01-26. Archived from the original on 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2021-08-28.
  4. Moudgal, Sandeep (January 7, 2018). "Zameer: B Z Zameer Ahmed K2han next prominent Muslim leader in Congress?". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-28.
  5. "Not just Congress, even BJP doors open for B Z Zameer Ahmed Khan". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2017-12-08. பார்க்கப்பட்ட நாள் 2021-08-28.
  6. "Seven rebel JD(S) MLAs join Congress in Karnataka". The Times of India (in ஆங்கிலம்). March 25, 2018. பார்க்கப்பட்ட நாள் 2021-08-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜே._ஜமீர்_அஹ்மத்_கான்&oldid=3786318" இலிருந்து மீள்விக்கப்பட்டது