பி. ஜி. ஆனூர் ஜெகதீசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. ஜி. ஆனூர் ஜெகதீசன் (P. G. Anoor Jegadeesan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் தமிழக சட்டமன்றத்தில், மூன்றுமுறை அங்கம் வகித்துள்ளார். இவர் 1977, 1980, மற்றும் 1984 தேர்களில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] 1984-ல் கதர் கிராம தொழில் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[4] எம்.ஜி.ஆர், மறைவுக்கு பின் திராவிடர் கழகத்தில் இணைந்து பகுத்தறிவாளர் கழக மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜி._ஆனூர்_ஜெகதீசன்&oldid=3713486" இருந்து மீள்விக்கப்பட்டது