பி. சுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. சுப்பிரமணியன் (P. Subramanian) தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாநகரத்தின் சிங்காநல்லூர் பகுதியில் வாழ்ந்த பிரபல தொழிலதிபரும், தயாள குணம் கொண்டவரும், சாந்தி சமூகப் பணிகள் எனும் அறக்கட்டளையின் நிர்வாகியும், பி. எஸ். ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், பின்னர் அதே கல்லூரியில் விரிவுரையாளராகவும், கோவை கியர் நிறுவனத்தின் நிறுவனத் தலைவராகவும் இருந்தவர். இவர் தனது 78-ஆம் வயதில் உடல்நலக் குறைவால் 11 டிசம்பர் 2020 அன்று கோயம்புத்தூரில் காலமானார்.[1][2][3][4]

வரலாறு[தொகு]

கோவை பி. எஸ். ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற பி. சுப்பிரமணியன் 'சாந்தி கியர்ஸ்' எனும் உற்பத்தி தொழிற்சாலையை 1972-ஆம் ஆண்டு தொடங்கினார். அதன் மூலம், இயந்திர உதிரி பாகங்களை உற்பத்தி செய்து, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வேகமாக வளர்ச்சியடைந்தார். இதனால் இவர் கோவையின் கியர் மேன் என அழைக்கப்பட்டார். இவர் சாந்தி என்பவரை மணந்தார். சுப்பிரமணியன், 1996-இல் தனது மனைவி சாந்தியின் மறைவிற்குப் பின், சாந்தி கியர் உற்பத்தி நிறுவனத்தை 2012 அன்று சென்னை முருகப்பா குழுமத்திற்கு விற்கப்பட்டது. 1996-இல் சாந்தி சமூகப் பணிகள் எனும் அறக்கட்டளையை நிறுவினார். [5]சாந்தி சமூகப் பணிகள் அறக்கட்டளை வெளியாரிடம் பணமாகவோ அல்லது பொருளாகவோ நன்கொடை பெறுவதில்லை.[6]

பத்ம சிறீ விருது[தொகு]

இந்திய அரசு இவரது மறைவிற்குப் பின் 2021-ஆம் ஆண்டில் பத்ம சிறீ விருது அளித்து பெருமைபடுத்தியது. [7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாந்தி சோஷியல் சர்வீசஸ் சுப்பிரமணியன் - கோயம்புத்தூர் மக்களின் கண்ணீர் அஞ்சலி
  2. `கோவை சாந்தி சமூக சேவை' சுப்பிரமணியம் காலமானார்!
  3. ‘Gear man’ of Coimbatore, P. Subramanian, no more
  4. Coimbatore's beloved 'gear man' P Subramanian passes away at 79
  5. Coimbatore ‘gearman’ touched hearts with quality, affordable food
  6. SHANTHI SOCIAL SERVICES
  7. Late industry captain, centenarian farmer awarded Padma Shri
  8. ததும்பாத நிறைகுடம்: பத்மஸ்ரீ விருது சூட்டிய மகுடம்!

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சுப்பிரமணியன்&oldid=3537764" இருந்து மீள்விக்கப்பட்டது