பி. சிவசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. சிவசாமி (பிறப்பு: சூன் 20, 1943) சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், இராங்கியன் விடுதி எனும் ஊரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை சிங்கப்பூரிலுள்ள இராமகிருஸ்ணா பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியிலும் பெற்றார்.

தொழில்[தொகு]

தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் நன்கு தேர்ச்சிபெற்றிருந்த இவர் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

பதவிகள்[தொகு]

சிங்கப்பூர் தமிழாசிரியர் கழகத்தின் பொருளாளராகவும், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளராகவும், சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் செயலவை உறுப்பினராகவும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்க 25வது ஆண்டு வெள்ளிவிழா மலரின் பொறுப்புக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இலக்கியப் பணி[தொகு]

1958ல் எழுதத் தொடங்கிய இவர் சிறுகதை, கட்டுரை முதலான துறைகளில் கூடிய ஆர்வம் செலுத்திவந்தார். இவரது முதல் கட்டுரை தமிழ் முரசு மாணவர் மணிமன்றத்தில் வெளிவந்தது. தொடர்ந்து இவரது படைப்புகள் சிங்கப்பூர், மலேசியா சிற்றிதழ்களிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

எழுதியுள்ள நூல்[தொகு]

  • தனிமரம் (சிறுகதைத் தொகுப்பு)

பெற்ற பரிசுகள்[தொகு]

இலக்கியப் போட்டிகளின் இவர் பல பரிசில்களைப் பெற்றுள்ளார்.

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சிவசாமி&oldid=2713091" இருந்து மீள்விக்கப்பட்டது