பி. சந்திரகுமார்
பி. சந்திரகுமார் | |
|---|---|
| பிறப்பு | கொல்லங்கோடு, பாலக்காடு மாவட்டம், கேரளம், இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| பணி | திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1977–தற்போது வரை |
| உறவினர்கள் | பி. சுகுமார் (தம்பி) பி. கோபிகுமார் (தம்பி) |
பி. சந்திரகுமார் (P. Chandrakumar) என்பவர் முக்கியமாக மலையாளத் திரையுலகில் பணியாற்றிய ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் ஆவார்[1]. இவர் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோட்டில் பிறந்தார்[1]. இவருடைய தம்பியான பி. சுகுமார் என்பவரும் மலையாளத் திரையுலகில் ஒரு புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஆவார்[1]. மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களான சத்யன் அந்திக்காடு, கமல் ஆகியோர் இவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள் ஆவர்[1].
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]சந்திரகுமாரின் தந்தை குமரன் நாயர் காவல் துறையிலும் மற்றும் விஷ வைத்தியராகவும் (Venom Doctor) பணியாற்றியவர்[1]. சந்திரகுமார் தனது 14 வயதிற்கு முன்பே தந்தையிடம் இருந்து விஷ வைத்தியம் கற்றுக் கொண்டு பணியாற்றத் தொடங்கினார்[1]. மேலும் இவர் கொல்லங்கோடு அரண்மனையில் சுற்றுலாப் பயணிகளுக்காகக் கதகளி நடனமும் ஆடி வந்தார்[1]. இவரது கதகளி நடனத் திறமையைக் கண்டு ஈர்க்கப்பட்ட 'வாசு ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் வாசு மேனன் இவரைத் திரைப்படத் துறைக்கு அழைத்தார், இது இவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது[1].
திரை வாழ்க்கை
[தொகு]இவர் 1970களின் இறுதியில் இருந்து குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்[1]. 1988 ஆம் ஆண்டு பைபிள் கதையை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கிய 'ஆதிபாபம்' திரைப்படம் மலையாள திரை வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது[1]. வெறும் ₹7.5 லட்சம் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் ₹2.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது[1]. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இத்துறையில் அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார்[1]. இவர் தனது பெரும்பாலான திரைப்படங்களுக்குத் தானே ஒளிப்பதிவும் செய்துள்ளார்[1]. இவருடைய 'மினி' (1995) என்ற திரைப்படம் குடும்ப நலன் சார்ந்த சிறந்த திரைப்படத்திற்கான 43-ஆவது தேசியத் திரைப்பட விருதை வென்றது[2].
இயக்கிய சில முக்கியத் திரைப்படங்கள்
[தொகு]திரைப்படவியல்
[தொகு]- புத்தம் புது நேரம் (2026) - தமிழ்
- வேலோத்சவம் (2025) - மலையாளம் (விவசாயிகளின் கதை)
- கெதிகா (2024) (இது ஒரு கெத்தா கதை)
- செம்மரத்தி பூக்கும் காலம் (2023)
- மினி (1996)
- அக்னிசலபங்கல் (1993)
- திரைசீலக்குப் பின்னில் (1993)
- ஆலஸ்யம் (1990)
- ரோசா ஐ லவ் யூ (1990)
- ஊர்வசி (1990)
- கல்பனா ஹவுஸ் (1989)
- கனன சுந்தரி (1989)
- ரதிபாவம் (1989)
- ஆதிபாபம் (1988)
- மினி (1995)
- தடவரையிலே ராஜக்கண்மார் (1989)
- ஜங்கிள் பாய் (1987)
- குறுக்கன் ராஜவாய் (1987)
- பிசி 369 (1987)
- யாகாக்னி (1987)
- இத்ர மாத்திரம் (1986)
- கருத்த குதிரை (1986)
- நான் பிறந்த நாட்டில் (1985)
- உயரும் நான் நாடகே (1985)
- தீரே பிரதீக்ஷிக்காதே (1984)
- ஆனா (1983)
- என்னே நான் தேடுன்னு (1983)
- ரத்திலயம் (1983)
- ஆயுதம் (1982)
- ரக்தசாக்ஷி (1982)
- நான் ஏகனானு (1982)
- த்ரோஹி (1982)
- ஆரத்தி (1981)
- காட்டுக்கள்ளன் (1981)
- அவதாரம் (1981)
- தண்ட கோபுரம் (1981)
- சம்பவம் (1981)
- தடவரா (1981)
- அதிகாரம் (1980)
- ஏர் ஹோஸ்டஸ் (1980)
- அரங்கமும் அனியறையும் (1980)
- தீபம் (1980)
- ஏடந்தொட்டம் (1980)
- இதிலே வந்தவர் (1980)
- காவல் மாடம் (1980)
- பிரளயம் (1980)
- தீரம் தேடுன்னவர் (1980)
- அக்னி பர்வதம் (1979)
- அக்னி வியூகம் (1979)
- எனிக்கு நான் சொந்தம் (1979)
- நீயோ ஞானோ (1979)
- பிரபாத சந்தியா (1979)
- சுத்திகலசம் (1979)
- அனுபூதிகளுடே நிமிஷம் (1978)
- அஸ்தமயம் (1978)
- ஜல தரங்கம் (1978)
- மனஸொரு மயில் (1977)