பி. கோவிந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. கோவிந்தன் (P. Govindan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தாரமங்கலம் தொகுதியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2001 மாநில சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு கட்சியின் ஆதரவு கிடைக்காததால் தொகுதியில் இவருக்குப் பதிலாக பி.என். குணசேகரன் போட்டியிட்டார்.[2] 2006 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தாரமங்கலத்தில் கட்சி வேட்பாளருக்கு எதிராக வேலை செய்ததாகக் கூறி இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 6. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. "10 candidates in PMK first list". தி இந்து. 17 April 2001. http://www.thehindu.com/2001/04/17/stories/0417223c.htm. பார்த்த நாள்: 2017-05-09. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "ADMK, DMK facing rebellion". Rediff. 2 April 2006. http://www.rediff.com/news/report/tn/20060402.htm. பார்த்த நாள்: 2017-05-09. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கோவிந்தன்&oldid=3742016" இலிருந்து மீள்விக்கப்பட்டது