உள்ளடக்கத்துக்குச் செல்

பி. கே. போக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. கே. போக்கர்
2025-இல் பி. கே. போக்கர்
பிறப்பு1 சூன் 1954 (1954-06-01) (அகவை 72)
கோழிக்கோடு, கேரளம், இந்தியா
பணிகல்வியாளர்
வாழ்க்கைத்
துணை
ரெம்லா சி. கே.
பிள்ளைகள்2
பள்ளிமார்க்சியம்
முக்கிய ஆர்வங்கள்
பின்நவீனத்துவம், தத்துவம், பாசிச விமர்சனம், பண்பாட்டு ஆய்வுகள்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
கேரளத்தில் பின்நவீனத்துவப் போக்குகள் குறித்த மார்க்சியப் பார்வை; அடையாளம், வர்க்கம் மற்றும் பாலினம்.
வலைத்தளம்
www.pkpokker.com

பி. கே. போக்கர் (P. K. Pokker) (பிறப்பு: 1 ஜூன் 1954) கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் ஓர் இந்தியக் கல்வியாளர் ஆவார். இவர் கேரள மாநில மொழிகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பின்னர், 2015 ஜூலை 1 முதல் 2017 ஜூலை வரை புது தில்லியில் உள்ள இந்திய தத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் மூத்த ஆய்வாளராகவும், 2018 முதல் 2021 பிப்ரவரி வரை கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வைக்கம் முகமது பஷீர் இருக்கையின் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றினார். தற்போது இவர் கேரளத்தின் திரூரில் உள்ள துஞ்சத்து எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் புலத்தின் தலைவராக உள்ளார். 1996-இல் வெளியான இவரது முதல் நூலான ஆதுனிகோத்தரத்தயுடே கேரளீய பரிசரம் (கேரளச் சூழலில் பின்நவீனத்துவம்) கேரளத்தில் பரவலான கவனத்தைப் பெற்றதுடன், 1997-இல் இலக்கிய விமர்சனத்திற்கான 'தாயத் விருதை'யையும் வென்றது.

2007-இல் புலமைசார் இலக்கியத்திற்கான கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். 2023-இல் முகம்மது பஷீர் குறித்த இவரது ஆய்வுக்காக கேரள சாகித்ய அகாதமி இவருக்கு 'விலாசினி விருது' வழங்கி கௌரவித்தது. இவரது முதல் நூலில், குறிப்பாக பனிப்போருக்குப் பிந்தைய உலகின் கலாச்சாரச் சூழலைப் புரிந்துகொள்வதில் புதிய கோட்பாட்டு அணுகுமுறைகளின் பங்கு குறித்து விளக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவர் பல தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். கல்வித்துறையில் பல முனைவர், முதுதத்துவமாணி ஆய்வாளர்களை இவர் உருவாக்கியுள்ளார். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும், செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்களில் ஏராளமான கட்டுரைகளும் இவரது பங்களிப்புகளாக உள்ளன.

விருதுகள்

[தொகு]
  • 1996 இல் இலக்கிய விமர்சனத்திற்கான 'அபுதாபி சக்தி விருது' (தாயத் சங்கரன் விருது).[1]
  • ஸ்வத்வ ராஷ்ட்ரீயம் - என்ற படைப்பிற்காக 2009 இல் புலமை இலக்கியத்திற்கான கேரள சாகித்ய அகாதமி விருது.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Thayattu Award for literary criticism". Keralaculture.org. Retrieved 5 January 2023.
  2. ↑ "Sahitya Akademi awards announced". தி இந்து. 19 April 2009 இம் மூலத்தில் இருந்து 22 April 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090422154508/http://www.hindu.com/2009/04/19/stories/2009041954720500.htm. பார்த்த நாள்: 5 January 2023.
  3. ↑ "കേരള സാഹിത്യ അക്കാദമി അവാര്‍ഡുകള്‍ പ്രഖ്യാപിച്ചു". Webdunia.com. Retrieved 5 January 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._போக்கர்&oldid=4639508" இலிருந்து மீள்விக்கப்பட்டது