உள்ளடக்கத்துக்குச் செல்

பி. கே. நாராயண பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. கே. நாராயண பிள்ளை
பிறப்பு(1879-03-21)21 மார்ச்சு 1879
அம்பலப்புழா, ஆலப்புழா, திருவிதாங்கூர்
இறப்பு10 பெப்ரவரி 1936(1936-02-10) (அகவை 56)
திருவிதாங்கூர்
பணி
  • இலக்கிய விமர்சகர்
  • கட்டுரையாளர்
  • அறிஞர்
  • இலக்கியவாதி
  • கவிஞர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • பஞ்சானானந்தே விமர்சத்திராயம்
  • லெகுவியாகரனம்
  • வியாகரன பிரவேசிகா
  • சாகித்ய பஞ்சானந்தே கிருத்திகள்
பெற்றோர்
  • தாமோதரன் பிள்ளை
  • குஞ்சுலட்சுமி அம்மா
வாழ்க்கைத்
துணை
பாருக்குட்டி அம்மா

பி. கே. நாராயண பிள்ளை (P. K. Narayana Pillai, 21 மார்ச் 1879-10 பிப்ரவரி 1936) சாகித்ய பஞ்சானன் பி. கே நாராயண பிள்ளை என நன்கு அறியப்பட்ட இவர் ஒரு இந்திய இலக்கிய விமர்சகரும், கட்டுரையாளரும், அறிஞரும், இலக்கணவாதியும் மற்றும் மலையாள மொழிக் கவிஞரும் ஆவார். மலையாளத்தில் இலக்கிய விமர்சனங்களின் முன்னோடிகளில் ஒருவரான இவர், பஞ்சானானந்தே விமர்ஸ்திராயம், துஞ்சத்து எழுத்தச்சன், செருசேரி நம்பூதிரி மற்றும் குஞ்சன் நம்பியார் ஆகியோரின் எழுத்துக்களின் விமர்சனம் மற்றும் மலையாள இலக்கணத்தின் இரண்டு புத்தகங்களான லெகுவ்யாகரணம் மற்றும் வியாகரன பிரவேசிகா உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். கேரள உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், சிறீ மூலம் பிரபல சட்டசபையின் உறுப்பினராகவும், சமஸ்தா கேரள சாகித்ய பரிஷத்தின் நிறுவனத் தலைவராகவும் இருந்தார்.

வாழ்க்கை

[தொகு]

பி. கே. நாராயண பிள்ளை தென்னிந்தியாவின் கேரளாவில் இன்றைய ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அம்பலப்புழாவில் 1879 மார்ச் 21 அன்று, பொழிந்தேரி மடத்தில் தாமோதரன் பிள்ளை மற்றும் கடமட்டுவெட்டிள் குஞ்சுலட்சுமி அம்மா ஆகியோருக்கு பிறந்தார்.[1] சாமிக்குட்டி ஆசான், அனந்தகிருஷ்ண ஐயர் மற்றும் இராமன் ஆசான் போன்ற உள்ளூர் ஆசிரியர்களின் கீழ் பாரம்பரிய முறையில் ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, தனது முறையான பள்ளிப் படிப்பை அம்பலப்புழாவில் முடித்து 1896 இல் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் திருவனந்தபுரத்தில் தனது இளங்கலை படிப்பை முடித்தார். பிறகு, அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். அதே நேரத்தில், சட்டமும் பயின்றார், பட்டம் பெற்ற பிறகு, 1909 இல் வழக்கறிஞராகப் பயிற்சி பெறத் தொடங்கினார். அடுத்த ஆண்டு, சிறீ மூலம் பிரபல சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  கோட்டயம், ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்ற பிறகு, 1929 ஆம் ஆண்டில் கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக ஆனார்.[2] பின்னர், சிறீ மூலம் பிரபல சட்டசபையில் அம்பலப்புழாவையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். கொச்சி சமஸ்தா கேரள சாகித்ய பரிஷத் நிறுவப்பட்டபோது, இவர் அதன் நிறுவனர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெளியீடுகள்

[தொகு]

நாராயண பிள்ளை 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டார். பெரும்பாலும் இலக்கிய விமர்சனம், மலையாளத்தில் இலக்கிய விமர்சனங்களின் முன்னோடிகளில் ஒருவராக இருந்தார். பஞ்சானானந்தே விமர்சத்திராயம், துஞ்சத்து எழுத்தச்சன், செருசேரி நம்பூதிரி மற்றும் குஞ்சன் நம்பியார் ஆகியோரின் எழுத்துக்களைப் பற்றிய விமர்சனம் அவரது முக்கிய படைப்புகளில் ஒன்றாகும். மேலும் இந்த புத்தகம் கேரள சங்கீத நாடக அகாடமியால் வெளியிடப்பட்டது.[3][4][5] மலையாள இலக்கணத்தில் லெகுவியாகரனம் மற்றும் வியாகரன பிரவேசிகா ஆகிய இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.[6][7] சாகித்ய பஞ்சானந்தே கிருத்திகள் என்ற நான்கு தொகுதிகள் கொண்ட படைப்பு இவரது அனைத்து முக்கிய படைப்புகளையும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.[8]

சொந்த வாழ்க்கை

[தொகு]

பாருகுட்டி அம்மா என்பவரை மணந்த நாராயண பிள்ளை, 1936 பிப்ரவரி 10 அன்று தனது 56 வயதில் காலமானார்.[2]

நினைவு

[தொகு]

கேரளாவின் முதல் நூலகங்களில் ஒன்றான பி. கே. நினைவு நூலகம், கேரளாவில் நூலக இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பி. என். பணிக்கரால் இவரது நினைவாக நிறுவப்பட்டது. பணிக்கர் அதன் செயலாளராக பணியாற்றினார். திருவிதாங்கூர் மாநிலத்தில் உள்ள 47 நூலகங்களின் பிரதிநிதிகள் 1945 செப்டம்பர் 16 அன்று இங்கு கூடி, கேரளாவின் முதல் நூலக இயக்கமான திருவிதாங்கூர் கிரந்தசால சங்கத்தை உருவாக்கினர்.[9] தற்செயலாக, சங்கத்தின் பதிவேட்டில் பி. கே. நினைவு நூலகம் முதல் பதிவாக இருந்தது..[10] எம். கோபாலகிருஷ்ணன் நாயர் எழுதிய "சாகித்ய பஞ்சானன் பி கே நாராயண பிள்ளை" என்ற தலைப்பில், நாராயண பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, "பாரதிய சாகித்ய சில்பிகள்" (இந்திய இலக்கியத்தை உருவாக்கியவர்கள்) என்ற தொடரின் கீழ், சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ளது.[11] பிரபல நாடக ஆசிரியரான டி. என். கோபிநாதன் நாயர் இவரது மகனும், பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகரான ரவி வள்ளத்தோள் இவரது பேரனும் ஆவர். மலையாள திரைப்பட நடிகர் டி. பி. மாதவன் மற்றொரு பேரன் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-04-23. Retrieved 2019-04-23.
  2. 2.0 2.1 "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-04-23. Retrieved 2019-04-23."Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 23 April 2019. Retrieved 23 April 2019.
  3. K, Narayana Pillai P. (1968). Thunchathezhuthachan (in Malayalam). Kottayam: National Book Stall.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. K, Narayana Pillai P. (1916). Krishnagatha - Oru Niroopanam (in Malayalam). Kottayam: Central Travancore Bk depot.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  5. Narayana Pillai, P. K. (1980). Panchananante vimarsathrayam (in English). Thrissur: Kerala Sangeetha Natak Akademi.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  6. Narayana Pillai, P. K. (1995). Leghuvyakaranam (in English). Thiruvananthapuram: State Institute of Languages.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  7. Narayana Pillai, P. K. (1995). Vyakarana pravesika (in English). Thiruvananthapuram: State Institute of Languages.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  8. "List of works". Kerala Sahitya Akademi. 2019-04-23. Retrieved 2019-04-23.
  9. Swaroop, Vishnu (19 June 2019). "Reading awareness vehicle to visit govt schools, villages in Coimbatore district". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 2020-04-21.
  10. Staff Reporter (2011-11-06). "Chandy launches Platinum Jubilee celebrations of PK Memorial". The Hindu (in Indian English). Retrieved 2019-04-24.
  11. Gopalakrishnan Nair M (2003). Sahitya Panchanan P K Narayana Pillai. Bharathiya Sahitya Silpikal. New Delhi: Sahitya Akademi. ISBN 9788126016396.

நூல் ஆதாரங்கள்

[தொகு]

மேலும் வாசிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._நாராயண_பிள்ளை&oldid=4338973" இலிருந்து மீள்விக்கப்பட்டது