பி. கே. திரேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி.கே.திரேசியா (12 மார்ச் 1924 - 18 நவம்பர் 1981) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பெண் கட்டடப் பொறியாளராவார். ஆசியாவிலேயே ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறியியலராகப் பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமையையும் உடையவராவார்..[1][2][3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

1924 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள எடத்திருத்தியில் பக்தியுள்ள சிரிய கத்தோலிக்க குடும்பத்தில் காக்கப்பன், குஞ்சாலிச்சி என்ற பெற்றோருக்கு ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர் திரேசியா. காட்டூரில் உள்ள செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்துள்ளார். தொடர்ந்து, தனது மகள் பொறியியல் பட்டப்படிப்பைப் படிக்க வேண்டும் என்ற இவரது தந்தையின்  கனவை நிறைவேறும் பொருட்டு கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் (CEG), சக பெண் பொறியாளர்களான[4] அய்யாலசோமயாஜுலா லலிதா மற்றும் லீலாம்மா கோஷி ஆகியோருடன் குடிசார் பொறியியல் படித்துள்ளார்.[5] இரண்டாம் உலகப் போரின் காரணமாக அவரது பட்டப்படிப்பு மூன்றரை ஆண்டுகளாக சுருக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1944 ஆம் ஆண்டில் இம்மூவரும், இந்தியாவின் முதல் மூன்று பெண் பொறியாளர்களாக பட்டம் பெற்றனர்,[5]

பொறியியலராக வாழ்க்கை[தொகு]

பொறியாளர் பட்டம் பெற்ற பிறகு, பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த கொச்சி இராச்சியத்தின் பொதுப்பணி ஆணையத்தில் பிரிவு அதிகாரியாக தனது பணியை ஆரம்பித்துள்ள திரேசியா, முலகுன்னத்துகாவு டிபி சானடோரியத்தின் உதவிக் கட்டுமானப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.[6] 1956 ஆம் ஆண்டில் நிர்வாக பொறியாளரான திரேசியா, அதன்பொருட்டு எர்ணாகுளத்திற்கு குடிபெயர்ந்து அங்கே ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர் 1966 ஆம் ஆண்டில், கோழிக்கோடு சாலைகள் மற்றும் கட்டிடங்களின் கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 1971 ஆம் ஆண்டில், கேரள மாநிலத்தின் தலைமைப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் தலைமைப் பொறியாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்,ர்.

எட்டு ஆண்டுகள் தலைமைப் பொறியாளராக இருந்து திறம்பட மேலாண்மை செய்து வந்த திரேசியா, மொத்தமாக முப்பத்துநான்கு ஆண்டுகள் கேரள பொதுப்பணித்துறையில் பணியாற்றிய பிறகு, 1979 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றுள்ளார். ஓய்வுக்கு பின்னர் தாஜ் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிறுவன ஆலோசகராக பணிபுரிந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Roots and wings : inspiring stories of Indian women in engineering. 2018. https://www.worldcat.org/oclc/1054198087. 
  2. "PK Thresia: The Forgotten Story of India's First Woman Chief Engineer". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-09-10. பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.
  3. Unstoppable : 75 stories of trailblazing Indian women. https://www.worldcat.org/oclc/1085964222. 
  4. Gogoi, Angarika (2019-09-10). "PK Thresia: The Forgotten Story of India's First Woman Chief Engineer". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-19.
  5. 5.0 5.1 "Women Engineers of CEG". AACEG (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-10-30. பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.
  6. mbcet (2017-07-09). "P.K. Thressia: India's First Woman Chief Engineer". Engineering, Science & Technology Resources Portal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._திரேசியா&oldid=3925376" இலிருந்து மீள்விக்கப்பட்டது