பி. காயத்ரி கிருட்டிணன்

பி. காயத்ரி கிருட்டிணன் (B. Gayathri Krishnan) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருவாரூர் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக 2021 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இவர் பத்தாம் வகுப்பு வரை திருவனந்தபுரத்திலுள்ள நிர்மலா பவன் ஆங்கில வழி மேல்நிலைப் பள்ளியிலும் மேல்நிலைக் கல்வியை திருவனந்தபுரத்தின் மையப்பகுதியான பூஜாப்புராவிலுள்ள புனித மேரி குடியிருப்பு மத்தியப்பள்ளியிலும் கல்வி கற்றார். கணிப்பொறி அறிவியல் பாடத்திலான பொறியியல் பட்டத்தை திருவனந்தபுரத்திலுள்ள மார் பசேலியோசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் படித்து பெற்றார். திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிற்குச் சென்ற இவர் ஒரு குழந்தைக்குத் தாயான பின்னர்தான் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு தயாரிக்கத் தொடங்கினார்.[1]
தனது முதல் முயற்சியிலேயே அனைத்திந்திய அளவில் 433 ஆவது இடம்பிடித்து இந்திய ஆட்சிப்பணி தேர்வில் காயத்ரி கிருட்டிணன் வெற்றி பெற்றார்.[2] தன்னுடைய இரண்டாவது முயற்சியில் 37 ஆவது இடத்தைப் பிடித்தார். இந்திய ஆட்சிப் பணியின் 2013 ஆம் ஆண்டு தொகுதி நபர்களில் ஒருவராக இவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் நிலையில் பொள்ளாச்சி நகரத்தில் துணை ஆட்சியராக பணி நியமனம் செய்யப்பட்டார்.[3]மக்களிடம் நெருங்கிப் பழகினார். சாலை அமைக்கும் திட்டத்திற்காக மரங்களை வெட்டாமல் அப்படியே இடமற்றம் செய்யும் முறையை ஊக்குவித்தார். பின்னர் கோவையில் வணிக வரித்துறையில் (மாநில வரிகள்) மாவட்ட இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். மாவட்ட இணை ஆணையராகவும் இவர் கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டார். தற்போது மாறுதலின் பேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியராகத் தொடர்ந்து பணியாற்றுகிறார்.
அரசு அதிகாரிகள் வாரத்திற்கு ஒருமுறை பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபாடு தவிர்க்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படும் என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஓர் அறிக்கையில் கூறினார். இதை நடைமுறைப்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருட்டிணன் ஒருநாள் தனது மிதிவண்டியை மிதித்தவாறு ஆட்சியர் அலுவலகம் வந்தார். வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ இதேபோன்று பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் எரிபொருள் இல்லாத வாகனம் மற்றும் பொதுபோக்குவரத்தை பயன்படுத்துமாறு வேண்டுகோளும் விடுத்தார்.[4]
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருட்டிணன் தனது துடிப்பான செயல்பாடுகள் மூலம் பல்வேறு வகையான மக்களும் நன்கு அறிந்தவராக செயல்பட்டு வருகிறார்.[5] [6] [7][8] தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய வெள்ளிவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றபோது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருட்டிணனுக்கு மனித உரிமை விருது வழங்கி சிறப்பித்தார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்?". Indian Express Tamil. Retrieved 2022-09-17.
- ↑ "IAS Gayathri Krishnan Biography: Checkout Her Wiki, UPSC Rank and Current Posting". UPSC Pathshala (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-06-18. Retrieved 2022-09-17.
- ↑ "'Look for long-term solutions to problems'". The Hindu (in Indian English). 2018-12-19. Retrieved 2022-09-17.
- ↑ "gayathrikrishnanias travelled by bicycle - தமிழ் News". IndiaGlitz.com. 2021-12-23. Retrieved 2022-09-17.
- ↑ "திருவாரூரில் முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை துவங்கிவைத்த ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்!". www.toptamilnews.com. 2022-09-16. Retrieved 2022-11-26.
- ↑ "திருவாரூர் மாவட்ட கல்லூரி மாணவ - மாணவிகளே... இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க!". News18 Tamil. 2022-11-16. Retrieved 2022-11-26.
- ↑ ராமகிருஷ்ணன், கு. "14 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து; திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வில் அதிரடி!". https://www.vikatan.com/. Retrieved 2022-11-26.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ மலர், மாலை (2022-08-15). "தேசியக்கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஏற்பு". www.maalaimalar.com. Retrieved 2022-11-26.
- ↑ "திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருட்டிண". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2022/aug/06/stalins-speech-at-tamil-nadu-state-human-rights-commission-silver-ceremony-3893816.html. பார்த்த நாள்: 26 November 2022.