பி. கல்யாணசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. கல்யாணசுந்தரம் என்பார் கேரளாவின் சார்பாகவும் தமிழ்நாட்டின் சார்பாகவும் செயல்பட்ட ஒரு முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர். பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனுக்கான தேர்வு வாரியராகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் இயக்குனராகவும் பணிபுரிந்தார்.

வாழ்க்கையும் பணியும்[தொகு]

கல்யாணசுந்தரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் ஆகஸ்ட் 12, 1947 அன்று பிறந்தார். 1966/67 காலகட்டத்தில் கேரளாவின் சார்பாக முதன்முதலில் கிரிக்கெட் விளையாடிய வலது கை வேகப் பந்து வீச்சாளர் ஆவார். தனது மூன்றாவது முதல்தர கிரிக்கெட் ஆட்டத்தில் ஹைதராபாதிற்கு எதிரான போட்டியில் 4/49 மற்றும் 6/58 புள்ளிவிவரங்களுடன் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.[1] இவ்வெற்றியினைத் தொடர்ந்து இரு பருவங்களுக்குப் பிறகு தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டின் சார்பாக விளையாடத் தொடங்கி தொடர்ந்து 10 ஆண்டுகள் விளையாடினார். 1972-73 ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணியின் சார்பாக விளையாடி இரண்டாம் இடத்தைப் பிடித்ததில் இவரின் பங்கு பெரும் பகுதியாகும். பாம்பேவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் எடுத்தார், ரஞ்சிக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் எடுக்க முதல் பந்து வீச்சாளர் இவர் ஆவார். இவர் 51 முதல்தர ஆட்டங்கள் விளையாடி சராசரியாக 20 விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தம் 147 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.[2]

தொடர் கிரிக்கெட் வீரராக திகழ்ந்தபின், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழுவில் இருந்தார். 2009 ஆம் ஆண்டில் மூத்த அணியின் தேர்வுக்குழுவின் தலைவராக ஆகுமுன்னர், 17 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட்டரின் தேர்விலும், 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டரின் தேர்விலும் இவர் தலைவராக பணிபுரிந்தார். இவர் வகித்த பதவிக்கு 2014 ஆம் ஆண்டில் ஸ்ரீதரன் சரத் மாற்றப்பட்டார்.[3] 2015 ஆம் ஆண்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.[4] 2009 மற்றும் 2013 க்கு இடையில், அவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆட்ட நடுவராவார்.[5]

பி. கல்யாணசுந்தரம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பாலசுப்ரமணியம் கல்யாணசுந்தரம்
பிறப்பு12 ஆகத்து 1947 (1947-08-12) (அகவை 72)
கும்பகோணம், Tamil Nadu, India
பட்டப்பெயர்Kalli[6]
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை medium-fast
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1966/67–1967/68கேரளா
1968/69–1977/78தமிழ்நாடு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் தர
ஆட்டங்கள் 51
ஓட்டங்கள் 337
மட்டையாட்ட சராசரி 8.64
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 31*
வீசிய பந்துகள் 6,066
வீழ்த்தல்கள் 147
பந்துவீச்சு சராசரி 20.09
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
7
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1
சிறந்த பந்துவீச்சு 6/47
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15/–
மூலம்: ESPNcricinfo, 1 March 2016

மேற்கோள்[தொகு]

Frederick, Prince (17 June 2013). "Pitching for cricket". The Hindu. Retrieved 1 March 2016. Jump up ^ "Kalyanasundaram". CricketArchive. Retrieved 1 March 2016. (Subscription required (help)).

வெளி இணைப்புக்கள்[தொகு]

B. Kalyanasundaram at ESPNcricinfo B. Kalyanasundaram at CricketArchive

உசாத்துணை[தொகு]

https://en.wikipedia.org/wiki/B._Kalyanasundaram

  1. "Hyderabad v Kerala in 1966/67". CricketArchive. Retrieved 1 March 2016.
  2. Kalyanasundaram". CricketArchive. Retrieved 1 March 2016.
  3. "Sharath set to take over from Kalyanasundaram". The Hindu. 3 July 2014. Retrieved 1 March 2016
  4. "Lists of matches and detailed statistics for Kalyanasundaram". CricketArchive. Retrieved 1 March 2016
  5. "Lists of matches and detailed statistics for Kalyanasundaram". CricketArchive. Retrieved 1 March 2016.
  6. "Pitching for cricket". The Hindu (17 June 2013). பார்த்த நாள் 1 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கல்யாணசுந்தரம்&oldid=2938222" இருந்து மீள்விக்கப்பட்டது