உள்ளடக்கத்துக்குச் செல்

பி. ஏ. சுப்பையா பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. ஏ. சுப்பையா பிள்ளை
1940களில் சுப்பையா பிள்ளை
பிறப்பு(1895-02-04)4 பெப்ரவரி 1895
இறப்புதெரியவில்லை
பணிநாடக, திரைப்பட நடிகர்

பி. ஏ. சுப்பையா பிள்ளை (பிறப்பு: பெப்ரவரி 4, 1895) தமிழ்நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

சுப்பையா பிள்ளை 1895 பெப்ரவரி 4 இல் பிறந்தவர்.[1] பழம்பெரும் நடிகர் ராஜபார்ட் கோவிந்தசாமிப் பிள்ளையின் வேலையாளராகப் பணியாற்ற ஆரம்பித்து[1] தமது 16வது வயதில் நாடகங்களில் நடிக்கலானார். இந்தியாவிலும், இலங்கையிலும் பல நாடகங்களில் பல வேடங்களில் நடித்துள்ளார்.[2]

நாடக நாட்களில் என். எஸ். கிருஷ்ணனுடன் சேர்ந்து நடித்துள்ளார். அவர் மூலமாகவே திரைப்படங்களிலும் நுழைந்தார். முதன் முதலில் 1940 இல் வெளியான நவீன விக்ரமாதித்தன் திரைப்படத்தில் காளி கோவில் பூசாரியாக நடித்தார். அடுத்தடுத்த படங்களில் தந்தை வேடங்களே இவரைத் தேடி வந்தன. இழந்த காதல், இரு நண்பர்கள், பூலோக ரம்பை, குமாஸ்தாவின் பெண் ஆகிய படங்களில் தந்தையாக நடித்தார். தொடர்ந்து அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் முஸ்தபா பாத்திரத்திலும், ஆர்யமாலாவில் மலையாள பகவதி வேடத்திலும் நடித்தார்.[2]

ஜெமினி ஸ்டூடியோவில் நிரந்தர சம்பள நடிகராக சேர்ந்து மங்கம்மா சபதம் படத்தில் மங்கம்மாவின் தந்தையாக நடித்து பெரும் பாராட்டைப் பெற்றார். பின்னர் ஜெமினியின் கண்ணம்மா என் காதலியில் நாட்டு வைத்தியராகவும், மிஸ் மாலினியில் புஷ்பவல்லியின் தந்தையாகவும் நடித்தார். ஜெமினியின் சந்திரலேகாவில் டி. ஆர். ராஜகுமாரியின் தந்தையாக நடித்தார்.[2]

1949-இல் வெளிவந்த ஏவிஎம்மின் வாழ்க்கை திரைப்படத்தில் எஸ். ஆர். ஜானகியின் கணவராகவும், எம். எஸ். திரௌபதியின் தந்தையாகவும் வேலாயுதன் என்ற பாத்திரத்தில் நடித்தார்.[3]

விருதுகள்

[தொகு]
  • ராஜபார்ட் கோவிந்தசாமிப் பிள்ளையிடம் இருந்து "ராஜவிகடன்" பட்டம் பெற்றார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "நட்சத்திரம் பிறந்தநாள்". குண்டூசி. பெப்ரவரி 1951. 
  2. 2.0 2.1 2.2 2.3 ரவி (மே 1948). "இம்மாத நட்சத்திரம்: பி. ஏ. சுப்பையா பிள்ளை". பேசும் படம்: பக். 50-51. 
  3. "PA.SUBBAIAH PILLAI". Antru Kanda Mugam. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஏ._சுப்பையா_பிள்ளை&oldid=3766253" இலிருந்து மீள்விக்கப்பட்டது