பி. எஸ். வினோத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. எஸ். வினோத்
பிறப்புஆந்திரப் பிரதேசம்
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைத் திரைப்படக் கல்லூரி
பணிஒளிப்பதிவாளர்

பி. எஸ். வினோத் (P. S. Vinod) தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் படங்களில் பணிபுரியும் இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். [1] [2] இவர் 2000-த்தில் தமிழில் வெளியான ரிதம் என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். பின்னர் பல இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் பணிபுரிந்தார்.

முசாஃபிர் (2004), மை வைஃப்ஸ் மர்டர் (2005), டீஸ் மார் கான் (2010), பஞ்சா (2011), மனம் (2014), சோக்கடே சின்னி நயனா (2015) ஊபிரி (2015) மற்றும் ஹலோ (2017) ஆகியவை இவரது குறிப்பிடத்தக்கப் படங்களாகும்.

தொழில்[தொகு]

இந்தியாவின் பெரும்பாலான விளம்பரங்களை இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னைத் திரைப்படக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, மூத்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தார். அதன்பிறகு அடுத்தடுத்த இரண்டு தமிழ் படங்களான ரிதம் மற்றும் அப்பு ஆகியத் திரைப்படங்களில் இயக்குனர் வசந்திடம் பணி புரிந்தார். அதைத் தொடர்ந்து பாலிவுட்டில் பிரபலமான சில படங்களில் பணிபுரிந்தார். இவரது இரண்டாவது இந்தித் திரைப்படமான முசாஃபிர் இவருக்கு ஜீ திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரையைப் பெற்றது. ஸ்ட்ரைக்கர் (2010) படத்தில் இவரது பணி விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. [3]

நடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறிய ஃபராஹ் கான் தனது மூன்றாவது இயக்கமான தீஸ் மார் கான் படத்திற்கு இவரை ஒளிப்பதிவு செய்ய வைத்தார். இத்திரைப்படத்தில் வினோத்தின் பணி விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. 2010 [4] ஆண்டின் பாலிவுட் படங்களில் ஒன்றாக ரெடிப்.காம் தேர்வு செய்தது. தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான கிராண்ட் ஜூரி விருதை வென்ற கேங்ஸ்டர் திரைப்படமான ஆரண்ய காண்டம், [5] மற்றும் காதல் நகைச்சுவை காதல் 2 கல்யாணம் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். முதல் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விஜய் விருதை வென்றார். நடிகர் ஆர்யாவின் சகோதரர் சத்யாவின் அறிமுகமானது மிகவும் தாமதமாகி 2012-இல் வெளியிட திட்டமிடப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. "Rhythm within the dark". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-01-20. Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2011-03-12.
  2. """It's about how well you translate the script onto the screen""". Archived from the original on 2021-04-15. பார்க்கப்பட்ட நாள் 2022-09-14.
  3. "Review: Striker is Siddharth's game - Rediff.com Movies". Movies.rediff.com. 2010-02-05. பார்க்கப்பட்ட நாள் 2011-03-12.
  4. "The Most Good Looking Movies of 2010 - Rediff.com Movies". Rediff.com. 2010-12-23. பார்க்கப்பட்ட நாள் 2011-03-12.
  5. "Thiagarajan Kumararaja – the promising debutant director". Kolly Talk. Archived from the original on 2011-06-16. பார்க்கப்பட்ட நாள் 2011-03-12.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._வினோத்&oldid=3679048" இலிருந்து மீள்விக்கப்பட்டது